உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 25, 2011

கடலூர் மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் லேப்-டாப், வெப் கேமரா மூலம் வாக்குப் பதிவு கண்காணிப்பு

கடலூர்:

                இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில், லேப்-டாப், வெப் கேமரா மூலம் வாக்குப் பதிவு கண்காணிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தார்.  

ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  

              சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதனகிழமை நடந்தது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, கடலூர் மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த மற்றும் மிகப் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் முதல் முறையாக, லேப்-டாப் மற்றும் வெப் கேமரா மூலம் வாக்குப் பதிவைக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  ÷கடலூர் மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த, மிகப் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளைத் தேர்வு செய்து, அவற்றில் லேப்-டாப் மற்றும் வெப் கேமராக்கள் பொருத்தப்படும். 

             மேற்கண்ட வாக்குச் சாவடிகளில் லேப்-டாப், வெப் கேமரா பொருத்துவது மூலம், வாக்குப் பதிவு தொடங்கியது முதல் எவ்விதத் தடங்கலும் இன்றி வாக்குப் பதிவு நடைபெறுகிறதா என்றும், வாக்குப் பதிவு முகவர்களும், அலுவலர்களும், சரியாக வாக்குப் பதிவை நடத்துகிறார்களா என்றும், சென்னை மற்றும் புதுதில்லியில் உள்ள தேர்தல் ஆணையம் நேரிடையாகக் கண்காணிக்க முடியும். வாக்குப் பதிவு குறித்து ஏதேனும் புகார்கள் இருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியில் உள்ள வெப் கேமராவை பார்வையிட்டு வாக்குப் பதிவு முறையாக நடைபெறுவதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றார் ஆட்சியர்.  

                வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, மாணவ, மாணவியரிடையே வாக்குப் பதிவின் முக்கியத்துவத்தை, வலியுறுத்த வேண்டும். கணினி படிப்பு முடித்த மற்றும் பொறியியல் கல்லூரி மாணவ, மநாணவியர் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுப டுத்தப்பட உள்ளனர் என்றும் ஆட்சியர் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.  கூட்டத்தில் மாவட்டக் கூடுதல் ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி, 10-க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது

               சி.என்.என்., நிறுவனம், இந்தியாவின் சிறந்த மாநிலமாக, தமிழகத்தை தேர்வு செய்து விருது வழங்கியது. விருதை, துணை ஜனாதிபதியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.

              சி.என்.என் - ஐ.பி.என் செய்தி நிறுவனம், தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலங்களை தேர்வு செய்து, அவற்றுக்கு, "வைர மாநில விருதுகள்' வழங்கி வருகிறது. கடந்த 2010ம் ஆண்டுக்கு, ஒன்பது பிரிவுகளின் கீழ் வைர மாநில விருதுகளும், சிறப்பு விருதுகளாக இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம், சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதுகளும் வழங்கப்பட்டன. 

                 இவற்றில், தமிழகம் இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதையும், மக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய மூன்று பிரிவுகளில் சிறந்த மாநிலத்துக்கான வைர மாநில விருதுகளையும் பெற்றுள்ளது. டில்லியில் 23ம் தேதி நடந்த விழாவில், இவ்விருதுகளை துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி வழங்கினார். தமிழக அரசின் சார்பில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுகளை பெற்றுக் கொண்டார். இந்த விருதுகளை, முதல்வர் கருணாநிதியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று காண்பித்தார்

Read more »

தமிழகத்தில் மகப்பேறு நிதியுதவியால் 25 லட்சம் பேர் பயன்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கடலூர் : 

          தமிழகத்தில் மகப்பேறு நிதியுதவி திட்டத்தால் 25 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். கடலூர் அடுத்த வெள்ளக்கரை, புவனகிரி அடுத்த ஆயிபுரம் ஆகிய கிராமங்களில் தலா 21.79 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் மீரா வரவேற்றார். மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கமலக் கண்ணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சண்முகம், கல்விக்குழுத் தலைவர் ஜெயபால், ஊராட்சித் தலைவர் ஜெயபால் வாழ்த்திப் பேசினர்.
 
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதிய கட்டடங்களை திறந்து வைத்து பேசியதது: 

            கடலூர் மாவட்டத்தில் 9 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது. இதுமக்களுக்கு எந்த சிரமமும் இன்றி சிகிச்சை பெறுவதற்கு அவர்களின் கோரிக்கைகளை ஏற்று முதல்வரின் அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளது. மகப்பேறு நிதியுதவியால் தமிழகத்தில் 25 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தும் முதல்வருக்கு துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.ஜெயச்சந்திரன், இந்திரா ராமச்சந்திரன், செல்வரங்கன், முத்து பெருமாள், முடிவண்ணன், டாக்டர்கள் ரூபாவதி, மேகலா உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

திட்டக்குடி பகுதியில் மேம்பால கட்டுமான பணி: அதிகாரிகள் ஆய்வு

திட்டக்குடி : 

           திட்டக்குடி பகுதியில் நடந்து வரும் மேம்பால கட்டுமான பணிகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திட்டக்குடி வெள்ளாறு தரை பாலத்திலும், முருகன்குடி தரை பாலத்திலும் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. 

               கடந்த மழையின் போது கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது, பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தனர். அதேபோல், ராமநத்தம்- பெண்ணாடம் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டனர். கோட்ட பொறியாளர் உத்ராபதி, உதவி கோட்ட பொறியாளர் பன்னீர்செல்வம், உதவி பொறியாளர் ஆன்டி ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

கடலூர் மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையில் மருந்து விற்பனை நிலையம்

கடலூர் : 

         கடலூர் மாவட்ட சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையில் மருந்து மொத்த விற்பனை நிலையம் திறப்பு விழா நடந்தது. தமிழகம் முழுவதும் 50 மருந்து கடைகளை புதியதாக திறக்கவேண்டுமென சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை வளாகத்தில் ஒரு பிரிவும், புதுப்பாளையத்தில் மற்றொரு மருந்து பிரிவும் துவக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

               புதிய மருந்து பிரிவை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று திறந்து வைத்தார். அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். இணைப்பதிவாளர் வெங்கடேசன், மத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பு அதிகாரி மிருணாளினி உட்பட பண்டகசாலை ஊழியர்கள் பங்கேற்றனர். வாடிக்கையாளர்களின் நலன்கருதி இப்பண்டகசாலை மூலம் விற்பனை செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 12 சதவீதம் வரை விற்பனை விலையில் நுகர்வோர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் "நம் வாழ்க்கையில் வேதியியல்' தலைப்பில் பேச்சுப்போட்டி

சிதம்பரம் : 

            சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வேதியியல் துறை சார்பில் "நம் வாழ்க்கையில் வேதியியல்' தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதியியல் துறை சார்பில் சர்வதேச வேதியியல் ஆண்டு - 2011 முன்னிட்டு "நம் வாழ்க்கையில் வேதியியல்' தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது. 

              வேதியியல் துறைத் தலைவர் கருணாகரன் துவக்கி வைத்தார். பூம்புகார் கலைக்கல்லூரி,  மயிலாடுதுறை ஏ.வி.சி., கலைக்கல்லூரி, கடலூர் பெரியார் கலைக் கல்லூரி, புனித வளனார் கல்லூரி, சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி, குறிஞ்சிப்பாடி திருவள்ளூவர் கலைக்கல்லூரி மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக வேதியியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடந்தது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தேசிய அறிவியல் தினத்தன்று துணைவேந்தர் ராமநாதன் பரிசு வழங்குகிறார். போட்டி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கபிலன், கோபாலகிருஷ்ணன் செய்திருந்தனர்.

Read more »

என்.எல்.சி. பாராமுகமாக இருப்பது ஏன்?: கி.வீரமணி

நெய்வேலி:

 திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

               நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 30 ஆண்டுகள், 40 ஆண்டுகள் பணியாற்றியிருந்தும் ஓய்வூதியம் இன்றி வெறுங்கையோடு திரும்பியோர்களின் நிலை கவனிக்கப்படவேண்டும். இவ்வளவுக்கும் என்.எல்.சி. என்பது இலாபம் கொழிக்கச் செய்யும் நவரத்தினங்களுள் ஒன்றாகும்.

           இந்த நிலைக்குக் காரணம் அந்நிறுவனத்தில் அயராது பணியாற்றிய தோழர்களின் விலை மதிக்கமுடியாதபேருழைப்பாகும். 1995 ஓய்வூதிய திட்டத்தில் என்.எல்.சி. நிறுவனமும், திருச்சி பிராவிடண்ட் ஃபண்டு ஆணையமும் உரியகாலத்தில் ஊழியர்களைச் சேர்க்காதது ஊழியர்களின் குற்றமல்ல; அவர்கள் செய்த தவறுக்குப் பாதிப்பினைச்சந்திப்பவர்கள் ஊழியர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

                  ஓய்வூதியம் பெற்றிட இயலாமல் வயது 70 முதல்80 வயதுவரை கடந்துகொண்டு இருப்பவர்களுக்கு ஓய்வூதியம் என்பது அவர்களின் வயோதிகக் காலத்திற்கு உதவும் கைத்தடியாக இருக்கும். நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தும்கூட என்.எல்.சி. பாராமுகமாக இருப்பது - ஏன்? மற்ற மற்ற பொதுத்துறை நிறுவனங்களில் (ஓ.என்.ஜி.சி. போன்றவைகளில்) ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் நிலையில், என்.எல்.சி., ஊழியர்களுக்கு மட்டும் அது கிடைக்காதது ஏன் என்பது நியாயமான கேள்வியாகும்!

                  ஓய்வூதியமோ, உதவித் தொகையோ அல்லது கருணைத் தொகையோ ஏதோ ஒரு பெயரில் பல்லாண்டுகாலம் உழைத்தோருக்கு அளிக்கப்படுவதுதான் நியாயமும், மனிதநேயமும் ஆகும்.  மத்திய அரசு ஆவன செய்யவேண்டும். நமது முதலமைச்சர் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ள என்.எல்.சி.ஊழியர்களின் இந்தப் பிரச்சினையைக் கவனிக்கவேண்டும். மத்திய அரசுக்குத் தெரிவித்து ஆவனசெய்யவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Read more »

Infants' health scheme to be launched tomorrow

CUDDALORE: 

            Chief Minister M. Karuannidhi will launch a new health scheme for infants on Saturday.

           Under the scheme, newborn babies to infants up to one year can undergo free treatment worth Rs. 1 lakh, according to M.R.K. Panneerselvam, Health Minister. He was speaking at the inauguration of a medical shop of Saravanabhava Cooperative Wholesale Supermarket on Beach Road here on Thursday. Later, the Minister inaugurated two Primary Health Centres at Vellakarai and Ayipuram, each built at a cost of Rs. 21.79 lakh.

           The Minister also inaugurated a sub-centre of Animal Husbandry Department at Ayan Ramapuram, and, anganwadis at Echangadu and Sedarpalayam, and a part-time ration shop at Chinna Pillaiyarmedu. At Chinna Kaaraikadu, the Minister attended the ground breaking ceremony for the construction of 15 additional classrooms to be built at a cost of Rs. 1.03 crore in the village school. The new wing would be ready in six months. District Revenue Officer C. Rajendran, Joint Director (Health) Kamalakannan, Deputy Director (Health) R. Meera and others participated.

Read more »

Students, villagers fall from boat Near Cuddalore

CUDDALORE: 

         A manually operated boat carrying students and villagers, numbering about 30, across the Uppanar near here tilted on one side near Semmanguppam on Thursday. Some of the students and villagers fell into the hip-deep water.

        A. Isai Amudhu (25) of Nochikadu who drank excess water has been hospitalised. She is said to be recovering. Those who developed nausea were given fist aid. The boat service, run by the local panchayat between Nochikadu and Semmanguppam was unusually crowed as the bus services from Nochikadu, Thiruchopuram, Thiagavalli and the surrounding areas to Cuddalore town have been suspended for the past few days following tension over the Masi Maham festivities.
Collector P. Seetharaman said that he had instructed Superintendent of Police Ashwin Kotnis to make arrangements for speedy restoration of the bus services.

Read more »

Concern over delay in fixing fee structure

CUDDALORE: 

         The inordinate delay in fixing the fee structure in matriculation schools will complicate the issue and cause disquiet among parents and students.

            If not resolved within a timeframe, it will throw school education out of gear for the coming academic year, according to K. Rajendran and C.R. Lashmikandhan, patron and district president respectively of the Matriculation Schools Management Association, Cuddalore. The Association held a conference of management representatives, headmasters and staff of the member schools here recently to discuss the problems arising out of the long-drawn fee fixation procedures adopted by the Ravirajapandian Committee.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior