உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 19, 2011

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இலவசக் கல்வி

 http://www.rkmshome.org/header1.gif


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இலவசக் கல்வி பயில ஓர் வாய்ப்பு. சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் கல்வி அறக்  கட்டளையில்   ஏழை ( இங்கே ஏழை  என்ற  வார்த்தை வசதியை மட்டுமே அன்றி அறிவில்  நாம் யாரும் ஏழை இல்லை ) மற்றும் படிக்க வசதி இல்லாத மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கபடுகிறது. முடிந்தால் உங்களால் இயன்ற பொருளாகவோ, பணமாகவோ அளித்து உதவுங்கள்.




Contact


Ramakrishna Mission Students' Home
No. 66, P.S. Sivaswamy Salai,
Mylapore, Chennai - 600 004
India
Phone: (+91 44) 2499 0264 / 2499 2537 / 4210 7550
Fax: (+91 44) 4231 2830
Email: rkmshome@airtelmail.in, Web : http://www.rkmshome.org/



Donation

Please select the nature of the donation you wish to make:

1. Endowment 2. Cash donation
3. Kind donation

Read more »

முருங்கைக் கீரை மருத்துவப் பயன்கள்


Read more »

B.Com. Colleges in Chennai

  1. Annai Violet College for Women
  2. M.O.P. Vaishnav College for Women
  3. Anna Adarsh College for Women
  4. A.A. Arts & Science College
  5. Alpha Arts & Science College
  6. Asan Memorial College of Arts & Science
  7. Bhakthavatchalam Memorial College for Women
  8. Chevalier T. Thomas Elizabeth College for Women
  9. Chennai National College of Arts & Science
  10. Ethiraj College for Women
  11. Stella Maris College
  12. Dr. M.G.R. Janaki Collage of Arts &Science for Women
  13. The New College
  14. Srimathi Devkunwar Nanalal Bhat Vaishnav College
  15. SIVET College
  16. Sir Thiyagaraya College
  17. St. Louis College for Deaf
  18. R.K.M. Vivekananda College
  19. Quaid-E-Milleth College
  20. Pachaiyappas College for Men

Read more »

புதிய வீட்டுக்கு மாறுகிறார் அமைச்சர் எம்.சி. சம்பத்


ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கடலூரில் தற்போது வசிக்கும் வாடகை வீடு (தரைத் தளம்).
 
கடலூர்:

             தமிழக ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், கடலூரில் புதிய வாடகை விட்டுக்கு மாறுகிறார். 1977 சட்டப் பேரவைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஹிலால் என்ற அப்துல் லத்தீப் வெற்றி பெற்றார். அதன் பிறகும் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க. வசம் இருந்த கடலூர் தொகுதியை, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கடலூர் மக்களின் அமோக ஆதரவால் மீண்டும் கைப்பற்றி இருக்கிறார், ஏற்கெனவே உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எம்.சி. சம்பத்.  

              வன்னியர் அல்லாதோர் மட்டுமே எம்.எல்.ஏ.க்களாக இருந்து வந்த கடலூர் தொகுதியை, அனைத்து சமூகத்தினருடனும் சகஜமாகப் பழகி, அரவணைத்துச் செல்லும் பாங்கால், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த எம்.சி. சம்பத் கைப்பற்ற முடிந்தது. அதனால்தான் வேட்பு மனு தாக்கல் செய்த உடனேயே அவர் வெற்றி பெறுவார் என்று பெருவாரியான மக்களால் பேசப்பட்டார். கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலராகவும் இருந்து வரும் எம்.சி. சம்பத், விவசாயக் குடும்பத்தில் பிறந்து முழுமையான விவசாயியாகவே இருந்து வருகிறார். எனவேதான் சொந்த ஊரான, பண்ருட்டியை அடுத்த மேல்குமார மங்கலத்தில் உள்ள பண்ணை வீட்டிலேயே தொடர்ந்து வசித்து வந்தார்.  

             நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டும், கட்சிப் பணிகளை செவ்வனே ஆற்ற வேண்டிய பொறுப்புணர்வாலும், 2 ஆண்டுகளுக்கு முன் கடலூர் மஞ்சக்குப்பம் பாஷியம் ரெட்டித் தெருவில் உள்ள வாடகை வீட்டுக்கு குடி வந்தார். எனினும் குடும்பத்தினர் மேல்குமார மங்கலத்திலேயே உள்ளனர்.  தற்போது கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆகவும் அமைச்சராகவும் இருப்பதால், குடும்பத்துடன், கடலூரில் குடியேற திட்டமிட்டு இருப்பதாக எம்.சி. சம்பத் தெரிவித்தார். அடுக்குமாடி வாடகை வீட்டில், தரைத்தளத்தில் வசித்து வரும் எம்.சி.சம்பத், இடவசதி தேவை கருதி, சற்று விசாலமான மற்றொரு வாடகை வீட்டுக்குச் செல்லத் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.   






Read more »

கடலூரில் அழிக்கப்படும் மலைப்பகுதி

கடலூர்:
            கடலூரில் இருந்து 12 கி.மீ. தென் மேற்காக அமைந்து இருப்பது ஒüஷதகிரி என்னும், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து இருக்கும் மலைப் பகுதி. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரே மலைப்பகுதி ஒஷ்தகிரிதான்.  
              மா, பலா, முந்திரி, தேக்கு மரங்களால் சூழப்பட்டு பார்க்கும் போது, பச்சை பசேலென்று அழகு கொஞ்சும் பச்சை மலையாகக் காட்சி அளிப்பது ஒüஷதகிரி. இந்த அழகுமிகு ஒஷ்தகிரியில்தான் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில், ஹயகிரீவர் கோயில், விலங்கல்பட்டு முருகன் கோயில், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோயில் ஆகியவை அமைந்து உள்ளன.  மேற்குப் பகுதியில் மத்திய சிறைச்சாலை அமைந்து இருக்கும் பகுதி கேப்பர் மலை என்று அழைக்கப்படுகிறது. வெள்ளைக்காரர்கள் காலத்தில் மத்திய சிறைச்சாலை மட்டுமே அமைந்து இருந்த கேப்பர் மலைப் பகுதி, இன்று 40 கிராமங்களைக் கொண்டதாக மாறி, வாழைத் தோட்டங்கள், மலர்த் தோட்டங்கள், கரும்பு வயல்கள் என மாறி, வேளாண்மையின் செழிப்பைக் காண முடிகிறது.  
            ஒய்தகிரியைக் கிழித்துக் கொண்டு கெடிலம் ஆறு ஓடுகிறது. கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய கொண்டங்கி ஏரி உள்ளது. இந்த மலைப் பகுதியில் கிடைக்கும் தண்ணீர் நல்ல சுவை நிறைந்தது. எனவே கடலூர் நகருக்குத் தேவையான குடிநீர், ஒய்தகிரியில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படுகிறது.  ஆனால் இந்த அழகு கொஞ்சும் மலைப் பகுதி, அரசுத் துறைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, இயற்கை எழிலும் சுற்றுச்சூழலும் வெகுவாகச் சிதைக்கப்பட்டு வருவதுதான் வேதனை அளிக்கும் விஷயம்.  
               கடலூர் மத்திய சிறை அருகே பெண்கள் சிறை 10 ஏக்கரில் அண்மையில் உருவாக்கப்பட்டது. சிறைக் காவலர்களுக்காக ஏற்கெனவே ஓடுகள் வேயப்பட்ட 50 வீடுகள் இருந்தன. அவைகள் சிதைந்து கிடக்கும் நிலையில் புதிய இடங்களைத் தேர்வு செய்து, ஏராளமான மரங்களை வெட்டி வீழ்த்தி, அடுக்குமாடி வீடுகள் பல அண்மையில் கட்டப்பட்டன.  மின்சார வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்துடன் துணை மின் நிலையம் உருவாக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அரசுத் துறைகளுடன் போட்டி போட்டுக் கொண்டு, இந்த மலைப் பகுதியில், தற்போது சுமார் 40 நகர்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.  
               இதற்காக எவ்விதத் தடையுமின்றி வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள் ஆயிரம் ஆயிரமானவை. இதற்கு வனத்துறை அனுமதி கோரப்பட்டதா என்று தெரியவில்லை.  இந்த மலைப் பகுதியில் இருந்து, பெருமளவில் சரளைக் கற்கள் தோண்டி எடுக்கப்பட்டு, கடலூர் மாவட்டம் மட்டுமன்றி, புதுவை மாநிலத்துக்கும் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கொண்டு போகப்படுகின்றன.  இந்நிலையில் இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல், அரசு மருத்துவக் கல்லுரிக்கான இடமும் இங்குதான் தேர்வு செய்யப்பட்டு, அடிக்கல்லும் நாட்டப்பட்டு விட்டது. இதற்காக மேலும் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.  
              மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் அங்கு கொண்டு செல்லவும் திட்டம் இருக்கிறதாம். அரசுத் துறைகளின் படையெடுப்பாலும், அவர்களின் தயவால் நுழைந்து இருக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்களால் பேராசையாலும் அங்கு விரைவில் ஒரு டவுன்ஷிப் உருவாகும் சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளன.  இதற்காக இன்னும் எத்தனை ஆயிரம் மரங்கள் வெட்டப்படும் என்று எண்ணிப் பார்க்கும்போது, ஒüஷதகரி மலைப் பகுதி முழுவதும் விரைவில் மரங்கள் அற்ற மொட்டை மலையாகி விடும் என்ற அச்சம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மனதில் எழுந்துள்ளது. இந்த மலைப் பகுதி முழுவதும், ஊராட்சிகளின் நிர்வாகத்தில் வருவதால், கேட்பாரின்றி மரங்களை வெட்டிக் குவிப்பதும், அலுவலகங்களையும், குடியிருப்புகளையம் தாராளமாகக் கொண்டுவந்து குவித்து வருவதும், நிச்சயம் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் செயலாகும்.  
               அங்கு மேற்கொண்டு எந்தக் கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்காத வகையில், குறைந்தபட்சம், அரசு மருத்துவக் கல்லூரியையாவது, கடலூரை அடுத்த நத்தப்பட்டு அருகேயுள்ள, அரசுக்குச் சொந்தமான 140 ஏக்கர் நிலத்துக்கு மாற்றலாம் என்கிறார் நகர குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன்.  
              அங்கு மருத்துவக் கல்லூரி அமைந்தால் ஒüஷதகிரியில் கட்டுமானங்கள் பெருமளவில் அதிகரிக்கும். கடலூர் பகுதியில் இருந்து நோயாளிகள் சென்று வருவதும் மிகவும் சிரமமாக இருக்கும். நத்தப்பட்டு பகுதியில் மருத்தவக் கல்லூரி அமைந்தால், கடலூர் புறவழிச் சாலை, கடலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலை அகியவற்றின் அருகாமையில் இருப்பதால், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துக்கும் வசதியாக இருக்கும். அத்துடன் அழகிய ஒüஷதகிரி மலை, ஒரு டவுன்ஷிப்பாக மாற்றப்பட்டு, மொட்டை மலையாவதையும் தடுக்க முடியும் என்றார் அவர்.

Read more »

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நானோ அறிவியல் படிப்பு

           சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை நானோ அறிவியல் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

             இரண்டு ஆண்டு கால பட்ட மேற்படிப்பான இதில், உயிரியல் சூழல் சார்ந்த நானோ தொழில்நுட்பம், நானோ பொருள்கள் ஒருங்கிணைப்பு, நவீன மருந்து தயாரிப்பு முறைகள் உள்ளிட்டவை கற்பிக்கப்படும்.  4 பருவங்கள் கொண்ட இந்தப் படிப்பில், வகுப்பறைக் கல்வியைத் தவிர தொழில் துறைக்கு தேவைப்படும் அறிவியல் படைப்புகள் உருவாக்கம், ஆய்வு நெறிமுறைகள், மென்திறன் ,திட்டப்பணிகள் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கே.கணேஷ் தெரிவித்தார். 

 இந்தப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திலும், நந்தனத்தில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு: 

044-2266 2500-03. 
http://www.velsuniv.ac.in/

Read more »

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் விற்பனை

கிள்ளை : 
 
          சிதம்பரம் சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் விற்பனை துவங்கியது. 
 
இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சேரமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 
             சிதம்பரம் சி.முட்லூர் அரசு கல்லூரியில் இளங்கலை பாடப் பிரிவுகளான பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், பி.காம்., பி.எஸ்சி., வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், பி.பி.ஏ., உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. எஸ்.சி., - எஸ்.டி., மாணவ,மாணவியர்கள் ஜாதிச் சான்று நகலைக் கொடுத்து இலவசமாகவும், மற்றவர்கள் 27 ரூபாய் நேரில் கல்லூரியில் செலுத்தி கல்லூரி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்று நகல்களுடன் ஜூன் 5ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கல்லூரியில் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சேரமான் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Read more »

Mass contact programme on May 31 in Kattumannarkoil block

CUDDALORE: 

     Collector R. Seetharaman will preside over a mass contact programme to be held in Chettikattalai in Kattumannarkoil block on May 31. Prior to that, a box will be kept at the office of the Village Administrative Officer for people to deposit their petitions. On May 23, revenue officials would go around the village and collect their representations.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior