உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 17, 2012

கடலூரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம்

கடலூரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று வாயிற் கூட்டம் நடத்தினர்.

>கடலூரில் இரண்டு மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஊதியக்குழு முரண்பாடுகளை நீக்க வேண்டும். மேல்நிலைக் கல்விக்கென தனி இயக்குனரகம் ஏற்படுத்த வேண்டும். பதவி உயர்வு வழங்க தடையாக உள்ள அரசாணை எண்.720ஐ திருத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை விடைத்தாள் திருத்தும் மையத்தின் முன் வாயிற்கூட்டம் நடத்தினர். கடலூர், மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடந்த வாயிற் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தரணிதரன் தலைமை தாங்கினார்.மாவட்டச் செயலர் செல்வராசு வரவேற்றார். பொதுச் செயலர் கனகராசு கோரிக்கைளை வலியுறுத்திப் பேசினார். மாவட்ட பொருளாளர் ஜெகத்ரட்சகன் நன்றி கூறினார்.

Read more »

கடலூர் சில்வர் பீச்சில் தீயணைப்பு கருவிகள் குறித்த கண்காட்சி

கடலூர் :

கடலூரில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் தீயணைப்பு கருவிகள் குறித்த கண்காட்சி நடந்தது. கடலூர் கோட்ட அலுவலர் குமாரசாமி துவக்கி வைத்தார். கண்காட்சியில் தீயணைப்பு மீட்பு மற்றும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் போது பயன்படுத்தக் கூடிய ஹைட்ராலிக், மூச்சு கருவி, புகை போக்கி உட்பட பல்வேறு விதமான கருவிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும், கண்ணாடி விரியன், மண்ணுளி மற்றும் நல்ல பாம்புகளும் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை பார்வையிட வந்த பொதுமக்களுக்கு தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிலைய அலுவலர்கள் கடலூர் வீரபாகு, சிப்காட் கருணாகரன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ராஜசேகரன், நாகராஜ், திருநாவுக்கரசு, பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.

Read more »

கடலூர் நகராட்சி சார்பில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் 16 டம்பர் பிளேசர் குப்பைத் தொட்டிகள்

கடலூர் :



கடலூர் நகர பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் 16 டம்பர் பிளேசர் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளது.>கடலூர் நகரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளால் நகரமே சுகாதார சீர்கேடு அடைந்து வருகிறது. அதனையொட்டி நகரை தூய்மையாக வைத்திருக்கும் பொருட்டு, நகராட்சியில் உள்ள சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகரின் அதிக அளவில் குப்பைகள் சேரும் பகுதிகளில் நவீன ரக "டம்பர் பிளேசர்' குப்பைத் தொட்டிகள் வைத்து அதன் மூலம் குப்பைகளை சேகரித்து பிரத்யேக லாரியைக் கொண்டு குப்பைகளை அள்ளி வந்தனர். இதற்காக கடந்த ஆட்சியில் பல லட்சம் ரூபாய் செலவில் 16 டம்பர் பிளேசர் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டது. >இந்நிலையில் அப்போது வாங்கிய "டம்பர் பிளேசர்' குப்பை தொட்டிகளை கையாளும் லாரி பழுதடைந்ததால், அப்போது வாங்கிய "டம்பர் பிளேசர்' குப்பை தொட்டிகள் பயனின்றி பாபு கலையரங்கில் வைக்கப்பட்டுள்ளது.< >இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி நிர்வாகம், நகரில் குப்பைகளை அகற்றுவதற்காக 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அனைத்து நவீன வசதிகள் கொண்ட புதியரக "டம்பர் பிளேசர்' குப்பை தொட்டிகள் மற்றும் லாரி வாங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தற்போது 9 லட்சம் ரூபாய் மதிப்பில் 16 "டம்பர் பிளேசர்' குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டு பாபு கலையரங்கத்தில் வைக்கப் பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக லாரிக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள் ளது. இந்த லாரி வந்ததும், இந்த குப்பைத் தொட்டிகள் அனைத்தும் முக்கிய இடங்களிலும் வைக்கப்பட உள்ளது.









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior