உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 28, 2012

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 17-வது முறையாக உண்டியல் திறப்பு

சிதம்பரம்:
 
       சிதம்பரம் நடராஜர் கோவிலில்  17-வது முறையாக உண்டியல் திறக்கப்பட்டது. இதில் ரூ.8 லட்சத்து 45 ஆயிரத்து 443 காணிக்கை வசூலாகியது. 
 
          புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு கையகப்படுத்தியது.அதையடுத்து கோவிலுக்கு வருமானத்தை பெருக்கும் வகையில் 9 உண்டியல்கள் கோவிலுக்குள் வைக்கப்பட்டது. உண்டியல் வைக்கப்பட்டு இது வரை 18 முறை திறக்கப் பட்டு உள்ளது.அதன் மூலம் இது வரை 70 லட்சத்து 91 ஆயிரத்து 669 ரூபாய் வசூலாகி உள்ளது.
 
          இது தவிர 141 கிராம் தங்கம், 565 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணமும் கிடைத்துள்ளது. இந்நிலையில் மீண்டும் கோவிலுக்குள் இருக்கும் உண்டியலை திறந்து காணிக்கையை எண்ண இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.அதன்படி நேற்று 17-வது முறையாக கோவிலில் உள்ள 9 உண்டியல்களும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன் தலைமையில் கோவில் செயல் அதிகாரி சிவக்குமார் முன் னிலையில் திறக்கப்பட்டது.
 
         அதைதொடர்ந்து காணிக்கை பணம் ஒட்டு மொத்தமாக எண்ணப்பட்டது. சுமார் 3 மணி நேரம் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.8 லட்சத்து 45 ஆயிரத்து 443 காணிக்கை வசூலாகி இருந்தது.   இது தவிர மலேசியா -503 ரிங்கட், இலங்கை - ரூ.1220, கனடா- 20 டாலர், அமெரிக்கா-3 டாலர், இங்கிலாந்து பவுண்டு-3 ஆகியவையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். தங்கம் 81/2 கிராம், வெள்ளி 105 கிராம் ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர். காணிக்கை எண்ணும் போது பிரச்சினை ஏதும் நடக்காமல் இருக்க சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior