கடலூர்:
டி.என்.பி.எஸ்.சி., ஆன்லைன் சேவை மையத்தை கடலூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கலெக்டர் துவக்கி வைத்தார்.
கடலூர் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஏப்ரல் 2012 முதல் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான டி.என்.பி.எஸ்.சி., ஆன்லைன் சேவை மையத்தை கடலூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கலெக்டர் துவக்கி வைத்தார். மேலும், கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக் குடி ஆகிய நகரங்களில் அஞ்சலகம், இந்தியன் வங்கிகளின் மூலம் விரைவில் டி.என்.பி. எஸ்.சி., ஆன்லைன் சேவை மையம் துவங்கப்படவுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் டி.என்.பி. எஸ்.சி., ஆன் லைன் சேவை மையத்தை அணுகி தங்களைப் பற்றிய விவரங்களை அளித்து பதிவுக்கட்டணம் 50 ரூபாய் மற்றும் சேவை கட்டணம் 12 ரூபாய் செலுத்தி நிரந்தர பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக