உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

நெல்லிக்குப்பத்தில் சமுதாயக்கூடம் பயன்பாடின்றி வீணாகிறது

நெல்லிக்குப்பம் :

              நெல்லிக்குப்பம் நகராட்சியில் எம்.எல்.ஏ., வால் திறந்து வைக்கப் பட்ட சமுதாய கூடங்கள் பயன்பாடின்றி பாழாகி வருகிறது.

               நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் ஆலை ரோட்டில் 10 லட்சம் ரூபாய் செலவிலும், வான் பாக்கத்தில் எட்டு லட்சம் மதிப்பிலும் சமுதாய கூடங்கள் கட்டப் பட்டன. பணிகள் முடிந்து ஓராண் டாகியும் திறக்கப்படாமல் இருந்தது குறித்து தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் சேர்மன் கெய்க்வாட்பாபு முன்னிலையில் எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் திறந்து வைத்தார். ஆனால் நாற்காலிகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் இல்லாததால் சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்படுத்த முடியாமல் வீணாகி வருகிறது. நகராட்சி சார்பில் தேவையான பொருட்களை வாங்கி வைத்து மக்கள் பயன்படுத்தும்படி செய்ய வேண்டும். நகராட்சி சார்பில்  நிர்வகிக்க முடியாவிட் டால் தனியாரிடம் குத்தகைக்கு விடலாம். சைக்கிள் ஸ்டேண்ட், சந்தை வசூல், பஸ்நிலையத்தில் பஸ்கள் வசூல் தனியாரிடம் உள்ளது. அதே போல் சமுதாய கூடத்தையும் தனியாரிடம் குத்தகைக்கு விட்டால் முறையாக பராமரிப்பார் கள். மக்களும் குறைந்த வாடகையில் சமுதாய கூடத்தை பயன் படுத்துவார்கள். கட்டடங்கள் பாழாவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

திருமானிக்குழி ஆற்றுப்பாலம் முறையாக சரி செய்யப்படுமா?

நெல்லிக்குப்பம் :

                          திருமானிக்குழி பாலத்தை முறையாக சரி செய்யாததால் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் ரூபாய் பாழாகிறது. நெல்லிக்குப்பம் அடுத்த திருமானிக்குழி கெடிலம் ஆற்றில் தரைப் பாலம் உள்ளது. இப்பாலம் வழியே திருமானிக் குழி, ராமாபுரம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். பாலத்தின் தென்கரையில் ஆற்றுப்பகுதி மேடாகவும், வடகரை பள்ளமாகவும் உள்ளது. வெள்ளம் வரும்போது தண்ணீர் முழுவதும் வடகரை வழியே வேகமாக செல்வதால் உடைப்பு ஏற்படுகிறது.

                 இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெள்ளம் வந்தபோது வடகரையில் பாலம் உடைந்தது.  10 லட்சம் ரூபாய் செலவு செய்து சிமென்ட் பைப்புகளை அமைத்து சரி செய்தனர். கடந்த ஆண்டும் அதே இடம் சேதமடைந்தபோது 25 லட்சம் ரூபாய் செலவு செய்து சரி செய்தனர். கடந்த மாதம் வெள்ளம் வந்தபோது அதே இடத்தில் புதைத்த பைப்புகள் உடைந்ததால் பஸ், கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

                      ஆற்றில் தென்கரையில் உள்ள மணல் மேட்டை குறைத்து பாலம் நீளத்துக்கும் சீராக தண்ணீர் செல்ல வழி செய்ய வேண்டும். அடுத்ததாக மண் கொட்டி சரி செய்த பிறகு இருபுறமும் கருங்கல் சுவர் அமைக்க வேண்டும்.  இதுபோன்று முழுமையாக பணி செய்தால் தான் வரும் ஆண்டுகளில் பாலம் உடைவதை தடுக்க முடியும்.

Read more »

இலவச வேட்டி சேலை வழங்கும் விழா

விருத்தாசலம் :

               விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடி ஊராட்சியில் இலவச வேட்டி சேலை வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தெய்வராணி முன்னிலை வகித்தார். வி.ஏ.ஓ., ராதாகிருஷ்ணன் வரவேற்றார். நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ராஜகோபாலன் பயனாளிகளுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். உழவர் மன்ற தலைவர் வெங்கடேசன், வார்டு உறுப்பினர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். டி.வி.புத்தூர்: ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கி வேட்டி சேலைகளை வழங்கினார். ஊராட்சி உறுப்பினர்கள் ஜோதி, காந்தி, காசி, கிராம உதவியாளர் செல்வராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

குப்பநத்தம் கிராமத்தில் 27ம் தேதி மனுநீதி நாள்

கடலூர் :

                 குப்பநத்தம் கிராமத் தில் வரும் 27ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு: 

                 விருத்தாசலம் வட்டம் குப்பநத்தம் கிராமத்தில் வரும் 27ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. இது தொடர்பாக குப்பநத் தம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் மனுக்கள் பெறும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.  மேலும் நாளை (12ம் தேதி) காலை 9 மணிக்கு வருவாய்துறை மற்றும் இதர துறையினர் பொது மக்களிடம் இருந்து நேரடி மனுக்களை பெற உள்ளனர். பொது மக்கள் நேரடியாக மனுக்களை கொடுக் கலாம். மேலும் மனுநீதி நாளன்று மருத்துவ முகாம், விவசாய திட்டங் களின் செயலாக்கம், ஊட் டச்சத்து மற்றும் சிறுசேமிப்பு ஆகிய துறைகளின் கண்காட்சி மற்றும் செயல் விளக்கங்கள் காண்பிக்கப்படுகிறது.

Read more »

தொழுநோய் குறித்து வினாடி வினா

பண்ருட்டி :

                   பண்ருட்டி அரசு மருத்துவமனை சார்பில் மேலப்பாளையம் நகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு தொழுநோய் வினாடி வினா நிகழ்ச்சி நடந்தது.

                    நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் மலர் கொடி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை பூங்கொடி வரவேற்றார்.  மாவட்ட நலக்கல்வியாளர் நாகராசன், மேற்பார்வையாளர் ராமலிங்கம் பங்கேற்றனர். இதில் மாணவர்களுக்கு தொழுநோய் அறிகுறிகள், சிகிச்சை முறைகள், தொழுநோய் ஒழிப் பில் மாணவர்களின் பங்கு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின் நடந்த வினாடி வினா நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்ற மாணவி சரண்யா, 2ம்பரிசு பெற்ற மாணவன் வெங்கடேசனுக்கும் மற்ற மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ஞானமணி செய்திருந்தார்.

Read more »

பல்வேறு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

கடலூர் :

                 கடலூர் வள்ளியம்மை மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

                   கடலூர் வள்ளியம்மை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர் நாளை முன்னிட்டு  பள்ளிகளுக்கிடையேயான ஓவியம், வர்ணம் தீட்டுதல், கைவினை பொருட்கள் செய்தல், வாய்ப்பாட்டு, மாறுவேடம், விளம்பரம் செய்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.  அதில் சிதம்பரம் எடிசன் ஜி.அகோரம், கடலூர் தி பெஸ்ட் ஸ்கூல், சி.கே., பள்ளி, லட்சுமி சோரடியா, நியூ மில்லேனியம், பண்ருட்டி ஜான்டூவி பள்ளிகளைச் சேர்ந்த 122 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி அறக்கட்டளை தலைவர் பாலு பரிசு வழங்கினார். விழாவில் தாளாளர் வைரம் துரைசாமி, அர்ஜூன், ஒருங்கிணைப்பாளர் ஆதித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

பண்ருட்டியில் சந்தனகூடு விழா வரும் 14ம் தேதி நடக்கிறது

பண்ருட்டி :

                 பண்ருட்டி ஹஜரத் நூர் முகமது அவுலியா தர்கா கந்தூரி உரூஸ் பண்டிகை இன்று (11ம் தேதி) துவங்கி வரும் 16ம்தேதி வரை விமரிசையாக நடக்கிறது.

                     பண்ருட்டி ஹஜரத் நூர் முகமது அவுலியா தர்கா கந்தூரி உரூஸ் பண்டிகை நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதை முன்னிட்டு இன்று  பான் வாஜமா பக்கீர் மற்றும் ரிபாய் ஐமாக்கள் தர்காவிற்கு வருகை புரிதல் நிகழ்ச்சியும்,  நாளை  (12ம்தேதி)  மாலை விமரிசையாக பேண்டு வாத்தியம் மற்றும் வேடிக்கைகளுடன் கொடி ஊர்வலம் வந்து பின்  கொடியேற்றம் நடக்கிறது. மறுநாள் (13ம் தேதி)  மாலை மவுலூத் ஷரிப் ஒதி சீரணி வழங்குதல் நிகழ்ச்சியும்,  14ம்தேதி மாலை அவுலியா அவர்களின் ரவுலா ஷரீப் பீடத்தை பூக்களால் அலங் கரித்து இரவு 12 மணிக்கு மேல் சந்தனக்கூடு விழா நடக்கிறது. 15ம் தேதி திருவிளக்கு விழாவும், 16ம் தேதி குர்ஆன் ஷரிப் ஹத் தம் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் தாஜீதீன் மற்றும் உறுப்பினர்கள், ஐமாத்தார்கள்  செய்து வருகின்றனர்.

Read more »

கர்நாடக தக்காளி வரத்து பண்ருட்டியில் அதிகரிப்பு

பண்ருட்டி :

                பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டிற்கு கர்நாடகா மாநில தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

            தமிழகத்தில் தற்போது தக்காளி சீசன் இல்லாததால், ஆந்திர மாநிலத்திருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆந்திராவில் ஏற்பட்டுள்ள தெலுங்கானா கலவரத் தால் தக்காளி வரத்து தடைபட்டதால் தமிழகத்தில் தக்காளி விலை உயர்ந்தது. தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த தாவணிக்கரை பகுதியில் தக்காளி அறுவடை துவங்கியுள்ளது. இங்கிருந்து பண்ருட்டி பகுதி காய்கறி வியாபாரிகள் தக்காளியை கொள்முதல் செய்யத் துவங்கியுள்ளனர்.  கர்நாடகாவிலிருந்து மரப்பெட்டிகளில் கொண்டு வரப்படும் தக்காளியை பிளாஸ்டிக் டப் பாக்களில் (சுமார் 15 கிலோ) மாற்றி 150 ரூபாயிற்கு விற்பனை செய் கின்றனர்.  சில்லரை விற்பனையில் கிலோ 14 ரூபாயிற்கு விற்கப்படுகிறது.

Read more »

டி.ஆர்.ஓ., ஆய்வு

கடலூர் :

                பாதிரிக்குப்பத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை டி. ஆர்.ஓ., ஆய்வு செய்தார். கடலூர் பாதிரிக்குப் பத்தில் கடலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பாகம் எண்.49ல் வாக்காளர் பட்டியல் சரி பார்த்தல் பணி நடந்து வருகிறது. இப்பணியை டி.ஆர். ஓ., நடராஜன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆர்.டி.ஓ., செல்வராஜ், தாசில்தார் தட்சணாமூர்த்தி, பாதிரிக்குப்பம் ஊராட்சி தலைவர் கோமதி சிவலிங்கம் உடனிருந்தனர்.

Read more »

காலி பணியிடங்களை நிரப்ப வருவாய் அலுவலர் சங்கம் கோரிக்கை

சிதம்பரம் :

                    தாலுகா அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

                 தமிழ் மாநில வருவாய் துறை அலுவலகர்கள் சங்க வட்ட கிளை கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் தில்லைகோவிந்தன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சிதம்பரம் வட்ட கிளை தலைவராக பன்னீர் செல்வம், செயலாளராக விமல், பொருளாளராக செல்வம், இணை செயலாளராக நாகேந்திரன், துணை தலைவராக ரவிச் சந்திரன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்களாக கோவிந்தராசு, மாலதி தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட மையத்தின் சார்பில் மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் ராஜாராம், பொருளாளர் மோகன் பங்கேற்றனர். செல்வம் நன்றி கூறினார். தாலுகா அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண் டும், அனைத்து அலுவலகங்களுக்கும் இரவு காவலர் நியமிக்க வேண்டும்.

Read more »

நூலகத்துறை சார்பில் பேச்சு, கட்டுரை போட்டி

விருத்தாசலம் :

              விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே நூலகத்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

               விருத்தாசலம் கிளை நூலகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இடையே "நமது உலகம் நூலகம்' எனும் தலைப் பில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப் பட்டது.  கம்மாபுரம், மங்கலம்பேட்டை, நெய்வேலி, முகாசபரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பேச்சு போட்டியில் டேனிஷ் மிஷன் பள்ளி மாணவன் செல்வமணி முதலிடமும், பாத் திமா பள்ளி மாணவர் அருண்  2 ம் இடமும் பெற்றனர். கட்டுரை போட்டியில் நெய்வேலி என்.எல்.சி., பள்ளி மாணவி மஞ்சுளா முதலிடமும், அபிராமி  2 ம் இடமும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சித்தார்த்தன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். கிளை நூலகர் விஜயலட்சமி, ஆசிரியர்கள் தெய்வமணி, பக்கிரிசாமி, பூவராகசுவாமி, அண்ணாமலை, சம்பந்தம், நூலகர்கள் சண்முகம், பாலகிருஷ் ணன், மனோகரன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மாணவர்களுக்கு வரவேற்பு

கடலூர் :

              புவி வெப்ப மயமாதலை தடுக்கும் பொருட்டு விருதுநகர் மாவட்டத்திலிருந்து வந்த என்.சி.சி., மாணவர்களின் விழிப்புணர்வு பேரணிக்கு கடலூரில் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

                      விருதுநகர் மாவட்டம் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி என்.சி.சி., மணவர்களின் 6 நாள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கடந்த 6ம் தேதி கல்லூரி வளா கத்தில் துவங்கியது. இப் பேரணி மூலம் புவி வெப் பமயமாதலை தடுப்பது, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, ரத்த தானம் ஆகியவைகளை விளக்கி 480 கி. மீட்டர் தூரம் பயணம் மேற்கொள்கின்றனர். என்.சி.சி., அதிகாரி மேஜர் இளங்கோவன் தலைமையில் புறப்பட்ட பேரணி 25 மாணவர்களுடன் மதுரை, திருப்பத் தூர், புதுக்கோட்டை, தஞ் சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் வழியாக நேற்று கடலூர் வந்தது. கடலூரில் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் முன்னாள் தலைவர் வக் கீல் அருணாசலம் வரவேற்றார். நிகழ்ச்சியில் தலைவர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, சுரேஷ் ஜெயின், உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நேற்று மதியம் புறப்பட் டது. புதுச் சேரி, விழுப்புரம், விருத் தாசலம், திருச்சி, திண்டுக் கல் வழியாக வரும் 12ம் தேதி பிரசாரத்தை நிறைவு செய்கின்றனர்.

Read more »

விவசாயிகளுக்கு பயிற்சி

விருத்தாசலம் :

          விருத்தாசலம் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் பயிர் பாதுகாப்பு கருவிகள் செயல்முறை பயிற்சி நடைபெற உள் ளது.

இதுகுறித்து வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பத்மநாபன் விடுத்துள்ள செய்தி குறிப்பு:

                       விருத்தாசலம் பூதாமூர் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பயிர் பாதுகாப்பு கருவிகளை தேர்வு செய்தல், இயக்குதல், பராமரித்தல் குறித்து விவசாயிகளுக்கு செய்முறை பயிற்சி அளிக் கப்பட உள்ளது. வரும் 21ம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை நடைபெறும் செயல்முறை பயிற்சியில் அடிப்படை கல்வி தகுதியுடைய, 20 வயதிற்கு மேற் பட்ட சிறு, குறு விவசாயிகள், மகளிர்கள் கலந்து கொள்ளலாம். ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் வரும் 18 ம் முதல் 20 ம் தேதிக்குள் தங்களது பெயரை நேரில் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கீரப்பாளையத்தில் நுகர்வோர் சங்கம் துவக்கம்

புவனகிரி :

                 கீரப்பாளையத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் துவக்க விழா நடந்தது.

                 முன்னாள் ஊராட்சி  தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். திருமாவளவன் முன்னிலை வகித்தார். டாக்டர் செந் தில்குமார் வரவேற் றார். ஊராட்சி தலைவர் கிருஷ் ணவேணி துவக்கவுரையாற்றினார்.  எம்.பி., அழகிரி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாவட்ட பொதுச் செயலாளர் நிஜாமுதீன் சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். பாரதியார் கிராம வங்கி இயக்குனர் துரை பாலசந்தர், கடலூர் சித்த மருத்துவ சங்க செயலாளர் பூபதி, மாவட்ட நுகர்வோர் குழுக் களின் கூட்டமைப்பு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், கவுன்சிலர் இந்திராணி, சவுந்தரபாண்டியன், ஒருங்கிணைப்பாளர் மோ கனாம்பாள், ஊராட்சி துணைத் தலைவர் ராஜகோபால், செந் தில், புகழேந்தி, சந்தோஷ் குமார் பங்கேற்றனர்.

Read more »

இலவச 'டிவி' வழங்கும் விழா

சேத்தியாத்தோப்பு :

               வடக்குப்பாளையத் தில் இலவச கலர் "டிவி' வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார்.  கீரப்பாளையம் ஒன்றிய சேர்மன் செந்தில்குமார், டி.ஆர்.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தனர். தாசில்தார் ராமலிங்கம் வரவேற்றார். அமைச்சர் பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு இலவச "டிவி'களை வழங்கினார்.

Read more »

என்.எல்.சி., முற்றுகை போராட்டம் : இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை

பண்ருட்டி :

               வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்காவிட்டால் என்.எல்.சி., அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                     இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பழனிமுருகன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நெய்வேலியில்  நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிக்கு வந்தவர்கள் நெய் வேலி  21ம் பிளாக்கில் கடந்த 40 ஆண்டாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஐந்தாயிரம் குடியிருப்புகள் இருந்த போதிலும், சாலை, சாக்கடை மற்றும் மின் இணைப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை. மின் இணைப்புக்கு கட்டணம் செலுத்த இப்பகுதி மக்கள் தயராக இருந்தும் மின் இணைப்பு வழங்கப் படவில்லை.  ஆனால், அதே பகுதியில் பெட்ரோல் பங்க், கிறிஸ்துவ மற்றும் இஸ் லாமிய வழிபாட்டு தலங்களுக்கு மின் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. இந்து மக்கள் வாழும் பகுதியில் மின்இணைப்பு வழங்காமல் அலைக ழித்து வருகின்றனர். என். எல்.சி., நிர்வாகம் 30 நாட் களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும். இல்லையெனில் என்.எல்.சி., அலுவலகம் முன் முற்றுகை போ ராட்டம் நடத்தப்படும்.

Read more »

மனதை சிதறவிடாமல் பணியாற்றுங்கள் : டிரைவர்களுக்கு டி.எஸ்.பி., அட்வைஸ்

கடலூர் :

                விபத்தில் இருவர் இறந்தால், டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய கலெக்டர் பரிந்துரைத் துள்ளதாக டி.எஸ்.பி., பேசினார்.

                க    டலூரில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. கடலூர் மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். துணை மேலாளர் (தொழில்நுட்பம்) ராஜபாண்டியன் வரவேற்றார். துணை மேலாளர்கள் இயக்கம் அன்பழகன், வணிகம் உதயக்குமார், கிளை மேலாளர்கள் குணசேகரன், கோவிந் தசாமி வாழ்த்துரை வழங்கினர். விழாவையெட்டி நடத்திய கட் டுரை மற்றும் வினாடி வினா போட் டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய கடலார் டி.எஸ்.பி., ஸ்டாலின் பேசியதாவது:சாலை பாதுகாப்பு வாரவிழா நம் அனைவருக்காகவும் கொண்டாடப்படுகிறது. அரசு பணியில் உள்ளவர்களில் போலீஸ், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் ஆகி யோர் மக்கள் சேவையே மகேசன் சேவை என பணியாற்ற வேண்டும். டிரைவர்களுக்கு பணியின் போது கவனம் முக்கியம். மனிதனை வழி நடத்திச் செல்வது மனம் . அந்த மனதை சிதற விடாமல் பணியாற்ற வேண்டும்.

               தமிழகத்தில் தினமும் சராசரியாக 30 பேர் விபத்தில் இறக்கின்றனர். இதில் அதிகளவு கனரக வாகனங்களால் நடக்கிறது. எனவே பணியின் போது  பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். விபத்து ஏற்பட்டு இருவர் இறந்தால் டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய கலெக்டர் பரிந்துரைத்துள்ளார். அரசு பஸ் டிரைவர்களுக்கும் இந்த முறையை கொண்டு வர பரிசீலனையில் உள்ளது. எனவே ஒவ்வொரு டிரைவரும் காலை எழுந்ததும் இன்று விபத்தில்லாமல் பணி செய்ய வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

Read more »

பல்வேறு பள்ளிகளில் சாலை பாதுகாப்பு வார விழா

கடலூர் :

            மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது.

             கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி அருகில் நடந்த விழாவில் டிஎஸ்.பி., ஸ்டாலின், முதன்மை கல்வி  அலுவலர் அமுதவல்லி ஆகியோர் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

பண்ருட்டி:  

                   ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு போக்குவரத்து காவல் துறை இன்ஸ்பெக்டர்  தணிகாசலம் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் வீரதாஸ் முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

சிதம்பரம்: 
                         
                  ராமசாமி செட்டியார் பள்ளியில் தமிழ்நாடு நுகர்வோர் குழுமம் சார்பில் நடந்த விழாவிற்கு இணை செயலாளர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். செயலாளர் அப்பாவு வரவேற்றார்.  டி.எஸ்.பி., மூவேந்தன், மோட் டார் வாகன ஆய்வாளர் காமராஜ், ரங்கநாதன், பேசினர். தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, சிவராமசேது, கொளஞ்சிமணி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

 மங்கலம்பேட்டை: 

                         அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த விழாவிற்கு இன்ஸ்பெக்டர் திருமால் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் மாயவேல் முன்னிலை வகித்தார். அரிமா சங்க தலைவர் சிவா, பேரூராட்சி தலைவர் கோபுபிள்ளை மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள், ஆசிரியர் கள், மாணவர்கள் கலந்து கொண் டனர்.

கம்மாபுரம்: 

                          தர்மநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த விழாவிற்கு டி.எஸ்.பி., ராஜசேகரன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் குருசாமி முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விளக்கப்பட்டது. பின்னர் சாலையில் சென்ற வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பூதாமூர்: 

                        நகராட்சி நடுநிலை பள்ளியில் இளங்கோ இலக்கிய மன்றம் சார்பில் சாலை பாதுகாப்பு நிறைவு விழா நடந்தது.  உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பஞ்சநாதன் தலைமை தாங்கினார். போக்குவரத்து இன்ஸ் பெக்டர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார்.  தலைமை ஆசிரியர் வெங்கடாஜலபதி, இலக்கிய மன்ற மாணவ செயலாளர் காளியம்மாள், ஆசிரியர் பழனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

பொங்கல் விழா

சிதம்பரம் :

                   சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளியில்  பொங்கல் விழா கொண் டாடப்பட்டது. மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் கோவிந் தராஜன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி செந்தில்குமார் வரவேற் றார். விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மை துறை தலைவர் பஞ்சநதம் பங் கேற்று ஆசிரியர்களின் செயல்பாடுகளை பாராட்டினார்.   ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சங்க உறுப்பினர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Read more »

நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் திட்டக்குடியில் 210 பேர் விண்ணப்பித்தனர்

திட்டக்குடி :

                      திட்டக்குடியில் அமைப் புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் 210 பேர் உறுப்பினர்களாக விண்ணப்பித்தனர்.

                 திட்டக்குடி செங்குந்தர் மண்டபத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நேற்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடந்தது.  நலவாரிய அலுவலர்கள் ஜெரால்டு, ராதா, வி.ஏ.ஓ., பிச்சைப் பிள்ளை உள்ளிட்டோர் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட கண்காணிப்பாளர் ராதா முகாமிற்கு தலைமை தாங்கி, பயனாளிகளிடம் விண் ணப்பங்களை பெற்றார். இதில் உடலுழைப்பு, கட் டுமானம், தையல், கை வினை, பொற் கொல் லர், விசைத்தறி, சலவை உள் ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் 210 பேர் உறுப்பினர்களாக விண் ணப்பம் வழங்கினர். முகாமில் தி.மு.க., நகர செயலாளர் பரமகுரு, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு, வி.ஏ.ஓ., பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

பண்ருட்டி பள்ளியில் நூலகத்துறை போட்டி

பண்ருட்டி :

                  பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுநூலகத்துறை சார்பில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுநூலகத்துறை சார்பில் வட்ட அளவில் "நமது உலகம் நூலகம்' என்கிற தலைப்பில் கட்டுரை,பேச்சு, வாசகம் போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.  உதவி தலைமை ஆசிரியர்கள் பற்குணன், வடிவேல் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் சுப்ரமணியன், ஏழுமலை, சுசீலா, சற்குணாம்பாள், சுமதி, கிரிஜா, ஆண் டாள், ஜெயகுமாரி நடுவர்களாக செயல் பட்டனர்.  போட்டியில் முதல்பரிசை ஜான்டூயி பள்ளி மாணவி சவுமியாவும், 2ம் பரிசு நெய்வேலி ஐவகர் பள்ளி மாணவன் குமணன், 3ம் பரிசை திருத்துறையூர் பள்ளி மாணவன் பிரவீன்குமார் பெற்றனர். என்.எஸ்.எஸ்., ஆசிரியர் மோகன்குமார் நன்றி கூறினார்.

Read more »

இலக்கிய வார விழா

நெல்லிக்குப்பம் :

                 நெல்லிக்குப்பம் ஆர்.ஆர். மெட்ரிக் பள்ளியில் இலக்கிய வாரவிழா போட்டிகள் நடந்தது. பள்ளி நிர்வாகி லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் மாலதி வரவேற்றார். பிரேமலதா டேவிஸ் மார்ட்டின், புனிதா, இலக்கியா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஓவியம், கோலம், காய்களில் உருவம் செய் தல், பேச்சு, ஒப்புவித்தல் உட்பட பல போட்டிகளில் மாணவ,  மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Read more »

தேசிய மனித உரிமை நுகர்வோர் பாதுகாப்பு இயக்க கூட்டம்

கடலூர் :

               தேசிய  மனித உரிமை  நுகர்வோர் பாதுகாப்பு  இயக்க கூட்டம்  புதுப்பாளையத்தில் நடந்தது. கடலூர் தேசிய மனித உரிமை  பாதுகாப்பு இயக்க கடலூர் மாவட்ட  செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். நகர தலைவர் தேவராயர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கடலூர் பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரன்ஸ்  சாலையில் மத் திய ரயில்வே நிர்வாகம் மற்றும் மாநில அரசும் சேர்ந்து  உடனடியாக  சுரங்கப்பாதை  அமைத்து தர நடவடிக்கை  எடுக்க வேண்டும் உள்ளிட்ட  பல  தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. கடலூர் மாவட்ட  நிர்வாகிகள் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

கடலூர் முதுநகரில் போக்குவரத்து நெரிசல் போலீசார் அதிரடி நடவடிக்கை

கடலூர் :

               கடலூர் முதுநகரில் மீன் மார்க்கெட் அருகே வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

          கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட் அருகே இருசக்கர வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் போக் குவரத்து நெரிசல் ஏற் பட்டு வந்தது. இதனால் மீன் மார்க்கெட் அருகே வாகனங்கள் நிறுத்த தடை செய்ய முடிவு செய்யப்பட் டது.

                             அதன்படி மீன் மார்க் கெட்டிற்கு வருபவர்களின் இருசக்கர வாகனங்களை மார்க்கெட்டிற்கு எதிரில் ரயில் நிலையத்திற்கு செல் லும் வழியில் கோவில் அருகே உள்ள இடத்தில் நிறுத்த போலீசார் ஏற்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி., ஸ்டாலின் மற்றும் அதிரடிப்படை போலீசார் நேற்று முதுநகரில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மீன் மார்க்கெட் பகுதியில் நிறுத்தியிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தியதோடு, வாகனங்களை கோவில் அருகில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டனர். அப்பகுதியில் பிளாட் பாரத்தை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண் டும் என்றனர்.

Read more »

பள்ளியில் முப்பெரும் விழா

கிள்ளை :

               சிதம்பரம் அடுத்த கொடிப்பள்ளம் அரசு உயர் நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் மனோன்மணி தலைமை தாங்கினார். ஆசிரியர் தமிழ்ச் செல்வன் வரவேற்றார். திருஞானகுமார், மனோகரன், ரவிச் சந்திரன் முன்னிலை வகித்தனர்.  பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தாஜூதீன் மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கினார். சமூக சேவகர் முகமது அயூப் சாலை பாதுகாப்பு விழிப் புணர்வு ஊர்வலத்தை  துவக்கி வைத்தார்.  ஊர்வலத்தில் மாணவர்கள் சாலை விதிகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினர். ஆசிரியர்கள் செந்தமிழ்ச் செல்வி, நிர்மலா, கே. நிர்மலா பங்கேற்றனர். சமூக சேவை மற்றும் கல்வி சேவைக்கு அம் பேத்கர் விருது பெற்ற  ஆசிரியர் ரவிச்சந்திரனை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Read more »

வேளாண் கருவிகள் கையாள பயிற்சி பதிவு செய்து கொள்ள அறிவிப்பு

சிதம்பரம் :

                 வேளாண் கருவிகள் கையாள்வது குறித்த பயிற் சியில் சேர்ந்து பயனடைய தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண் அதிகாரி அறிவித்துள்ளார்.

இது குறித்து சிதம்பரம் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பத்மநாதபன் விடுத் துள்ள செய்திகுறிப்பு:

                வேளாண் பொறியியல் துறை, சிதம்பரம் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் மூலம்  வரும்  21ம் தேதி முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை பவர்டில்லர் பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது.  மேலும் மேம்படுத்தப் பட்ட பல வகையான வேளாண் கருவிகள் தெரிவு செய்தல், கையாளுதல் மற்றும் பராமரித்தல் குறித்து பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 22ம் தேதி வரையும் நடக்கிறது.  இந்த இரு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விருப்பம் உள்ள படித்த விவசாயிகள் பெயரை சிதம்பரம் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 19ம் தேதிக்குள் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

Read more »

மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

கடலூர் :

                கடலூர் நகராட்சி சார்பில் 67 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

                     கடலூர் நகராட்சி பகுதியில் உள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் 67 மையங்களில் நடந்தது. மேலும் நடமாடும் குழு மூலம் நகரின் பல்வேறு இடங்களுக்கு வீடு தேடி சென்று சொட்டு மருந்து போடப்பட்டது. கடலூர் பஸ் நிலைய முகாமை டி.ஆர்.ஒ., நடராஜன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., அய்யப்பன், சேர் மன் தங்கராசு, துணை சேர்மன் தாமரைச் செல்வன், ஆர்.டி.ஓ., செல்வராஜ், சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் ஜெயவீரகுமார், துணை இயக்குனர் மீரா, நகராட்சி கமிஷனர் குமார், சுகாதார ஆய்வாளர் சக்திவேல், தாசில்தார் தட்சணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
  திட்டக்குடி: 

                  வதிஷ்டபுரம் துணை சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை பேரூராட்சி தலைவர் மன்னன் துவக்கி வைத்தார். ஈ.கீரனூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் திருமாவளவன் போலியோ சொட்டு மருந்தினை குழந்தைகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் கமலி, கவுன்சிலர்கள் செல்வம், செந்தில் குமார், ராஜேந்திரன், தி.மு.க., நகர செயலாளர் பரமகுரு உள் ளிட்டோர் பங்கேற்றனர். கோழியூரில் நடந்த முகாமை கவுன்சிலர்கள் ராஜாஅலெக்சாண்டர், செல்வி துவக்கி வைத்தனர்.

 பெண்ணாடம்: 

                      பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த முகாமை பேரூராட்சி தலைவர் அமுதலட்சுமி துவக்கி வைத்தார். துணைத்தலைவர் காதர், தி.மு.க., நகர செயலாளர் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். டாக்டர்கள் வலம்புரிசெல்வம், தமிழரசன் மருந்து வழங்கினார். பண்ருட்டி: நகராட்சி சார்பில் 36 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டது. பஸ் நிலைய முகாமை சேர்மன் பச்சையப்பன் துவக்கி வைத்தார். நகராட்சி கமிஷ்னர் உமாமகேஸ்வரி, துணை சேர்மன் கோதண்டபாணி, சுகாதார அலுவலர் பாலசந்திரன், ஆய்வாளர் சுதாகரன், மேற் பார்வையாளர் கொளஞ்சியப் பன், வருவாய் ஆய்வாளர் பூபால சந்திரன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

சிறுபாக்கம்: 

                    நல்லூரில் ஒன்றிய சேர்மன் ஜெயசித்ரா தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்.  ஒன்றிய தி.மு.க., செயலாளர் பாவாடைகோவிந்தசாமி, மாவட்ட கவுன் சிலர் தங்கதுரை, ஒன்றிய கவுன்சிலர் திவிநாயகம், டாக்டர் மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  சிறுநெசலூரில் வட்டார காங்., இளைஞரணி தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.  செவிலியர் புஷ்பாவதி, அங்கன்வாடி பணியாளர் சுப்புலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிள்ளை: 

                   மேலத்திருக்கழிப்பாலையில்  பொன்னுசாமி, பிச்சாவரத்தில் வாசுசரவணன், கோவிலாம் பூண்டியில்  சிவசுப்ரமணியன், மீதிகுடியில்  சின்னதுரை, தில்லைவிடங்கில் மோகன்தாஸ், நஞ்சைமகத்துவாழ்க்கையில்  தனசேகரன், கீழ் அனுவம்பட்டில் மனோகர், நக்கரவந்தன்குடியில் குலசேகர், உத்தமசோழமங்கலத்தில் ஜெயசுதா, கணக்கரப் பட்டில் வனிதா, பின்னத்தூரில் மாலதி, சி.முட்லூரில் தவமந்திரிவெங்கடேசன், கொத்தங்குடியில் வேணுகோபால், மேல் அனுவம்பட்டில் லட்சுமணன் துவக்கி வைத்தனர்.

நெல்லிக்குப்பம்:

            நகராட்சி சார்பில் நடந்த முகாமை தாசில்தார் பாபு துவக்கி வைத்தார். நகராட்சி டாக்டர் மகேஷ்குமார், துப்புரவு அலுவலர் கிருஷ்ணகுமார், ஆய்வாளர் ஹரிநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரம்: 

                  நகராட்சி பகுதியில் அனைத்து வார்டுகளிலும் உள்ள பள்ளி, மருத்துவமனை, அங்கன்வாடி, பஸ் நிலையம் ,சத்துணவு மையம் உள்ளிட்ட 23 மையங்களில் சொட்டு மருந்து போடப்பட்டது.  நெல்லுக்கடை தெரு மகப்பேறு மருத்துவமனையில் நகர மன்ற தலைவர் பவுஜியா பேகம் முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கமிஷனர் ஜான்சன், இன்ஜினியர் மாரியப்பன்,  நகர் நல அலுவலர் கோவிந்தன், டாக்டர் ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் அப்பு சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மாவட்டத்தில் 114 இடங்களில் திறப்பு

கடலூர் :

                       கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 114 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது. தமிழகத்தில் சம்பா நெல் அறுவடை துவங்கியுள்ளது. அறுவடை செய்யும் நெல்லை இடைத் தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வருகிறது.

                 அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 112 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இந்த ஆண்டு 114 கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

                       அதன்படி வீரப்பெருமாநல்லூர், சிறுவரப்பூர் பகுதிகளில் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதி பைத்தம்பாடி மற்றும் வீரபெருமாநல்லூரிலும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, கடலூர் தாலுக்காக்களில் நேற்று 66 கொள்முதல் நிலையங்கள் திறக்கப் பட்டது. சிதம்பரம் தாலுகாவில் 46 கொள்முதல் நிலையங்கள் வரும் 20ம் தேதி திறக்கப்பட உள்ளது.

Read more »

அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் பதவிக்கு 5 பேர் மனு தாக்கல்

கடலூர் :

             அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்  (கிழக்கு) பதவிக்கு நேற்று பண்ருட்டியில் 5 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

                   கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான மனுத்தாக்கல் நேற்று பண்ருட்டி ஸ்ரீராம் மகாலில் நடந்தது. முன்னாள் அமைச்சர் வளர்மதி, சைதை செல்வம் தேர்தல் அதிகாரிகளாக பங்கேற்றனர். அவர்களிடம் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., நிர்வாகிகள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

                  கடலூர் மாவட்ட செயலாளர்( கிழக்கு) பதவிக்கு தற்போதைய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத், முன்னாள் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட பேரவை செயலாளர் பன்னீர்செல்வம் உட்பட 5 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதேப் போல பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பலர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Read more »

வேளாண் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

கடலூர் :

                     தேசிய வேளாண்  காப் பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் உணவுப்பயிர்கள் நெல், கேழ்வரகு, சோளம், பருத்தி, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் காப்பீடு செய்யப் படுகின்றன. இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

                    குத்தகைதாரர்கள், வங் கிக்கடன் பெறுவோர் மற் றும் கடன் பெறாதோர் உட் பட அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். சராசரி மகசூலின் 150 சதவீதம் மதிப்பு வரை காப்பீடு செய்யலாம். இதில் பெரும் பங்காக விவசாயத்துறை பயிர்கடன் பெறா விவசாயிகளை கூட்டி அவர்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்தி விவசாயிகள் அவரவர் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கியிலேயே சேர்க்கப்
படுகின்றனர்.

                ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரத்திலும் மாநில அரசின் விவசாயத்துறையினரால் பயிர் அறுவடை காலத்தில் பதினாறு, பத்து பயிர் அறுவடை சோதனைகள் நடத்தப்பட்டு நடப்பு பருவத்தில் சராசரி மகசூலை ஒப்பிடும்போது நடப்பு பருவத்தின் மகசூல் எவ்வளவு குறைந்திருக்கிறதோ அந்த விகிதப்படி  அவரவர் காப்பீடு செய்த தொகைக்கு ஏற்ப நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு மண்டல மேலாளர் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட், தம்புச்செட்டித் தெரு, பாரிமுனை, சென்னை என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

Read more »

அறுவடை நேரத்தில் மழை பெய்ததால் விவசாயிகள் தவிப்பு! : மெஷினால் முடியாது; ஆட்கள் கிடைப்பார்களா?

கடலூர் :

                            மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்த மழையால் இன்னும் 4 முதல் 5 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெல் அறுவடைக்கு மெஷினை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விவசாயத் திற்கு ஆள் பற்றாக்குறையால் அறுவடைக்கு ஆட் கள் கிடைப்பார்களா என விவசாயிகள் தவிப்பில் உள்ளனர்.

                          கடலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக் கர் சம்பா நெல் பயிரிடப்பட்டது. ஜனவரி முதல் தேதியிலிருந்து அறுவடை துவங்கியது. கடந்த 10 நாட்களில் அண்ணாகிராமம், கம்மாபுரம்  மற்றும் காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் வடவாறு பாசன வாய்க்கால் உள் ளிட்ட மாவட்டத்தின் பல் வேறு பகுதி விவசாயிகள் 25 ஆயிரம் ஏக்கர் வரை நெல் அறுவடை செய்துள் ளனர்.

                        கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக நெல் அறுவடை செய்த மற்றும் அறுவடைக்கு தயாராக உள்ள  விவசாயிகளும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அறுவடை செய்த நெல்லை வியாபாரிகளிடம் விற்பனை செய்ய முடியாத நிலையிலும் பாதி அறுவடை செய்தும் பாதி அறுவடை செய்யாமலும் உள்ள நிலையில் அறுவடை பணிகளும் பாதிக் கப்பட்டுள்ளது.

                விருத்தாசலம், பெண்ணாடம், குள்ளஞ்சாவடி, வடலூர், மருவாய், பில் லாலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் அறுவடை செய்யப்படாத இன்னும் 4, 5 தினங்களில் அறுவடை செய்ய தயாரான நிலையில் உள்ள நெற் பயிர்கள் மழையால் கதிர்கள் சாய்ந்து நிலத்தில் படுத்து விட்டது.  இப்படிப்பட்ட நிலங்களில் இனி மெஷினை வைத்து அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் நிலத்தில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளதால் மெஷினை இறக்க முடியாது.

                     இந்த நிலையில் ஆட்களைக் கொண்டுதான் அறுவடை செய்ய வேண்டும். ஆனால் தற்போது விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக் குறை உள்ள நிலையில் அறுவடைக்கு ஆட்கள் கிடைத்து உரிய காலத்தில் அறுவடை செய்ய முடியுமா என விவசாயிகள் மத் தியில் கேள்வி எழுந் துள் ளது. இதே நிலை நீடித் தால் நிலத்தில் சாய்ந்த நெற் பயிர்களில் உள்ள நெல் மணிகள் உதிர்ந்து முளைக்கத் துவங்கி விடும்.

                     ஏற்கனவே பருவம் தவறிய மழை மற்றும் புகையான் தாக்குதலாலும், ஒரு லட்சம் ஏக்கரில் பயிரிடப் பட்ட "பிபிடி' ரக விதை நெல்லில் ஏற்பட்ட கலப்படத்தாலும் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி மழையில் நனைந்து நிறம் மாறுவதாலும் அறுவடை செய்தாலும் குறைந்த விலைக்குத் தான் விற்க முடியும். நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் எடுப்பதாக இருந்தால் கூட 22 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும்.  ஆனால் தற் போது 15 சதவீதம்தான் இருக்கிறது. ஈரப்பதம் அதிகமானால் லாபம் கிடைக் கும். குறைந்தால் நஷ்டம் ஏற்படும் என்ற நிலையில் ஈரப்பதத்தின் சதவீதத்தை கூட்ட நெல்லை காய வைக்க களம் கூட இல் லாத நிலை உள்ளது.

                         இதுபற்றி விவசாயிகள் கூறுகையில் "எந்த ஆண் டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு நெல் பயிரிட்ட விவசாயிகள் பல் வேறு இன்னல்களை சந்திக்க நேர்ந்துள்ளது. இதுவரை அறுவடை செய் துள்ள விவசாயிகள் 50 சதவீதம் நஷ்டத்தை சந்திக்க நேர்ந்துள்ளது. மழை இன்னும் நீடித்தால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத நிலை ஏற்படும்' என சோகத்துடன் தெரிவித்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior