உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 18, 2011

புகையில் புகைகிறது கடலூர் நகரம் : புற்றுநோய் ஏற்படும் அபாயம்

கடலூர் கெடிலம் ஆற்றின் கரையில் எரிக்கப்படும் குப்பைகள்.
கடலூர்:

            குப்பைகளை அகற்ற எந்தத் திட்டமும் இல்லாமல், கொளுத்தப்படும் குப்பைகளால் கடலூர் நகரம் சுகாதாரக் கேட்டில் புதையுண்டு வருகிறது. சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்டது கடலூர் நகராட்சி.

              நகராட்சியின் அருகில் உள்ள சில கிராமங்களை நகராட்சியுடன் இணைத்து மாநகராட்சியாக்கும் முயற்சி ஓராண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்டு, நின்று போயிற்று. சுகாதாரம் கெட்டுச் சீர்குலைந்து கிடக்கும் இந்த நகராட்சியுடன் இணையத் தயாரில்லை என்று, சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் கடலூர் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருப்பது, நகர மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தி வருகிறது. 

               மக்கும் குப்பை மக்காத குப்பை என்றெல்லாம் அவ்வப்போது பேச்சு அடிபடுகிறது. ஆனால் குப்பைகளை அகற்றுவதற்கு, நவீன அறிவியல் பூர்வமான திட்டங்கள் எதுவும், கடலூர் நகராட்சியிடம் இல்லை என்பதுதான் கடலூர் மக்களின் துரதிருஷ்டம். கடந்த 5 ஆண்டுகளில் இந்நகராட்சியின் 45 வார்டு உறுப்பினர்களும், அவர்களின் தலைவரும் அடிக்கடி கூடிக் கலைந்தார்களே தவிர, மக்களின் சுகாதாரம் பற்றியோ, குப்பைகளை நவீன முறையில் அகற்றுவது குறித்தோ, சற்றேனும் சிந்திதார்களா என்றால் இல்லை என்பதுதான் கடலூர் நகர மக்களின் குற்றச்சாட்டு. 

                 குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து, உரமாக மாற்றும் திட்டத்துக்கு, குண்டுசாலையிலும், கடலூர் முதுநகரிலும் சுமார் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட திடக்கழிவு மேலாண்மை கட்டடங்கள், கட்டியநாள் முதல் செயலிழந்து கிடக்கிறது. கம்மியம்பேட்டையிலும், பச்சையாங்குப்பத்திலும் நகராட்சி குப்பை கொட்டும் இடங்கள், மேற்கொண்டு குப்பை கொட்ட இடமில்லாத அளவுக்கு, நிரம்பி வழிந்துகொண்டு இருக்கிறது. குப்பைகளை அகற்றத் திட்டம் ஏதும் இல்லாததால், இந்த இரு இடங்களிலும், சுமார் 1 லட்சம் டன் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. 

               இந்நிலையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட 8 வார்டுகள் உள்ளிட்ட 45 வார்டுகளிலும், குப்பைகள் அகற்றும் பணிக்கு 200க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் இருந்தும், துப்புரவுப் பணி முறையாக நடைபெறவில்லை. பிரதானச் சாலைகளில் குப்பைகளை ஓரளவுக்கு அகற்றுகிறார்களே தவிர, மற்றத் தெருக்களில் அகற்றுவதே இல்லை. தொழிலாளர்கள் திடீரென்று ஞானோதயம் பெற்றவர்கள்போல் சில தெருக்களுக்கு வருவதும், குப்பைகளை கூட்டி, அங்கேயே சில இடங்களில் போட்டு தீவைத்து எரிப்பதும், கடலூரில் வாடிக்கையான செயல். கடலூர் நகரில் ரயில்வே மேம்பாலத்தின் இரு முனைகளிலும் டயர்களைப் போட்டுக் கொளுத்துவதால் உருவாகும் புகை, வானில் 100 மீட்டர் வரை உயர்ந்து நிற்பதை அனுதினமும் காணமுடியும். 

             அதே போல் கெடிலம் மற்றும் பெண்ணை ஆற்றங்கரைகளில், நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி அங்கேயே எரிப்பதும் அன்றாட நிகழ்வாயிற்று. இதனால் காலை நேரங்களில் கடலூர் நகரமே புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. பல தெருக்களில் காலை முதல் மாலை வரை குப்பைகள் எரிந்து கொண்டே இருக்கின்றன. தெருக்கள் எப்போதும் புகை மண்டலமாகக் காட்சி அளிக்கின்றன. தெருக்களில் நகர மக்கள் வைத்து வளர்க்கும் மரங்கள் பலவும் இதனால் எரிந்து பட்டுப்போகிறது என்கிறார், நகர அனைத்துக் குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன்.

                 குப்பைகளை அகற்ற நவீன, அறிவியல் பூர்வமான திட்டமோ அதுபற்றிய சிந்தனையோ கடலூர் நகராட்சியிடம் இல்லாததே இதற்குக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டுகிறார். 

குப்பைகளை எரிப்பது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.மீரா கூறுகையில், 

             டயர்களைக் கொளுத்துவதால் ஏற்படும் டயாக்ஸின் என்ற நச்சுப் புகையை சுவாசிப்போருக்கு, புற்றுநோய், ஆண்களுக்கு மலட்டுத் தன்மை, நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரும். குப்பைகளை எரிக்கக் கூடாது என்று சட்டம் உள்ளது. பெரும்பாலான குப்பைகள் பாலித்தீன் பொருள்கள் கலந்தவை. அவற்றை எரிப்பதால், சுற்றுச்சூழல் மாசு படுவதுடன், மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வரும் என்றார் அவர்.










Read more »

நெய்வேலியில் 3 ஜி சேவை

கடலூர்:
             பி.எஸ்.என்.எல். அகண்ட அலைவரிசை மற்றும் தரைவழி தொலைபேசிச் சேவையில் சிறப்புப் சலுகைகளை பி.எஸ்.என்.எல். கடலூர் மாவட்ட (விழுப்புரம், கடலூர் வருவாய் மாவட்டங்கள்) பொது மேலாளர் மார்ஷல் ஆன்டனி லியோ சனிக்கிழமை அறிவித்தார். 
பொதுமேலாளர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
             சிம்கார்டு பயன்படுத்தி பேசும் லேண்ட் லைன் தொலைபேசியை பி.எஸ்.என்.எல். அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஜி.எஸ்.எம். வகையைச் சேர்ந்த நிரந்தர ஒயர்லெஸ் தொலைபேசி ஆகும். வாடிக்கையாளர்கள் இதை ரூ. 1,450 விலையில் வாங்கிப் பயன்படுத்தலாம். அகண்ட அலைவரிசைச் சேவையில் சிறப்புக் கட்டண திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. 
             2 ஆண்டுக்கான மாதாந்திரக் கட்டணத்தை முன்னரே செலுத்தினால் 3 ஆண்டுக்கான சேவை கிடைக்கும். இதன்மூலம் ஓராண்டு அகண்ட அலைவரிசை மாதாந்திரக் கட்டணம் இலவசம்.3 ஆண்டு சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டை பயன்படுத்தும் லேண்ட் லைன் தொலைபேசி இலவசம். 18 மாதத்துக்கான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி, 24 மாதத்துக்கான அகண்ட அலைவரிசை சேவையைப் பெறலாம். செல்போன்களுக்கு இடையே குறைந்த கட்டணத்தில் பேசும் ஃபிரண்டஸ் அண்ட் ஃபேமிலி திட்டம் லேண்ட் லைன் தொலைபேசிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
               கட்டணம் நிமிடத்துக்கு இரவில் 10 காசு, பகலில் 20 காசு. இதுகுறித்த விவரங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தில் கிடைக்கும். புதிய லேண்ட் லைன் இணைப்பு பெறுவோருக்கு, சொந்த தொலைபேசிக் கருவி வைத்துக் கொண்டால், ரூ. 250 அமைப்புக் கட்டணம் இல்லை. வழக்கமான இலவச அழைப்புகளுடன் கூடுதலாக 300 அழைப்புகள் இலவசம்.
              வைமாக்ஸ் எனப்படும் வயர்லெஸ் இண்டர்நெட் சேவைக்கான கோபுரங்கள் கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை, திருநாவலூர், திருக்கோயிலூர் மற்றும் திருவெண்ணெய்நல்லுரில் உள்ளன. மேலும் 20 ஊர்களில் அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது. 3 ஜி சேவை விரைவில் நெய்வேலிக்கு கிடைக்கும் என்றார் மார்ஷல் ஆன்டனி லியோ.

Read more »

வாட் வரி உயர்வின் காரணமாக செல்போன் விலை ரூ. 100 முதல் ரூ. 2000 வரை உயர்வு

              வாட் வரி உயர்வின் காரணமாக செல்போன்கள் விலை ரூ.100 முதல் ரூ. 2000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

                 தமிழக அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்கில் ஜூலை 12-ம் தேதி முதல் இந்த விற்பனை வரி விகிதங்கள் அமலுக்கு வந்தன. இதனால் 4 சதவீத மதிப்புகூட்டு வரி பட்டியலில் இருந்த செல்போன்களுக்கான வரி 14.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் சந்தையில் செல்போன்களின் விலை அதிரடியான விலை ஏற்றத்தைக் கண்டுள்ளன.

               அனைவரும் வாங்கும் வகையில் இருந்த நோக்கியாவின் ஆரம்பக்கட்ட மாடலின் விலை கடந்த வாரம் ரூ.960-ல் இருந்து புதிய வரிவிதிப்பின் காரணமாக ரூ.1058-ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், நோக்கியாவின் விலை உயர்ந்த மாடலான ஈ-7 செல்போன் கடந்த வாரம் ரூ.25,471-ல் இருந்து ரூ.27,700-ஆக உயர்ந்துள்ளது.

இந்த மதிப்புகூட்டு வரி விகிதத்தால் செல்போன் விற்பனை சந்தையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து மயிலாப்பூரில் உள்ள செல்போன் விற்பனையாளர் ஓருவர் கூறியது:"

               விற்பனை வரி உயர்வினால் நடுத்தர வர்க்கத்தினர் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பலர் "டச் போன்களை' விரும்புகின்றனர், ஆனால் சாம்சங் நிறுவனத்தின் குறைந்தப்பட்ச டச் போன் கடந்த வாரம் ரூ.3850-ல் இருந்து ரூ.4300-ஆக விலை உயர்ந்துள்ளது. சாம்சங் அண்மையில் அறிமுகப்படுத்திய விலை உயர்ந்த "காலக்ஸியின்' விலை ரூ.29,900-ல் இருந்து ரூ.32,800-ஆக உயர்ந்தது. டச் போன்களில் சுமார் 23 வகையான மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ள சாம்சங்கின் விற்பனை, வரி விதிப்பினால் ஓரளவு பாதிக்கப்பட கூடும்' என்றார் அவர்.

                தொழிலதிபர்கள், மேலதிகாரிகள் அதிகமாகப் பயன்படுத்தும் "பிளாக் பெரியின்' ஆரம்பக்கட்ட விலை ரூ.9,610-ல் இருந்து ரூ.11,110-ஆகவும், அதிகபட்சம் ரூ.28,292 விலை கொண்ட மாடல் ரூ.31,092-ஆகவும் உயர்ந்துள்ளது. இவ் வகையான போன்களை மேல்தட்டு மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் பிளாக் பெரியின் விற்பனையில் பாதிப்பு ஏற்படாது என சென்னையில் உள்ள விற்பனையாளர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போது, பல முன்னணி செல்போன் விற்பனையாளர்கள் ஆடி தள்ளுபடி அறிவித்துள்ளதால் விற்பனையில் மந்த நிலை ஏதும் இருக்காது என ஒரு தரப்பினர் கூறினர்.

இது குறித்து அண்ணா நகரைச் சேர்ந்த செல்போன் உபயோகிப்பாளர் ரித்தீஷ் கூறியது:

            இன்றைய உலகில் செல்போன்கள் அத்தியாவசியப் பொருளாக ஆகிவிட்டது. எனவே பெட்ரோல், டீசல் போல எத்தனை முறை விலை ஏற்றினாலும் மக்களின் செல்போன் உபயோகம் குறையாது. இதனால் செல்போன் மீது மதிப்புகூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தியதில் தவறில்லை' என்றார் அவர்.





Read more »

சிதம்பரத்தில் தமிழ்ப் பேரவை சார்பில் தெய்வச் சேக்கிழார் திருவிழா

சிதம்பரம்:

             சிதம்பரத்தில் தமிழ்ப் பேரவை சார்பில் தெய்வச் சேக்கிழார் திருவிழா வருகிற ஜூலை 22-ம் தேதி தொடங்கி 3 நாள்கள் கீழவீதி ராசி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

           3 நாள்களும் திருமுறைப் பண்ணிசை, ஆன்மிக பேரூரை, இலக்கியப் பேரூரை, பட்டிமன்றம், கருத்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

ஜூலை 22-ம் தேதி: 

              மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார். காசி மடாதிபதி முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் ஆன்மிகப் பேரூரையாற்றுகிறார். ஆனந்த நடராஜ தீட்சிதர் வாழ்த்துரையாற்றுகிறார். கோவை சிவப்பிராச சுவாமிகள் இலக்கியப் பேரூரை, த.அகரமுதல்வரன் நடுவராக கொண்ட சேக்கிழார் பாடிய நாயன்மார்கள் வரலாறு சமூக வாழ்வை ஏற்கத்தக்கனவா? எல்லை கடந்தனவா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெறுகிறது.

ஜூலை 23-ம் தேதி: 

             சிவத்திரு சோ.சத்தியசீலனார் ஆன்மிகப் பேரூரையாற்றுகிறார். தமிழ்த்திரு நாஞ்சில்சம்பத் இலக்கியப் பேரூரையாற்றுகிறார்.

ஜூலை 24-ம் தேதி: 

          திருத்தணி என்.சுவாமிநாதனின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி, சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்துரையாற்றுகிறார்.மத்திய இணைஅமைச்சர் ஜெகத்ரட்சகன் இலக்கியப் பேரூரையாற்றுகிறார். அவ்வை து.நடராஜன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் திருவள்ளுவர் பார்வையில் சேக்கிழார் என்ற தலைப்பில் பேராசிரியர் மு.சிவச்சந்திரனும், இளங்கோவடிகள் பார்வையில் சேக்கிழார் என்ற தலைப்பில் முனைவர் பனசை மூர்த்தியும், கம்பர் பார்வையில் சேக்கிழார் என்ற தலைப்பில் முனைவர் இரா.அன்பழகனும் உரையாற்றுகின்றனர்.

             சிவத்திரு நட.ஜெயராமன் நன்றி கூறுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்ப் பேரவைத் தலைவர் ராம.ஆதிமூலம் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.






Read more »

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.எஸ்சி. (விவசாயம்) மாணவர் தேர்வு பட்டியல்

           அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2011-2012) பி.இ., பி.எஸ்சி. (விவசாயம்) படிப்பில் சேருவதற்கான மாணவர்கள் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  

பி.இ. படிப்பில் சேருவதற்கான மாணவர்கள்:  

அனைத்துப் பிரிவினர் (ஓ.சி.)  

             1120026 1120040 1120233 1120257 1120652 1120683 1120913  1121001 1121049 1121055 1121057 1121152 1121251 1121463  1121502 1121522 1121544 1121560 1121564 1121599 1121646  1121675 1121683 1121738 1130008 1130010 1130049 1130050  1130055 1130063 1130114 1130119 1130158 1130200 1130256  1130257 1130425 1130505 1130510 1130513 1130516 1130571  1130578 1130598 1130618 1130629 1130669 1130677 1130739  1130758 1130807 1130810 1130851 1131264 1131266 1131267  1131269 1131271 1131273 1131274 1131279 1131280 1131281  1131282 1131285 1131287 1131289 1131290 1131292 1131294  1131295 1131296 1131297 1131300 1131301 1131302 1131304  1131306 1131308 1131311 1131315 1131316 1131317 1131319  1131320 1131322 1131323 1131325 1131329 1131330 1140002  1140027 1140039 1140052 1140061 1140074 1140082 1140166  1140173 1140179 1140200 1140208 1140213 1140216 1140217  1140224 1140228 1140238 1140252 1140259 1140265 1140270  1140274 1140331 1140357 1140423 1140448 1140525 1140527  1140627 1140671 1140680 1140723 1140795 1140810 1140856  1140858 1141092 1141094 1141096 1141098 1141099 1141103  1141104 1141106 1141107 1141109 1141112 1141113 1141118  1141119 1141120 1141123 1141124 1141128 1141129 1141133  1141134 1141135 1141136 1141137 1141139 1141142 1141144  1141146 1141148 1141151 1141154 1141156 1141157 1141159  1141161 1141162 1141167 1141169 1141170 1141172 1141174  1141179 1141180 1141182 1141185 1141186 1141195 1141196  1141200 1141201 1141203 1141204 1141206 1141207 1141208  1141209 1141210 1141213 1141216 1141221 1141223 1141225  1141227 1141229 1141231 1141232 1141233 1141235 1141236  1141237 1141240 1150013 1150029 1150042 1150043 1150044  1150053 1150058 1150127 1150182 1150183 1150184 1150185  1150186 1150187 1150188 1150189 1150193 1150194 1150195  1150196 1150198  

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.)

               1140004 1140006 1140010 1140016 1140029 1140031 1140049  1140054 1140058 1140065 1140068 1140078 1140083 1140086  1140090 1140093 1140097 1140104 1140106 1140116 1140123  1140131 1140143 1140151 1140163 1140175 1140180 1140181  1140189 1140190 1140207 1140209 1140212 1140220 1140222  1140223 1140225 1140236 1140240 1140241 1140243 1140253  1140256 1140258 1140263 1140268 1140276 1140279 1140283  1140303 1140305 1140320 1140322 1140324 1140330 1140338  1140347 1140352 1140353 1140355 1140446 1140451 1140471  1140475 1140503 1140505 1140506 1140513 1140536 1140607  1140608 1140617 1140628 1140631 1140640 1140655 1140678  1140748 1140776 1140777 1140793 1140813 1140816 1140840  1140843 1140844 1141091 1141093 1141095 1141097 1141100  1141101 1141102 1141105 1141108 1141110 1141111 1141114  1141115 1141116 1141117 1141121 1141122 1141125 1141126  1141127 1141130 1141131 1141132 1141138 1141140 1141141  1141143 1141145 1141147 1141149 1141150 1141152 1141153  1141155 1141158 1141160 1141163 1141164 1141165 1141166  1141168 1141171 1141173 1141175 1141176 1141177 1141178  1141181 1141183 1141184 1141187 1141188 1141189 1141190  1141191 1141192 1141193 1141194 1141197 1141198 1141199  1141202 1141205 1141211 1141212 1141214 1141215 1141217  1141218 1141222 1141224 1141226 1141228 1141230 1141234  1141238 1141239 1141241 1141242 1141243 1141269 1141270  1141271 1141272 1141273 1141274 1141275 1141276 1141277  1141278 1141279 1141280 1141281 1141282 1141283 1141284  1141286 1141287 1141288 1141289 1141290  

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - முஸ்லிம் (பி.சி.எம்.) 

            1141244 1141245 1141246 1141247 1141248 1141249 1141250  1141251 1141252 1141253 1141254 1141255 1141256 1141257  1141258 1141259 1141260 1141261 1141262 1141263 1141264  1141265 1141266 1141267 1141268 

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி.)  

           1130006 1130023 1130024 1130033 1130038 1130039 1130046  1130048 1130051 1130052 1130053 1130054 1130057 1130061  1130067 1130070 1130071 1130073 1130078 1130085 1130087  1130096 1130112 1130113 1130115 1130122 1130125 1130135  1130143 1130156 1130157 1130161 1130165 1130170 1130172  1130181 1130183 1130185 1130186 1130190 1130191 1130197  1130201 1130204 1130210 1130212 1130229 1130251 1130327  1130335 1130338 1130345 1130354 1130399 1130414 1130446  1130501 1130528 1130557 1130580 1130582 1130583 1130602  1130610 1130617 1130630 1130636 1130648 1130678 1130698  1130704 1130707 1130708 1130714 1130761 1130764 1130768  1130783 1130814 1130828 1130831 1130855 1130865 1131261  1131262 1131263 1131265 1131268 1131270 1131272 1131275  1131276 1131277 1131278 1131283 1131284 1131286 1131288  1131291 1131293 1131298 1131299 1131303 1131305 1131307  1131309 1131310 1131312 1131313 1131314 1131318 1131321  1131324 1131326 1131327 1131328 1131331 1131332 1131333  1131334 1131335 1131336 1131337 1131338 1131339 1131340  1131341 1131342 1131343 1131344 1131345 1131346 1131347  1131348 1131349 1131350 1131351 1131352 1131353 1131354  1131355  

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி.) 

             1120001 1120003 1120015 1120068 1120074 1120081 1120089  1120090 1120093 1120094 1120097 1120102 1120112 1120118  1120121 1120122 1120123 1120130 1120139 1120142 1120145  1120146 1120148 1120164 1120170 1120182 1120195 1120230  1120234 1120253 1120266 1120277 1120317 1120318 1120428  1120459 1120472 1120476 1120484 1120500 1120501 1120509  1120589 1120594 1120645 1120657 1120695 1120776 1120812  1120845 1120847 1120859 1120865 1120869 1120872 1120894  1120917 1120936 1120942 1120943 1120952 1120993 1121000  1121063 1121097 1121178 1121188 1121189 1121197 1121203  1121215 1121233 1121246 1121264 1121276 1121290 1121299  1121306 1121322 1121332 1121342 1121347 1121391 1121399  1121407 1121424 1121454 1121465 1121480 1121504 1121509  1121513 1121515 1121517 1121533 1121621 1121670 1121696  1121711 1121721 1121727 1121772 1122361 1122362 1122363  1122364  

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - 

அருந்ததியினர் (எஸ்.சி.ஏ.) 

 1122365 1122366 1122367 1122368 1122369 1122370 1122371  1122372 1122373 1122374 1122375 1122376 1122377 1122378  1122379 1122380 1122381 1122382 1122383 1122384 1122385  

பழங்குடியின வகுப்பினர் (எஸ்.டி.) 

 1110003 1110004 1110031 1110110 1110115 1110118 1110122  

பி.எஸ்சி. (விவசாயம்) படிப்பில் சேருவதற்கான மாணவர்கள்: 

அனைத்துப் பிரிவினர் (ஓ.சி.)  

1110094 1121788 1121844 1121898 1121900 1121998 1122030  1122065 1122075 1122108 1122128 1130394 1130927 1130949  1130952 1131029 1131141 1131192 1131193 1131197 1131225  1131236 1140357 1140358 1140946 1140964 1141026 1141047  1141050 1141053

 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.)  

          1140366 1140367 1140368 1140372 1140373 1140377 1140378  1140382 1140395 1140403 1140404 1140405 1140408 1140411  1140414 1140416 1140476 1140499 1140575 1140868 1140889  1140908 1140965 1141033 1141035 1141285 

 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - முஸ்லிம் (பி.சி.எம்.) 

 1141295 1141297 1141299 

 மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி.) 

 1130258 1130264 1130266 1130268 1130271 1130289 1130295  1130296 1130297 1130298 1130301 1130309 1130370 1130371  1130374 1130433 1130889 1131168 1131226  

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி.) 

 1120353 1120364 1120413 1120414 1120419 1120463 1121792  1121832 1121896 1121955 1122059 1122106 1122138 1122244  

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - அருந்ததியர் (எஸ்.சி.ஏ.)

 1122392 1122394 1122396 


 பழங்குடியின வகுப்பினர் (எஸ்.டி.):

1110096   






Read more »

கடலூர் பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையப் பணி: அமைச்சர் எம்.சி. சம்பத் ஆய்வு

கடலூர்:

         கடலூர் பாதாளச் சாக்கடை திட்டத்துக்காக, ரூ. 10 கோடியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்டமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை, சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆய்வு செய்தார்.  

           கடலூரில் ரூ. 65.14 கோடியில் குடிநீர் வடிகால் வாரியத்தால், 3 ஆண்டுகளுக்கு மேலாக, பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எம்.சி. சம்பத் அமைச்சர் பொறுப்பு ஏற்றதும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் விரைவு படுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லியும் பாதாளச்சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளார். வாரம் தோறும் குறிப்பிட்ட பணிகளை முடிக்கா விட்டால், கான்ட்ராக்டருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்து உள்ளார்.  இத்திட்டத்தில் ரூ. 10 கோடியில் பிரமாண்டமான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், தேவனாம்பட்டினத்தில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளை அமைச்சர் எம்.சி. சம்பத் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

             சுத்திகரிப்பு நிலையப் பணிகள் 86 சதம் முடிவடைந்து இருப்பதாகவும், கடலூரில் இன்னும் 20 ஆண்டுகளில் இருக்கப் போகும் மக்கள் தொகையைக் கணக்கிட்டு அதற்கேற்றார்ப்போல், பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.  இத்திட்டத்தில் 5,702 ஆள் இறங்கு குழிகள் அமைக்கப்பட வேண்டும். இதில் 5,474 குழிகள் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. 7 கழிவு நீர் உந்து நிலையங்களின் பணிகளில் 6 முடிக்கப்பட்டு உள்ளன. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் தேவனாம்பட்டினத்தில் ரூ. 10 கோடியில், 6.6 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வருகிறது என்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 

 பின்னர் அமைச்சர் எம்.சி. சம்பத் கூறுகையில், 

             கடலூர் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படத் தொடங்கியதும், 5 ஆண்டுகள் பராமரிப்புப் பணிகளை குடிநீர் வடிகால் வாரியமே மேற்கொள்ளும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளொன்றுக்கு 12.50 எம்.எல்.டி. கழிவு நீர் சுத்திகரிக்கப்படும். கடலூர் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, 1-11-2011 முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.  பின்னர் வில்வநகர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பை அமைச்சர் சம்பத் பார்வையிட்டார். குடியிருப்பில் பூங்கா மற்றும் இணைப்புச் சாலை அமைத்துக் கொடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரினர். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இணைப்புச் சாலை அமைத்துத் தருவதாக அமைச்சர் தெரிவித்தார்.  

             கடலூர் தேவனாம்பட்டினம் கிராம மக்களும் அமைச்சர் எம்.சி. சம்பத்தை சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்தனர். தேவனாம்பட்டினத்தில் நகராட்சி குடிநீர் குழாய்களின் அருகில், கழிவுநீர் குழாய்கள் செல்வதால், குடிநீரில் சாக்கடை கலக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தனர். இப்பிரச்னைக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு காணுமாறு, நகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.  

             அமைச்சரின் நிகழ்ச்சிகளில் குடிநீர் வாரிய செயற்பொறியாளர் ரகுநாதன், நகராட்சி ஆணையர் இளங்கோவன், பொறியாளர் ரூபன் சுரேஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொ. முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ. கோ. அய்யப்பன், அ.தி.மு.க. தொகுதிச் செயலாளர் சுப்பிரமணியன், நகரச் செயலாளர் குமரன், ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






Read more »

நெல்லிக்குப்பத்தில் மகளிர் பேருந்து இயக்க கலெக்டருக்கு கோரிக்கை

நெல்லிக்குப்பம் : 

         நெல்லிக்குப்பத்தில் இருந்து கடலூர் வரை பள்ளி நேரத்தில் பெண்களுக்கு தனி பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம் இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ் அமைப்பினர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:

            நெல்லிக்குப்பத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயிலவும், பொதுமக்கள் வேலைக்காகவும் கடலூர் செல்ல வேண்டியுள்ளது. காலை, மாலை நேரங்களில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் அபாயம் உள்ளது. இட நெருக்கடியில் பயணம் செய்யும் பெண்கள் ஆண்களின் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் நிலை உள்ளது. மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, காலை, மாலை நேரங்களில் மகளிர் மட்டும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.




Read more »

கடலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு உதவித்தொகை விண்ணப்பம் வினியோகம்

கடலூர் : 

         வேலை வாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

            மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் கடந்த 1ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 300 ரூபாய், பிளஸ் 2 விற்கு 375 ரூபாய், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 450 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.

             இத்திட்டத்தில் உதவித் தொகை பெற உடல் ஊனமுற்றவர் அல்லது செவித் திறன் குறைந்தவராகவும், தங்கள் கல்வித் தகுதியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்த, 40 வயதிற்கு (ஆதிதிராவிடர்கள் 46 வயது) உட்பட்டவராக இருக்க வேண்டும்.தகுதி உடையவர்கள் வேலை நாட்களில் கடலூரில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 





Read more »

தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

திட்டக்குடி : 

        திட்டக்குடி அடுத்த தொழுதூர், டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா நடந்தது. ஆறுமுக முதலியார் - சொர்ணம் கல்வி அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் தொழிலதிபர் ராஜன், ராஜபிரதாபன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பழனிசாமி வரவேற்றார்.

விழாவில் திருச்சி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர், முனைவர் கிருஷ்ணமூர்த்தி 167 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்து பேசுகையில், 

            "மாணவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் முக்கியமான ஒன்று. திடமான நம்பிக்கையும், நல்நோக்கமும் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும். பட்டமளிப்பு விழா என்பது கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் ஒருசேர நினைத்துப் பார்க்கக்கூடிய நிகழ்வு. பொறியியல் மாணவர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்' என்றார்.

              அண்ணா பல்கலைக்கழக அளவில் கல்லூரியில் முதலிடம் பெற்ற ஸ்ரீவித்யாலட்சுமி, நிர்மலா, பத்மபிரியா, ராஜலட்சுமி ஆகியோருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டன. கல்லூரி துணைமுதல்வர் செல்வராஜ், துறைத் தலைவர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.





Read more »

தமிழ்நாட்டில் இலவச அரிசி திட்டம்: கோவில் அன்னதானத்துக்கு வரும் பக்தர்கள் குறைவு

           தமிழ்நாட்டில் ஜெயலலிதா 3-வது முறையாக கடந்த மே மாதம் 16-ந் தேதி பதவி ஏற்றார். தமிழக மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா முதல் கையெழுத்திட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் 20 கிலோ அரிசி ரேஷன் கடை மூலம் வழங்கப்படுகிறது.

           தமிழ்நாட்டில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மதிய நேரம் உணவுக்காக எங்கும் அலையக்கூடாது என்பதற்காக மதிய நேரம் உணவு கோவில்களில் வழங்க கடந்த 2002-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உத்தரவிட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

           அதே சமயம் தமிழ்நாட்டில் இலவச அரிசி வழங்குவதால் கோவில்களில் வழங்கப்படும் மதிய உணவு சாப்பிட பக்தர்கள் கூட்டம் குறைந்தது. அனைவருக்கும் இலவச அரிசி கிடைப்பதால் கூட்டம் குறைவாக வருகிறது என பக்தர்களில் ஒருவர் தெரிவித்தார். 

Read more »

தமிழகத்தில் 9 புதிய அரசு கலைக் கல்லூரிகள் துவக்கம்

  தமிழ்நாட்டில் 9 ஊர்களில் கலை அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட உள்ளது.
 
 
விபரம்
 

1.ஸ்ரீரங்கம் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்)

 2.நெம்மேலி (சென்னை பல்கலைக்கழகம்)

3.நாகலாபுரம் (மனோன் மணியம் சுந்தரனார் பல் கலைக்கழகம்)

4.அரூர் (பெரியார் பல்கலைக்கழகம்)

5.கள்ளக்குறிச்சி (திருவள்ளுவர் பல்கலைக்கழகம்)

6.திருப்பத்தூர் (திருவள்ளுவர் பல்கலைக்கழகம்)

7.திருச்சுழி (மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்)

8.வேதாரண்யம் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்)

9.திருத்துறைப்பூண்டி (பாரதிதாசன் பல்கலைக் கழகம்)

 
         சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் 9 புதிய கலைக் கல்லூரிகளை தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக அல்லாமல் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த கல்லூரிகளுக்கான செலவுகளை அந்தந்த பல்கலைக்கழகங்களே ஏற்றுக் கொள்கின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

தமிழக உள்ளாட்சி தேர்தல்: 40 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தயார்

         தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடை பெற உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து யூனியன், பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற வேண்டும்.தேதி பற்றி இன்னும் முடிவு செய்யப்பட வில்லை. வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாராகி வருகிறது.

         உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. 2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 நகரப்பஞ்சாயத்துக்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த முறையும் நகர்புற பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக மத்திய தேர்தல் கமிஷன் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு 40 ஆயிரம் மின்னணு எந்திரங்களை வழங்குகிறது.

           கிராமப்புற பகுதிகளில் பொது மக்கள் கிராம பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து யூனியன் வார்டு கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஆகியோரை தேர்ந்து எடுப்பதற்காக 4 ஓட்டுகள் போட வேண்டியுள்ளது. எனவே கிராம பகுதிகளில் ஓட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை. மாநகராட்சி மேயர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் தற்போது கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இவர்களையும் முன்புபோல நேரடியாக பொது மக்களே தேர்ந்து எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடந்து வருகிறது. 






Read more »

States give wrong data to evade environmental norms in Cuddalore and VAPI : CSE

       State governments furnished misleading information on critically polluted industrial areas to let the regions off an environment ministry moratorium list, an investigation by the Centre for Science and environment (CSE) has revealed.

         The environmental group, which evaluated the pollution status in the industrial hubs of Vapi, Gujarat and Cuddalore, Tamil Nadu, found that the pollution levels in both the areas exceeded the permissible norm, many times over.

          Both Vapi and Cuddalore along with 21 other critically polluted areas across the country were removed by the environment ministry from its moratorium list since October 2010. This means these areas will now be able to go ahead with new projects and expansions. The regions were let off the hook after the respective state pollution control boards submitted an action plan on how they plan to deal with the menace of pollution.

           However, analysis by CSE shows that the pollution mitigation plan submitted by Vapi and Cuddalore are misleading and devoid of certain vital measures. The tests conducted by CSE in April this year at Vapi show the presence of heavy metals like mercury and poisonous compounds like arsenic and cyanide. Nevertheless, the action plan makes no mention of any study of the existing surface water quality or its impact on people and ecology.

          Similarly, the Cuddalore action plan also gives a miss to the presence of major air pollutants such as benzene, volcanic organic compounds, visible impact of pollution on groundwater and surface water and their impact on people in the neighbouring villages. The investigation proves that the environment ministry was in a hurry to remove the critically polluted tag at Vapi and Cuddalore. Instead of applying a strict monitoring regime to assess pollution, it relied on promises made on paper to lift the moratorium. The ministry did not even carefully assess the projections made by the state pollution control boards, which would have nailed the lies in the mitigation action plans, the environmental group alleged.





Read more »

Madurai Kamaraj University Starts Five year Ph. D. programme in genomics from this year

S.R. Rao, Adviser, Department of Biotechnology, Government of India, speaking at Madurai Kamaraj University's School of Biological Sciences on Friday. Photo: G. Moorthy.
The Hindu S.R. Rao, Adviser, Department of Biotechnology, Government of India, speaking at Madurai 
Kamaraj University's School of Biological Sciences on Friday.

          Madurai Kamaraj University, on the occasion of former Chief Minister Kamaraj's 109th birth anniversary, has introduced a five-year integrated Ph. D. programme in Genomics from this academic year. The programme is sponsored by Department of Biotechnology (DBT), Government of India.

            S. R. Rao, Adviser, DBT, inaugurated the programme on Friday at the School of Biological Sciences of the university. The DBT has sanctioned Rs.11.7 crore for introducing this programme; Rs.5 crore has been released initially to create state-of-the-art infrastructure and establish a well-equipped research laboratory. Mr. Rao said that the DBT-Interdisciplinary Programme in Life Sciences was started in the University of Hyderabad as part of an experiment in 2007. “What we found in three years was that the number of Ph. Ds increased, fellowships increased, impact factor rose and publications went up by 12 to 13 per cent.”

          For the second batch, the DBT selected Banaras Hindu University and Osmania University based on their research performance and publications. Now, it had chosen Madurai Kamaraj University; the University of Rajasthan; MS University, Baroda; Karnataka University, Dharwad; and the University of Calcutta.

Genome initiatives

             Talking about DBT's projects, he said that genome initiatives in India were moving ahead and in the next year it had been planned to have 100 genome sequencing programmes. The DBT was also planning to come out with ‘Ignition Grant Projects' for industry entrepreneurs. The ‘Star College' scheme for strengthening life science and biotechnology education and training at undergraduate level would be intensified in colleges across the country. Stating that there had been an ever increasing new global partnership, he said that Madurai Kamaraj University, being a top class institution in life sciences, was lagging behind in becoming a stakeholder and asked the researchers to apply for these partnerships.

         P. Gunasekaran, Senior Professor, School of Biological Sciences, and coordinator for the programme, said that it was a dual degree programme in which a student could get M.Sc. and Ph. D. degrees in five years. By joining this integrated programme, students could come out with improved skills in genomics, molecular medicine and drug discovery. The top 15 meritorious students would get an offer to continue Ph.D. for the next three years. During their Ph.D. period, students would get a monthly fellowship of Rs. 14,000. Those students who qualify for NET would get a higher fellowship of Rs. 16,000 to Rs.18,000.

          Prof. Gunasekaran said that MKU was keen on boosting research works in the areas of “ Disease Diagnostics and Therapeutics.” The faculty would carry out extensive research for the ultimate development of novel diagnostic methods and assays for cancer, diabetes, cardiovascular diseases and other infectious diseases. The new state-of-the-art laboratory would have Rs. 2-crore worth equipment called LC-MS-MS for proteme and metabolome profiling of biological samples. This would be useful for diagnostic biomarker discovery from body fluids and other tissues of patients with other diseases.

        The university would also purchase ‘High Content Cell Imaging System' equipment for the purpose of drug discovery research. “We are keen on developing collaborations with Madurai Medical College and other recognised clinical research centres in Madurai and other places in south India to develop translational research initiatives for the betterment of diagnosis and therapy,” he said. M. Rajiakodi, Registrar (in charge), R. Jayaraman, Special Officer, and G. Marimuthu, Chairperson, School of Biological Sciences, spoke. 





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior