உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், ஜனவரி 05, 2012

கடலூர் மாவட்டத்தில் தானே புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.850 கோடி ஒதுக்கீடு http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/1c3645b8-3a6a-4630-9f01-30402cd2f3f2_S_secvpf.gif
கடலூர்:

                புதுவைக்கும், கடலூருக்கும் இடையே கடந்த 30-ந் தேதி தானே புயல் கரையைக் கடந்தது. அப்போது கடலூர் மாவட்டத்தில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. வீடுகள் சேதம் அடைந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பயிர்கள் சேதமடைந்தன. கடலூர் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள முதல்- அமைச்சர் ஜெயலலிதா ரூ.850 கோடி வழங்கினார்.

           நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டன. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை நேரில் வழங்குவதற்காக நேற்று சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கடலூருக்கு ஜெயலலிதா வந்தார். கடலூர் சுப்புராயலு திருமண மண்டபத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை முதல்- அமைச்சர் வழங்கி பேசினார். 
அப்போது முதல்அமைச்சர் ஜெயலலிதா  கூறியது:

              தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்வதற்காக அரசு எந்திரத்தை முடுக்கி விட்டுள்ளோம். மக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரவசதி, வீடுகள், சாலை வசதி அனைத்தையும் செய்து கொடுக்க ரூ.850 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் பயிர்களை இழந்து இருந்தாலும், அல்லது தங்கள் படகுகளை இழந்து இருந்தாலும், வீடுகளை இழந்து இருந்தாலும் எதற்கும் கவலைப்பட வேண்டாம்.

                  உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கும், உங்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் நீங்கள் தேர்ந்தெடுத்த அரசு இருக்கிறது. இது உங்களுடைய அரசு. உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும். நீங்கள் தைரியமாக இருங்கள். உங்களுக்கு விரைவில் மிக ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

               நிகழ்ச்சி மேடையில் வைக்கப்பட்டு இருந்த புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிட்டார். புயலால் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.2 லட்சம் வீதமும், சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும், 10 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்எண்ணையும், ஒரு வேட்டி, புடவை வீதமும், கால்நடை இழப்புக்கு ரூ.20 ஆயிரம் வீதமும் வழங்கினார்.  பாதிக்கப்பட்ட முந்திரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.9 ஆயிரம் வீதமும், சேதம் அடைந்த மீன்பிடி படகு மற்றும் என்ஜீன்களுக்கு ரூ.75 ஆயிரம் வீதமும் நிவாரண உதவிகளை வழங்கினார். இதையடுத்து அவர் காரில் புறப்பட்டு அண்ணா ஸ்டேடியத்துக்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

                நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், எம்.சி.சம்பத், சி.வி.சண்முகம், தங்கமணி, டாக்டர் விஜய், கே.வி. ராமலிங்கம், முனுசாமி, வளர்மதி, காமராஜ், சின்னையா, தலைமை செயலாளர் தேபேந்திர நாத் சாரங்கி, வருவாய் நிர்வாக ஆணையர் ஞானதேசிகன், கலெக்டர் அமுதவல்லி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior