உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 11, 2012

கடலூர் மாவட்டத்தில் 14 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்: அமைச்சர் கே.டி. பச்சமால்

சிதம்பரம்:
 
           கடலூர் மாவட்டத்தில் 14 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் கே.டி. பச்சமால் தெரிவித்தார். சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட பி. முட்லூர் துணைமின் நிலையத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் கே.டி. பச்சமால் மின்சாரப் பணிகள் குறித்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
 
             அங்குள்ள மின்வாரிய அதிகாரிகளிடம், எத்தனை ஊராட்சிகளில் மின்சாரம் வழங்கப்படவில்லை என்ற விபரத்தை கேட்டறிந்தார். மேலும் புயல் பாதித்த கிராமங்களில் மின்கம்பங்களை பொருத்தி விரைந்து மின்சாரம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பின்னர் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியான கொத்தட்டையில் புதிய மின்கம்பங்கள் நிறுவும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அமைச்சருடன் பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் க.திருமாறன், பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அதிகாரி துரைசாமி, கடலூர் மாவட்ட அக்மார்க் தலைவர் கே.எஸ்.ரமேஷ், அதிமுக ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.
 
பின்னர் அமைச்சர் கே.டி. பச்சமால் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: 
 
         தானே புயலால் கடலூர் மாவட்டத்தில் ஏராளமான தனியார் மரங்களும், வனத்துறைக்கு சொந்தமான மரங்களும் வோரோடு விழுந்துவிட்டன.தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 14 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். விரைவில் மரக்கன்று நடும் பணி தொடங்கப்படும். மின்சார சீரமைப்பு பணி, நிவாரணப்பணி ஆகியவை 75 சதவீதம் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள 25 சதவீதம் ஒரிரு தினங்களில் முடிவுறும். எதிர்க்கட்சிகள் தூண்டுதலின் பேரில் சாலைமறியல்கள் நடைபெற்று வருகிறது. விடுபட்டவர்களுக்கும் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 
 
             எனவே யாரும் வதந்தியை நம்ப வேண்டாம்.அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும். பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு திருநெல்வேலியிலிருந்து மின்சார ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின்கம்பங்கள் பொருத்தும் பணி, ஓயர்களை சீரமைக்கும் பணி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர் என அமைச்சர் கே.டி. பச்சமால் தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior