உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 02, 2011

வடலூரில் இலவச கண் சிகிச்சை முகாம்


Read more »

மது அருந்தினால் அபராதம்

           மராட்டியத்தில் தற்போது 21 வயதிலிருந்து மது பானங்கள் வாங்க, குடிக்க சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. இந்த நிலையில், மராட்டியத்தில் மது அடிமைக்கு எதிராக மாநில அரசு புதிதாக கொள்கை ஒன்றை கொண்டு வர உள்ளது.

           இது தொடர்பாக மாநில மந்திரிசபை கூட்டம் முதல் அமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தலைமையில் மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்தில், 25 வயதுக்குட்பட்டோர் மது பானம் வாங்குவதும், குடிப்பதும் சட்டவிரோதமான குற்றம் என்னும் அரசின் புதிய முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் பீர் வாங்குவதற்கும், பருகுவதற்கும் வயது வரம்பு 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

            பொது விழாக்களில், நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் பரிமாறவும் அரசு தடை விதித்து விட்டது. இனி 25 வயதுக்குட்பட்டோர் மராட்டியத்தில் மதுபானங்கள் பருகினால் அபராதம் விதிக்கப்படும். மேலும் கல்வி நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், நெடுஞ்சாலைகளுக்கு ஒரு கி.மீ. தொலைவில் மதுக்கடைகள் இருக்க அனுமதி இல்லை. ஒரு மாநகராட்சி வார்டு பகுதியில் மதுக்கடையை மூடுமாறு அதில் குடியிருப்போரில் 25 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மூடிவிட வேண்டும்.

           தனி நபர் வாங்குகிற மது பாட்டில்களின் அளவுக்கும் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. மதுபானங்கள் வாங்குவதற்கும், பருகுவதற்கும் 25 வயது ஆகி இருக்க வேண்டும் என்ற வரம்பு டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் அமலில் உள்ளது. இப்போது மராட்டியமும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 பின் குறிப்பு: 


தமிழகத்தில் எப்போது ??????????
??????????
??????????
????????
??????????
??????????????????????????
?????????????????????
 ?????????????????????



Read more »

இலவச அரிசி திட்டம் கடலூர் மாவட்டத்தில் தொடங்கியது

கடலூர்:

               சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின், முக்கியத் திட்டமான 20 கிலோ இலவச அரிசித் திட்டம் கடலூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.  

                 தகுதியுள்ள ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசி, இலவசமாக வழங்கப்படும் என்று, அதிமுக தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அவர் முதல்வராகப் பதவி ஏற்றதும், இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். கடலூர் மாவட்டத்தில் 1,360 ரேஷன் கடைகளில், இலவச அரிசி வழங்கும் திட்டம், புதன்கிழமை தொடங்கப்பட்டது.  இதற்காக கடலூர் நகரில் எங்கும் டிஜிட்டல் பேனர் இல்லை. வரவேற்பு வளைவுகள் இல்லை. அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. க்கள் வருகைக்காக அதிகாரிகள் மணிக் கணக்கில் காத்திருக்கும் மரபுகள் இல்லை. 

                ரிப்பன் கட்டிங் மற்றும் அரிசியை அளந்து போடும் சம்பிரதாயங்கள் இல்லை. எம்.எல்.ஏ.க்களும் கட்சிக்காரர்களும் ரேஷன் கடைப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. அமைச்சர்களை வரவேற்று 50 பக்கம் 100 பக்கம், பத்திரிகை விளம்பரங்களும் இல்லை. இலவச அரிசி வழங்கும் திட்டம் இயல்பாக, மிகவும் எளிமையாகத் தொடங்கப்பட்டது. 1,360 ரேஷன் கடைகள் மூலம் இத்திட்டத்தில்  மாவட்டத்தில் உள்ள 6,38,525 குடும்ப அட்டை தாரர்களுக்கும் இலசவ அரிசி விநியோகம் தொடங்கியது. 

                 ரேஷன் கடைகளில் இத்திட்டம் கோலாகலமான விழாவுடன் தொடங்கப்படும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. கடந்த காலங்களில் நடைபெற்ற  கோலாகலமான அரசு விழாக்களைப் போல், சென்னையில் முதல் அமைச்சரும், அந்தந்தப் பகுதி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பார்கள் என்றும், செவ்வாய்க்கிழமை மாலை வரை எதிர்பார்க்கப்பட்டது. இதற்காகக் கடைகள்கூடத் தேர்வு செய்யப்பட்டன. கடலூர் பாதிரிக்குப்பத்தில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. 

                  ஆனால் இலவச அரிசி வழங்கும் திட்டம், எளிமையாகத் தொடங்கப்பட வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவு, புதன்கிழமை காலையில்தான் தெரியவந்தது. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.  அரசின் திட்டங்கள் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதே ஆட்சியின்  நோக்கமாக இருக்க வேண்டும், அதற்கு எந்த விளம்பர வெளிச்சமும் போடத் தேயில்லை என்ற முதல்வரின் எண்ணம், பொதுமக்களுக்குப் புதுமையாகவும்  மனதைக் கவர்ந்ததாகவும் இருந்தது.  இந்த நிலை என்றும் தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.  

                 கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கோண்டூர், பாதிரிக்குப்பம் நியாயவிலைக் கடைகளில், இலவச அரிசி வழங்கப் படுவதை,  மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) சி. ராஜேந்திரன், பார்வையிட்டு அரிசியின் தரம், எடை அளவு குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.  

மாவட்ட வருவாய் அலுவலர் பின்னர் கூறுகையில்,

             கடலூர் மாவட்டத்தில் 1,123 முழு நேர நியாயவிலைக் கடைகள், 227 பகுதி நேர நியாயவிலைக் கடைகள், 10 மகளிர் நியாயவிலைக் கடைகளில் இலவச அரிசி, மாதம் முழுவதும் வழங்கப்படும் என்றார்.  இந்த ஆய்வின்போது மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பொ. முத்தையா உடன் இருந்தார்.




Read more »

அசோலா உற்பத்தி முறைகள்


விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், தொட்டியில் வளர்க்கப்படும் அசோலா.
 
விருத்தாசலம்: 
 
             அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் அசோலாவைத் தங்கள் தோட்டங்களிலேயே வளர்த்து கால்நடை மற்றும் கோழிகளுக்கு தீவனமாக வழங்குவதன் மூலம் நல்ல உற்பத்தி பெறலாம். 
 
 இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் க. சுப்பிரமணியன் மற்றும் உதவிப் பேராசிரியர் வெ. தனுஷ்கோடி கூறியது: 
 
              "அசோலா தண்ணீரில் மிதக்கக்கூடிய பெரணி வகையைச் சேர்ந்த தாவரமாகும். இதை விவசாயிகள் உயிர் உரமாக நெல் வயலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.  சமீபகாலமாக அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 25 முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளது. கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் ஆகிய சத்துகள் இதில் உள்ளன. பீட்டாகரோடின் நிறமியானது வைட்டமின் ஏ உருவாவதற்கு மூலப்பொருளாக உள்ளது. இச்சத்து உள்ளமையால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்து அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அசோலா சாப்பிட்ட கோழியின் முட்டைகளை நாம் உண்பது கண்பார்வைக்கு நல்லது.  
 
அசோலா உற்பத்தி முறைகள்: 
 
             நிழல்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்தி அமைத்து, பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் காகிதத்தை சீராக விரிக்கவும். பாலீத்தீன் காகிதத்தின் மேல் 2 செ.மீ. அளவுக்கு மண் இட்டு சமப்படுத்தவும். இதன்மேல் 2 செ.மீ. அளவுக்கு தண்ணீர் ஊற்றவும். பின் பாத்தி ஒன்றுக்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 5 கிலோ அசோலா தாய் வித்து இடவேண்டும். நாள்தோறும் காலை அல்லது மாலை வேளையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணில் உள்ள சத்துகள் தண்ணீரில் கரைத்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்கும்.  15 நாள்களில் ஒரு பாத்தியில் (10ஷ் 2ஷ் 1 அடி) 30 முதல் 50 கிலோ அசோலா தாயாராகி விடும். மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டு எஞ்சிய 2 பகுதியை அறுவடை செய்யலாம். 10 நாள்களுக்கு 1 முறை பசுஞ்சாணம் கரைப்பது நல்லது. பூச்சித்தொல்லை வந்தால் 5 மில்லி வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியில் தெளிக்கவும். அசோலாவின் உற்பத்தி கோடை காலங்களில் சிறிது குறைந்தும், மழைக்காலங்களில் அதிகரித்தும் காணப்படும். மூன்று அல்லது நான்கு பாத்திகள் அமைத்து தினமும் அசோலாவை அறுவடை செய்து கால்நடை மற்றும் கோழிகளுக்குச் சத்து நிறைந்த சுவைமிகுந்த உணவாகப் பயன்படுத்தலாம்.  அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கால்நடை மற்றும் கோழிகளுக்குப் பயன்படுத்தலாம். அசோலாவை பச்சைத் தீவனமாக முதன் முதலாகப் பயன்படுத்தும் பொழுது கால்நடைகள் அவற்றை உண்பதற்கு தயக்கம் காட்டலாம். ஆகையால் ஆரம்பகட்டத்தில் அசோலாவைத் தவிடு, புண்ணாக்கு அல்லது பிற அடர் தீவனத்துடன் கலந்து மாடுகளுக்குத் தீவனமாகப் பழக்கப்படுத்த வேண்டும்.  
 
அசோலாவின் பயன்கள்: 
 
             அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடை, அல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர் தீவனம் மட்டும் இடப்பட்ட கோழி முட்டையின் சத்தைவிட அதிகமாக உள்ளது.  இந்தியாவில் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் ஒருங்கிணைந்து பின்பற்றப்படுகிறது. அசோலா குறைந்த செலவுள்ள இடுபொருளாக கால்நடை வளர்ப்பில் பயன்படுகிறது. மேலும், நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது. 
 
             எனவே, அசோலா ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மிக முக்கியமான இடு பொருளாகும். பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது. ஆகையால் உயர்ந்த வெப்பநிலையில் அசோலாவின் வளர்ச்சி தடைபடுவதால் உற்பத்தி குறைகிறது. ஆகவே, மிகவும் வறண்ட பகுதியில் இந்த தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவது கடினமாகும்.  
 
 
 

Read more »

இயற்கை விவசாயத்தில் அதிக லாபம் பெறுகின்றனர் சிதம்பரம் விவசாயிகள்

சிதம்பரம்: 
 
             குஜராத், மராட்டியம், பஞ்சாப் மற்றும் ஆந்திர மாநில முன்னோடி விவசாயிகள் காந்திய வழியில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு அதிகளவில் லாபம் பெற்று வருகின்றனர். 

              குறிப்பாக தற்போதைய செயற்கை உரங்கள், களைக்கொல்லிகளுக்கு மாற்றாக இயற்கை வளங்களை கெடுக்காமல் பாதுகாத்து அதிகளவு உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் லாபம் வாயிலாக வளம் பெற்று வருகின்றனர். காந்திய சிந்தனையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு இயற்கை விவசாயத்தில் தேவையில்லாமல் நிலத்தை உழவியல் பணிகளுக்கு உட்படுத்துவது கிடையாது. நிலத்தின் தன்மைகேற்பவும், பயிரின் தேவையை கருத்தில் கொண்டும் சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் குறைந்தச் செலவில் விவசாயிகள் அதிக மகசூல் மற்றும் லாபம் பெற முடிகிறது.  

 காந்திய வழியில் விவசாயம் செய்வது எப்படி என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை இணைப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:  

                தற்போதைய காந்திய வழி விவசாயத்தில் நவீன வேளாண் தொழில்நுட்பங்களில் உள்ள குறைபாடுகள் சீர் செய்யப்பட்டு இயற்கை முறையில் வேளாண் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக காந்திய முறையில் தென்னை சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் போது தென்னை அருகே நீர் பாசனம் செய்வது கிடையாது.  தென்னை மரத்தில் இருந்து 12 அடி இடைவெளியில் நீர் பாசனம் செய்யப்படுகிறது. இதன் வாயிலாக தண்ணீரை நோக்கி தென்னை வேர்கள் செல்வதால் மரம் நல்ல பிடிமானம் மற்றும் நிலத்தின் ஈரப்பத்தை திறன்பட பயன்படுத்த முடிகிறது. இதன் வாயிலாக 70 முதல் 80 சதவீதம் வரை தண்ணீர் சேமிக்கப்படுகிறது.  

                   மேலும் தென்னை மரங்களை சுற்றி அலங்கார செடிகள் நடவு செய்யப்படுகின்றன. நீர் இல்லாத சூழலில் இவை 48 முதல் 72 மணி நேரத்துக்குள் வாடி வதங்கிவிடும். இதை பார்த்த உடன் விவசாயிகள் நீர்பாசன பணிகளை மேற்கொள்ளும் நடைமுறையை பின்பற்றுகின்றனர். இதுதவிர புதிதாக தோட்டங்கள் அமைக்கும் போது குறுகியகால பயிர்களாக காய்கறிகள், நடுத்தர வயது கொண்ட பப்பாளி, வாழை மற்றும் சீதாபழ மரங்கள் மற்றும் நீண்ட கால மரங்களான தென்னை, மா போன்றவை தேர்வு செய்து சாகுபடி பணிகளை செய்வதால் நிலத்தின் வளத்தை பாதுகாப்பதுடன் விவசாயிகளுக்கு தொடர்ந்து வருமானம் கிடைக்கிறது. இதனால் குறைந்தச் செலவில் விவசாயிகள் அதிக லாபம் பெற முடிகிறது.  

பிற பயன்கள்: 

             காந்திய சிந்தனை அடிப்படையில் வாழு, வாழவிடு என்ற நோக்கில் இயற்கை வளங்களை மாசுபடுத்தாமல் வேளாண் பணிகளை மேற்கொள்வதால் மண்ணின் வளம் தொடர்ச்சியாக பாதுகாக்கப்படுகிறது, காந்திய வழி விவசாயத்தில் இயற்கை உரங்கள், வேளாண் இடுபொருள்கள் பயன்படுத்தப்படுவதால் செலவு குறைவு, விவசாயிகள் கடன்பட்டு உயிரை மாய்த்து கொள்ளும் நிலை ஏற்படாது, சிறு மற்றும் குறு விவசாயிகள் பண்ணை மகளிர், கிராமப்புற இளைஞர்கள் காந்திய விவசாய முறைகளை பின்பற்றி செயல்படுவதன் வாயிலாக கிராமப்புற பொருளாதார மேம்பாடு அடைய முடியும்.





Read more »

அடிப்படை வசதிகள் இன்றி சிதைந்துக் கிடக்கும் கடலூர் துறைமுகம்

கடலூர்:

             அடிப்படை வசதிகள் இன்றி சிதைந்துக் கிடக்கும் கடலூர் துறைமுக மீன் இறங்கு தளத்தைச் சீரமைக்க வேண்டும் என்று, தமிழ்நாடு மீனவர் பேரவை கோரிக்கை விடுத்தது.

              தமிழ்நாடு மீனவர் பேரவையின் கடலூர் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் திங்கள்கிழமை நடந்தது. ஆண்டுதோறும் கடல் நீரோட்டங்களால் தூர்ந்து கொண்டு இருக்கும் கடலூர் துறைமுகத்தை, மணல்வாரி கப்பல்கள் மூலம் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். ஆண்டுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் மீன் வர்த்தகம் நடைபெறும் கடலூர் துறைமுக மீன் இறங்குதளம், பராமரிப்பு இன்றிக் கிடக்கிறது.


             மீன் இறங்கு தளத்தைச் சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் துறைமுக நுழைவாயிலில் மின் விளக்குகள் பொருத்த வேண்டும். பரங்கிப்பேட்டை, அன்னங்கோயில் துறைமுகங்களையும் ஆழப்படுத்த வேண்டும். சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரை கோரி சுனாமி நகர் பகுதிகளில் இருந்து சுடுகாட்டுக்கு 6 கி.மீ. தூரம், சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியது இருப்பதால், பல சமூகப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. பல நேரங்களில் படகுகள் மூலமாகவும் சடலங்கள் எடுத்துச் செல்ல நேரிடுகிறது. 

               இப்பிரச்னைக்குத் தீர்வு காண, சுனாமி குடியிருப்புப் பகுதியில் உப்பனாற்றில் பாலம் அமைக்க வேண்டும். சுனாமிக் குடியிருப்புப் பகுதியில் இருந்து மாணவர்கள் சிரமமின்றி பள்ளிகளுக்குச் செல்ல, உப்பனாற்றில் சிறிய பாலம் அமைக்க வேண்டும். முழுமைப் பெறாமல் இருக்கும் சொத்திக்குப்பம்- கிள்ளை கடற்கரைச் சாலைப்பணியை நிறைவேற்ற வேண்டும்.÷தூர்ந்துக் கிடக்கும் கடலூர் துறைமுகம் கோரிவாய்க்காலை படகுகள் நிறுத்துவதற்கு வசதியாக ஆழப்படுத்த வேண்டும்.

              தியாகவல்லி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.சுப்புராயன் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.




Read more »

சிதம்பரம் நகரில் குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.6 லட்சம் செலவில் புதிய போர்வெல்

சிதம்பரம்:

         சிதம்பரம் நகரில் குடிநீர் பற்றாக்குறையை போக்க வடக்குமெயின்ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட் வளாகத்தில் ரூ. 6 லட்சம் செலவில் புதிய போர்வெல் அமைக்கும் பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நகரமன்றத் தலைவர் ஹெச். பௌஜியாபேகம், அதிகாரிகளுடன் புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு பணியினை துரிதப்படுத்தினார்.

            சிதம்பரம் நகரில் மேற்கு பகுதியில் குறிப்பாக 2, 3, 4, 10, 11, 12  உள்ளிட்ட வார்டுகளில் குடிநீர் சப்ளை சரிவர இல்லாததால் மக்கள் அவதியுற்றனர். ஏற்கனவே மீன்மார்க்கெட்டில் அமைக்கப்பட்ட போர்வெல் பழுதடைந்தது. ஆதலால் தற்போது மீன் மார்க்கெட் வளாகத்தில் ரூ.6 லட்சம் செலவில் புதிய போர்வெல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. போர்வெல் அமைக்கும் பணியை நகரமன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம், உதவிப் பொறியாளர் மணிவண்ணன், மின் கண்காணிப்பாளர் ஷேக்மைதீன் உள்ளிட்டோர் பார்வையிட்டு பணிகளை துரிதமாக முடிக்குமாறு உத்தரவிட்டார்.




Read more »

கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் ரயில்வே மேம்பால பணி மீண்டும் துவங்கியது

கடலூர் முதுநகர் : 


        கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் ரயில்வே மேம்பால பணி ஒன்பது மாதத்திற்குப் பிறகு மீண்டும் துவங்கியது.
            கடலூர் - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் கடலூர் முதுநகர் அடுத்த பச்சையாங்குப்பம் அருகே சிதம்பரம் ரயில் பாதை அமைந்துள்ளது. தற்போது இந்த ரயில்பாதை அகலப்பாதையாக மாற்றியதை தொடர்ந்து கூடுதல் ரயில் இயக்கப்பட உள்ளது. இதனால் அடிக்கடி பச்சையாங்குப்பம் ரயில்வே கேட் மூட வேண்டியுள்ளதால், சாலை போக்குவரத்து பாதிக்கும்.

             இதனை தவிர்க்கும் பொருட்டு பச்சையாங்குப்பத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. அதற்காக அரசு 8.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. சென்னையைச் சேர்ந்த பாரத் இன்ஜினியரிங் கம்பெனி டெண்டர் எடுத்தது. இப்பணியை 2011 மே மாதம் 20ம் தேதிக்குள் (கடந்த 20ம் தேதி) முடித்து தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடந்த 20.11.2009 அன்று மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்கியது.

           பணியை விரைந்து முடிக்கும் பொருட்டு கடலூர் - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கனரக வாகனங்கள் பூண்டியாங்குப்பம், குள்ளஞ்சாவடி வழியாகவும், இலகுரக வாகனங்கள் காரைக்காடு வழியாக விருத்தாசலம் சாலைக்கு திருப்பி விடப்பட்டன.  இந்நிலையில் பணி துவங்கிய சில மாதங்களிலேயே திடீரென கடந்த செப்டம்பர் மாதம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த மேம்பாலத்தை திறந்த நிலையில் பவுன்டேஷன் போட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், மண்ணின் தன்மை சரியில்லாத காரணத்தால் ஃபைல் பவுன்டேஷன் போட திட்டப்பணி மாற்றப்பட்டது. அதற்காக நெடுஞ்சாலைத்துறை கூடுதலாக 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

         அதனைத் தொடர்ந்து மேம்பாலம் கட்டும் பணி மீண்டும் துவங்கியுள்ளது. இதற்காக மீண்டும், சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் ஆலப்பாக்கம், குள்ளஞ்சாவடி வழியாகவும், டவுன் பஸ்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் காரைக்காடு வழியாக விருத்தாசலம் சாலைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. ஆனால், இதனை எவரும் பின்பற்றாமல் அனைத்து கனரக வாகனங்களும் காரைக்காடு வழியாகவே சென்று வருகின்றன. குறுகிய சாலை வழியே அனைத்து கனரக வாகனங்களும் சென்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.

              ரயில்வே மேம்பால பணி தற்போதுதான் துவங்கப்பட்டுள்ளது. இப்பணி முடிவடைய பல மாதங்கள் ஆகும் நிலை உள்ளது. அதுவரை காரைக்காடு சாலையில் வாகனங்கள் அதிகளவில் செல்லக்கூடும். காரைக்காடு இணைப்புச் சாலையை வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக அகலப்படுத்த வேண்டும். அல்லது ஒரு வழிப்பாதையாக மாற்றி அதனை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.




Read more »

Distribution of free rice begins in Cuddalore District


Card-holders getting free rice at a fair price shop in Cuddalore on Wednesday.

CUDDALORE: 

          Distribution of free rice through fair price shops in Cuddalore and Villupuram districts began on Wednesday without any fanfare. It was business as usual in over 3,300 fair price shops in both the districts.

         Since it happened to be the beginning of the month, some of the shops attracted good number of ration card-holders as usual. Otherwise, no heavy rush was seen anywhere in these districts. The assurance given by the officials that adequate quantity of rice stocks were kept in the fair price shops to meet the requirements of all eligible card-holders and moreover they could lift their entitlements on any day of the given month had removed anxiety among people.

         What surprised the card-holders was that neither was it made a political function nor a government function. But for the small handbills declaring that free rice would be made available from June 1, pasted on the doors and walls of the fair price shops, there were no big banners or hoardings proclaiming the scheme. The card-holders were more than happy to get free rice, for which they profusely thanked Chief Minister Jayalalithaa. However, what was still causing concern among home makers, such as Madhi and Selvi who came to get rice at Vandipalayam shop, was that the prices of other essential commodities were still ruling high in the markets.

        In Cuddalore district, Collector in-charge C.Rajendran, along with Public Relations Officer Pon.Muthiah, inspected the fair price shops at Kondur and Padhirikuppam. He said that there were a total number of 6,38,525 card-holders in the district, of whom 5,57,071 were eligible to get free rice and 81,454 were beneficiaries of the Antyodaya Annayojana scheme (entitled to 35 kg of rice each a month). There were a total number of 1,360 fair price shops in the district, of which 1,123 were running full time, 227 part time and 10 manned by self-help groups.






Read more »

Enhanced aid likely for 96 persons in Cuddalore District

CUDDALORE: 

      For extending the benefit of age relaxation to differently abled persons, a test was conducted here on Monday in which 105 candidates appeared, according to a release. A total of 96 persons were selected. They will get an enhanced monthly aid of Rs. 1,000 (raised from Rs 500 ) from June 1. Collector in-charge C. Rajendran, District Differently abled Persons' Welfare Officer T. Srinivasan and District Soical Welfare Officer Bhuvaneswari were prese

Read more »

Compensation for acquired lands formula flayed

CUDDALORE:

         The Consumer Federation-Tamil Nadu has faulted the proposal of the Union government to fix compensation for lands to be acquired for industrial purposes or other projects at six times the registered value of the property.

            In identical representations sent to Prime Minister Manmohan Singh, United Progressive Alliance chairperson Sonia Gandhi and Chief Minister Jayalalithaa, federation executive secretary M. Nizamudeen said the proposed formula would do injustice to farmers.

           A majority of farmers had inherited property from their ancestors and the value at the time of registration might have been much less compared with the present market value. Farmers in Cuddalore had already lost a vast stretch of cultivable lands to big industrial houses, land sharks and middlemen, who forced them to part with the property at rock bottom prices.

          In certain cases, there was intimidation to sell the lands at the prices quoted by the buyers. With land resources going scarce and the farmers remaining at the receiving end, the Centre's formula would be seen as putting undue pressure on them to part with their land for a meagre sum. The Federation urged the Centre to not only fix the compensation at fair level but also make it mandatory for providing suitable relief and rehabilitation to land providers. It also put forth a demand that the land already acquired but not used for constructive purposes be returned to the farmers.




Read more »

Mass contact programme held at Chidambaram

CUDDALORE: 

         Collector P. Seetharaman along with Kattumannarkoil MLA M. Murugumaran attended a mass contact programme held at Chettikattalai in Chidambaram block on Tuesday. Of 87 petitions received, as many as 27 were accepted, 49 rejected and 11 kept under scrutiny.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior