உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 24, 2010

ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கு 3 வகை வினாத்தாள்

                ரயில்வே துறையில் காலியிடங்களை நிரப்ப, ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) நடத்தும் எழுத்துத் தேர்வுகளுக்கு தலா 3 வெவ்வேறு வகையான வினாத்தாள்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

           மும்பையில் ரயில்வே தேர்வு வாரியம் கடந்த ஜுனில் நடத்திய பணியிடத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் முன்னரே வெளியானது சிபிஐ விசாரணையில்  தெரியவந்தது. இதுதொடர்பாக மும்பை ஆர்.ஆர்.பி. தலைவர், அவரது மகன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், எழுத்துத் தேர்வுகளை நடத்துவதில்  புதிய விதிகளை ஆர்.ஆர்.பி. இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. 

                 இதன்படி அனைத்து எழுத்துத் தேர்வுகளுக்கும் தலா 3 வெவ்வேறு வகையான வினாத்தாள்கள் தயாரிக்கப்படும். இந்த வினாத்தாள்கள் இளஞ்சிவப்பு, வெளிர்பச்சை, வெள்ளை ஆகிய நிறமுள்ள தாள்களில் அச்சிடப்படும். ஒரே தேர்வு மையத்தில் இந்தத் தேர்வுகளை எழுதும் ஒவ்வொரு 3 மாணவர்களுக்கும் வெவ்வேறு வகையான இந்த 3 வினாத்தாள்கள் தனித்தனியே வழங்கப்படும். இந்த வினாத்தாள்களில் வினாக்களும் மாற்றப்பட்டு இருக்கும். 

                   இதுபோன்று மேலும் பல்வேறு விதிகளை ரகசியமாக நடைமுறைப்படுத்த ஆர்.ஆர்.பி. முடிவு செய்துள்ளது.கொள்குறி முறையில் (ஆப்ஜெக்டிவ்) தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 5 மொழிகளில் வினாக்கள் இடம் பெற்றுள்ள கார்பன் அச்சுப் பிரதிகள் இணைக்கப்பட்ட வினா-விடைத் தாள்களில் தேர்வுகளை எழுதலாம்.250 வேலையிடங்களுக்கு 1.24 லட்சம் பேர் விண்ணப்பம்: இந்த ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் ரயில்வே துறையில் காலியாக உள்ள 40 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆர்.ஆர்.பி. திட்டமிட்டுள்ளது.  தெற்கு ரயில்வே மண்டலத்தில் காலியாகவுள்ள 2,500 வேலை இடங்களை நிரப்ப சென்னை ஆர்.ஆர்.பி. இலக்கு நிர்ணயித்துள்ளது.   

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு: 

                    சிக்னல் பிரிவு, இயக்கப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான வேலை இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விரைவில் எழுத்துத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வுகளை எழுத விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 29-ம் தேதி ஆகும்.  

                  ஆர்.ஆர்.பி. நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் தேர்வு மைய அனுமதிச் சீட்டுகள் அவர்களது முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை அனுமதிச் சீட்டு கிடைக்காதவர்கள் எழும்பூர் எத்திராஜ் கல்லூரி அருகில் உள்ள சென்னை ஆர்.ஆர்.பி. அலுவலகத்துக்கு தேர்வுக்கு முந்தைய வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நேரில் வர வேண்டும்.

மேலும் தகவல்களை அறிய இணையதள முகவரி

Read more »

கடலூரில் இருந்து பெங்களூர், நெல்லைக்கு ரயில்கள் இயக்க கோரிக்கை

கடலூர்:

               கடலூரில் இருந்து பெங்களூர், நெல்லை உள்ளிட்ட நகரங்களுக்கு புதிய ரயில்கள் இயக்க வேண்டும் என்று, தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் கோரிக்கை விடுத்தார்.

தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அவர் திங்கள்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:

                   மாவட்டத் தலைநகரமாகவும் புகழ்பெற்ற கோயில்கள் உள்ள நகரமாகவும் அமைந்துள்ள கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, சோழன் எக்பிரஸ் நின்று செல்ல உத்தரவிட்டதற்கு நன்றி. மேலும் நீண்டநாள் கோரிக்கையான, கடலூரில் இருந்து விருத்தாசலம், சேலம் வழியாக பெங்களூருக்கு புதிய ரயில்கள் இயக்க வேண்டும். 

                  சென்னையில் இருந்து விழுப்புரம், கடலூர் வழியாக நெல்லைக்கு ரயில்கள் இயக்க வேண்டும். கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலை, திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும். காலை மற்றும் மாலை வேளைகளில், கடலூர், விழுப்புரம் வழியாக சதாப்தி, ஜனசதாப்தி ரயில்களை இயக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

Read more »

சிதம்​ப​ரம் அரிமா சங்​கம் சார்பில் 250 பேருக்கு கண் பரி​சோ​தனை

சிதம்​ப​ரம்:

                  சிதம்​ப​ரம் அரிமா சங்​கம் மற்​றும் புதுச்​சேரி அர​விந்த் கண் மருத்​து​வ​மனை ஆகியவை இணைந்து அர​சி​னர் பெண்​கள் மேல்​நி​லைப் பள்​ளி​யில் இல​வச கண் சிகிச்சை முகாமை ஞாயிற்​றுக்​கி​ழமை நடத்​தி​யது.​

               முகா​மில் 250-க்கும் மேற்​பட்​டோ​ருக்கு கண் பரி​சோ​தனை செய்​யப்​பட்​டது.​ 40 பேர் அறுவை சிகிச்​சைக்கு தேர்வு செய்​யப்​பட்டு புதுச்​சேரி அர​விந்த் கண் மருத்​து​வ​ம​னைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​ட​னர்.​ முகாமை அரிமா சங்க முன்​னாள் தலை​வர் கே.கண​பதி தொடங்கி வைத்​தார்.​ த​லை​வர் ஆர்.தர்​பா​ரண்​யன் தலைமை வகித்​தார்.​ அரசு பெண்​கள் மேல்​நி​லைப் பள்ளி தலைமை ஆசி​ரி​யர் ராஜன்,​​ செய​லர் ராஜ​மா​ணிக்​கம்,​​ பொரு​ளா​ளர் டி.வி.கே.பாபு உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.

Read more »

சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கனில் டாஸ்மாக் மதுக்கடை பூட்டை வெல்டிங் மூலம் அகற்றி திருட்டு

கிள்ளை : 

                 சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கன் டாஸ்மாக் மதுபானக் கடையின் பூட்டை வெல்டிங் மிஷினால் "கட்' செய்து, கடையில் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பிராந்தி மற்றும் பீர் பாட்டில்களை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

               கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கனில் கீழச்சாவடி ஆத்துமதகு அருகில் டாஸ்மாக் இயங்கி வருகிறது. அள்ளூர் ஜோதிரத்தினம் சூப்பர்வைசராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இரும்பு ஷட்டர் கதவை மூன்று பூட்டுகளால் பூட்டி விட்டுச் சென்றார். காலையில் வந்து பார்த்த போது, நடுவில் இருந்த பூட்டு மட்டும் வெல்டிங் மிஷின் மூலம் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். 

                   உள்ளே சென்று பார்த்த போது 2,352 பிராந்தி பாட்டில்கள் அடங்கிய 49 கேஸ் மற்றும் 144 பீர் பாட்டில்கள் அடங்கிய 12 கேஸ் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு இரண்டு லட்சத்து 600 ரூபாய். மேலும்  180 ரூபாய் ரொக்கம் மற்றும் சில்லறை காசுகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். தகவலறிந்த கிள்ளை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இது குறித்து  ஜோதிரத்தினம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து பீர் மற்றும் பிராந்தி பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Read more »

சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள் நிறுத்த ஷெட் இல்லாமல் மாணவ, மாணவிகள் அவதி

நடுவீரப்பட்டு : 

                 சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள்கள் நிறுத்த ஷெட் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். 

                  பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுப்பாளையம், சிலம்பிநாதன்பேட்டை, நெல்லித் தோப்பு, இடையர்குப்பம், கொட்டிக்கோணாங்குப்பம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 550 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பெரும்பாலானோர் பள் ளிக்கு சைக்கிளில் வந்து செல்கின்றனர். கடந்த வாரம் பிளஸ் 1 மாணவர்களுக்கு 103 இலவச சைக்கிள்களை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் வழங்கினார்.

                இதனால் பள்ளிக்கு சைக்கிளில் வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ஆனால் பள்ளியில் சைக்கிள்கள் நிறுத்த "ஷெட்' இல்லாமல் வெயிலிலும், மழையிலும் நிறுத்தப்படுவதால் சைக்கிள்கள் வீணாகி வருகிறது. பள்ளியின் வளர்ச்சிக்கென எஸ்.எஸ்.ஏ., மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் என பல வழியில் நிதி அளித்து வருகிறது. அந்த நிதியில் பள்ளியில் ஒரு "ஷெட்' அமைத்து அதில் சைக்கிள்கள் நிறுத்த கல்வித்துறை, பெற்றோர் ஆசிரியர் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

Expo showcases students' scientific temper


Students explaining one of the models at the science exhibition in Cuddalore.


CUDDALORE: 

              The 150-odd exhibits showcased at the district-level Jawaharlal Nehru science exhibition held in St.Joseph's higher secondary school at Tirupadiripuliyur, Cuddalore, stood testimony to the problems confronting mankind.

             Through table models the students had also demonstrated the ways and means of tiding over the problems such as power deficit, lack of food security, hurdles on the way of development and also on how to make Earth a better living place. 

The expo focused mainly five themes: 

                green energy, transport and communications, agricultural technology, environment and public hygiene. The students had designed the “wastage incineration power plant” in which both organic and inorganic wastes could be dumped and set on fire.
The steam thus produced could be harnessed to run the turbine to generate power. This would tackle the twin problem of power shortage and hassles in the disposal of mounting garbage.

               Another exhibit demonstrated how electricity could be generated by heating the combined mixture of hay, withered leaves, husk and saw dust. An automatic plant watering system that worked with a sensor and a timer showed the way on how optimal yield could be obtained from scarce water sources. After the farms were sufficiently irrigated the system would automatically shut down. Another notable display was how to revive a fused tubelight and put it back to its original glow. This could be done by installing “lumina,” containing two diodes and two capacitors.

Another exhibit would have its utility in the kitchens: 

                  it was designed to detect any leakage from the cooking gas cylinders and to give out an alarm. The young minds disturbed by the spread of terrorism had demonstrated how Parliament building, the seat of democracy, could be safeguarded from the possible terror attack. To prevent the infiltration of terrorists into the otherwise fully secured Parliament building, concealed subways could be built at all the entry points. Once any unwanted vehicle makes an entry it would be automatically taken to the basement where the awaiting security personnel could take control of the situation.
The two-day expo concluded on Tuesday.

Read more »

Following a bandh Around 300 detained

CUDDALORE: 

               Following a bandh call given by the Opposition parties and trade unions against the apathy of authorities to the poor road condition in Cuddalore municipality, shops and establishments on Lawrence Road and in Pan Pari Market remained closed on Tuesday.

               A section of share-autos, autorickshaws, school vans and private buses was off the road. Certain private bus services operated with police protection. However, the transport corporation operated its regular fleet of buses without any hiccup. But, even while organisers of the bandh were assembling at three different places to take out a protest rally, the police took about 300 of them, including 35 women, into preventive custody.

                M. Sekar of the CPI told The Hindu that the protest was planned to urge the officialdom to expedite the underground drainage project, which was two years behind schedule. He also said that in fact Deputy Superintendent of Police Maheswaran had given permission for the rally with specific instruction on the route. However, as protestors started gathering at Thirupadiripuliyur, 

                 SP Ashwin Kotnis came there and said that they could not take out the rally but only stage a demonstration. Some protestors started running towards the Seematti circle and the police got them into a van. The police also secured those who assembled on the Anna bridge and in front of the Cuddalore municipal office. The SP refuted their claim that permission had been given for the rally.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior