உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 19, 2012

இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

விருத்தாசலம்:
 
        இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விருத்தாசலத்தில் கல்லூரி மாணவர்கள் சனிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து மறியலில் ஈடுபட்டனர். 
 
       இதேபோல், திராவிடர் மாணவர் கழகத்தினர் ராஜபட்சவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் சிங்கள ராணுவம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது தொடர்பாக, அமெரிக்கா அரசு ஐ.நா. மன்றத்தில் இலங்கை அரசின் மீது மனித உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
 
        பின்னர், கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.திராவிடர் மாணவர் கழகம்: விருத்தாசலம் பாலக்கரையில் திராவிடர் கழக மாணவரணியினர் இந்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை அதிபர் ராஜபட்சவின் உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில மாணவரணி துணைச் செயலர் த.சீ.இளந்திரையன் தலைமை ஏற்றார்.மாவட்ட துணைச் செயலர் முத்து.கதிரவன் கண்டன உரையாற்றினார். மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ப.க. செயலர் செழியன், நகரத் தலைவர் சுப்பிரமணியன், ஒன்றியத் தலைவர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 

Read more »

கடலூர் பாடலேசுவரர் தொழில்நுட்பக் கல்லூரியில் எ ய்ட்ஸ் நோய் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி

கடலூர் : 
 
         கடலூர் பாடலேசுவரர் தொழில்நுட்பக் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி நிறுவனத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். முதல்வர் ரமேஷ் பாபு வரவேற்றார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட மேலாளர் கலைமதி முன்னிலை வகித்தார். செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் கதிரவன், கல்லூரி துணை முதல்வர் ராஜ்குமார், நிர்வாக அதிகாரி டைட்டஸ் டேவிட் ஆகியோர் பேசினர். செந்தில்முருகன், ரவி, சண்முகம் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடி சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
 
 
 
 
 
 

Read more »

கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா

கடலூர் : 

        கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். மகளிர் திட்ட கண்காணிப்பாளர் மனோகரன் வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். உதவி திட்ட அலுவலர்கள் மாலதி, காஞ்சனா, தேவதாஸ் பொன்னையா சிறப்புரையாற்றினர். கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர். உதவி திட்ட அலுவலர் ஜெயராமன் நன்றி கூறினார். 










Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior