கடலூர்:
முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி கடலூர் ஜெயிலில் இருந்து விடுதலையானார். திருச்சியில் தி.மு.க. அலுவலக கட்டிடத்துக்கு நில அபகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, தொழிலதிபர் சுந்தரராஜூலு ஆகியோர் கைது செய்யப்பட்டு கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் ஜாமீன்கோரி திருச்சி கோர்ட்டில் அன்பில்பெரியசாமி, சுந்தரராஜூலு ஆகியோர் மனுதாக்கல் செய்து இருந்தனர். நேற்று அந்த மனு மீதான விசாரணை நடந்தது. இதில் 2 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. வருகிற 10-ந் தேதி முதல் ஒரு வாரம் மதுரை கோர்ட்டில் 2 பேரும் தினமும் ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை கடலூர் ஜெயிலில் இருந்து அன்பில் பெரியசாமியும், சுந்தரராஜூலும் ஜாமீனில் விடுதலையானர்கள்.
பின்னர் அன்பில் பெரியசாமி கூறியது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கட்டளைப்படி செயல்படுவோம். வழக்குகளை சட்டசபடி சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக