உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, செப்டம்பர் 30, 2011

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சுற்றுலா மற்றும் மேலாண்மை பாடப்பிரிவுகளில் பட்டய வகுப்புகள்

காரைக்குடி : 

            காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் சுற்றுலா மற்றும் மேலாண்மை பாடப்பிரிவுகளில் சான்றிதழ் மற்றும் பட்டய வகுப்புகள் தொடங்கப்படும் என அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் சேது. சுடலைமுத்து பேசினார். உலக சுற்றுலா நாள் கருத்தரங்கு காரைக்குடி அழகப்பா பல்கலைகழக பன்னாட்டு வர்த்தகம் மற்றும் வணிகவியல் துறை சார்பாக உலக சுற்றுலா நாள் கருத்தரங்கு கொண்டாடப்பட்டது.

            காரைக்குடி ஹெரிடேஜ், ரோட்டரி சங்கம் மற்றும் கானாடுகாத்தான் விசாலம் ஹெரிடேஜ் ஆகியவை இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் அழகப்பா பல்கலைகழக மேலாண்மை துறையின் முதன்மையர் பேராசிரியர் செல்வம் வரவேற்று பேசினார். காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் கானாடுகாத்தான் விசாலம் ஹெரிடேஜ் நிறுவன மேலாளர் ஜான்பீட்டர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் சேது.சுடலை முத்து கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியது: 
 
          பட்டய வகுப்புகள் தொடங்கப்படும் 2010ம் ஆண்டில் இந்தியாவிற்கு மொத்தம் 17.9 மில்லியன் வெளிநாட்டு பயணிகள் சுற்றுலா வந்தனர். அவர்களில் பெரும்பான்மையினர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா நாட்டு சுற்றுலா பயணிகள் ஆவர். நம் நாட்டில் ஆந்திரா, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

              தமிழ்நாட்டில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 34 ஆயிரம் கோவில்கள் மற்றும் சுற்றுலா மையங்கள் அதிக அளவில் உள்ளன. வரும் கல்வியாண்டில் அழகப்பா பல்கலைகழகத்தில் சுற்றுலா மற்றும் மேலாண்மை பாடப்பிரிவுகளில் சான்றிதழ் மற்றும் பட்டய வகுப்புகள் தொடங்கப்படும். வேலைவாய்ப்பு இந்த பாடத்திட்டத்தில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பாராம்பரிய சுற்றுலா மையங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கும். இந்த பாடங்களினால் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் அழகப்பா கல்லூரி வளர்ச்சி குழுமத்தின் தலைவர் முதன்மையர் குருமூர்த்தி நன்றி கூறினார். கருத்தரங்கில் மேலாண்மைத்துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.    
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior