விருத்தாசலம்:
விருத்தாசலம் கடை வீதியில் புகழ்பெற்ற விருத்த கிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சாமிக்கு காலையில் சிறப்பு பூஜை, அபிஷேகமும், இரவு வீதி உலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.
வினாயகர், முருகர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேசுவரர் ஆகிய உற்சவ மூர்த்திகள் அலங்கரித்து தனித்தனி தேர்களில் வைக்கப்பட்டு வலம் வந்தது. கிழக்கு கோபுர வாசலில் இருந்து புறப்பட்ட தேர்கள் தெற்கு கோபுர வீதி, மேற்கு கோபுர வீதி, வடக்கு கோபுர வீதி வழியாக மீண்டும் கிழக்கு கோபுர வீதியில் நிலையை அடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குழந்தை தமிழரசன், ஆர்.டி. அரங்கநாதன், இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தொழில் அதிபர் அகர்சந்த் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்ட விழாவையொட்டி விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு குப்புசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சீராளன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக