உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜூன் 19, 2011

கடலூரில் திடீர் சூறாவளி: வாகன ஓட்டிகள் திணறல்

           கடலூரில் திடீர் சூறாவளி காற்றால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

           கோடை வெயில் தாக்கம் தற்போது கடலூரில் 100 டிகிரி கீழ் இறங்க துவங்கியுள்ளது. இந்நிலையில் திடீர் சூறாவளி காற்று சாலைகளில் செல்லும் பொதுமக்களையும், இருசக்கர வாகன ஓட்டிகளையும் கடந்த 2 நாட்களாக அவதிக்குள்ளாக்கியது. நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் பலமாக காற்று வீச துவங்கியது. இதன் தாக்கம் திடீரென சூறாவளியாக மாறியது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி இருந்த குப்பைகள் சூழன்று பறக்க துவங்கியது. மணலும் பறக்க துவங்கியது. இதனால் கடலூரில் முக்கிய சாலைகளான பாரதி சாலை, லாரன்ஸ் சலை, அண்ணா பாலம் உள்ளிட்ட பகுதியில் சாலைகளில் நடந்து சென்றவர்கள் திணறினர்.

             இருசக்கர மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்தினர். சிறிது நேரம் நீடித்த சூறாவளியின் வேகத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. திருவந்திபுரம், ராமாபுரம் உள்ளிட்ட இடங்களில் மரக்கிளைகள் முறிந்தன. முதுநகர் பகுதியில் காற்றுடன் மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு இது போன்று திருவந்திபுரத்தில் வீசிய பலத்த காற்றில் மரம் முறிந்து மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

         கடலூரில் நேற்று மாலை திடீரென வீசிய சூறாவளி காற்றினால் சாலையில் இருந்த குப்பை மற்றும் மணல் காற்றில் புழுதியாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து சென்றவர்கள் பாதிப்புக்குள்ளாகினர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior