கடலூர் :
கடலூர் சி.கே. பொறியியல் கல்லூரி மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த "டெக்னோ 2011' போட்டியில் 5ம் பரிசு வென்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 16 தேதி முதல் 19ம் தேதி வரை இந்திய அளவில் பொறியியல் கல்லூரிக்கான மாணவர்களின் வடிவமைப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் "டெக்னோ 2011' போட்டி நடந்தது. இந்திய உற்பத்தியாளர் சம்மேளனம், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய இப்போட்டியில் இந்திய அளவில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் வடிவமைப்பினை சமர்பித்தனர்.
பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 8 படைப்புகளில் கடலூர் சி.கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, இயந்திரவியல் மற்றும் மின்னறிவியல் 3ம் ஆண்டு மாணவர்கள் சமீத் அர்பாஸ் அஞ்சும், ஜெகதீஷ், கணேஷ்பாபு, பிரவீன்குமார் படைப்பு 5ம் பரிசை வென்றது.மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் மற்றும் இந்திய உற்பத்தியாளர் சம்மேளன தலைவர் ஹரீஸ், மேத்தா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கினர்.
கல்லூரிக்கான சிறப்பு சான்றிதழை கல்லூரி முதல்வர் குமார், பேராசிரியர்கள் மல்லிஸ்வரன், ஈஸ்வரன் பெற்று கொண்டனர். நிறுவன தலைவர் ரங்கநாதன், இயக்குனர் சந்திரசேகரன், சிறப்பு அலுவலர் ராஜா மாணவர்களை பாராட்டினர்.