உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 30, 2011

கடலூர் நகரில் ரூ.26 லட்சம் செலவில் 22 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கடலூர் :
 
            கடலூர் நகரில் ரூ.26 லட்சம் செலவில் 22 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஐ.ஜி.சைலேந்திரபாபு நேற்று துவக்கி வைத்தார். கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றங்களை தடுக்கவும், 18 நிலையான, 4 சுழலும் கேமராக்கள் உள்பட 22 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.   மேலும் 3 கே.எம் சுற்றளவிற்கு கண்காணிப்பு கேமராக்கள் 26 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 
 
இக் கேமரா கட்டுப்பாட்டு அறையை வடக்கு மண்டல ஐ.ஜி., சைலேந்திரபாபு நேற்று துவக்கி வைத்து ம் கூறியது:
 
 
         சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது போல் கடலூரில் முதல் முறையாக நகரில் 22 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் கண்காணிப்பின் மூலம் எதிர்காலத்தில் குற்றங்கள், போக்குவரத்து குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும். தவறு செய்பவர்கள் மீதுகட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே அபராதம் விதித்து வசூலிக்கப்படும். மேலும் எஸ்.பி., அறையில் இவற்றை பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. நகரில் நடக்கும் மறியல்,போராட்டங்களை கண்காணிக்கலாம். மேலும் வன்முறை சம்பவங்கள் வீடியோவில் பதிவு செய்யும் வசதியுள் ளது. பஸ் நிலையத்தில் நடக்கும் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களை கண்காணித்து, குற்றவாளியை பிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் முடியும்.
 
                தானே புயல் நாளை (இன்று) கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிக்கு நவீன மீட்பு கருவிகளுடன், கடலூரில் 1000 போலீசார், விழுப்புரத்தில் 1500 போலீசார், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 1000 போலீசார் என மொத்தம் 4500 போலீசார் தயார் நிலையில் உள்ளனர். மேலும் 64 தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு ஐ.ஜி., சைலேந்திரபாபு தெரிவித்தார். எஸ்.பி., பகலவன், டி.எஸ்.பி., வனிதா உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior