கடலூர், :
பிளாஸ்டிக் கொடிகளுக்கு பதிலாக துணிக்கொடிகளை பயன் படுத்துமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடை செய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆட்சியர்ராஜேந்திர ரத்னூ தலைமை தாங்கி பேசுகையில்
‘சமுதாயத்திற்கு முன்னோடியாக இருக்கும் அரசியல் கட்சியினர் வரும் காலங்களில் கொடி தோரணங்கள் போன்றவற்றை துணிகளில் வடிவமைக்க வேண்டும். அதன் காரணமாக சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படும். துணிக்கொடிகளை திரும்பவும் பயன்படுத்தலாம். அதை போல பிளக்ஸ் போர்டுகளையும் குறிப்பிடப்பட்ட இடங்களில் மட்டுமே அமைக்க வேண்டும். 2013 ஜனவரி மாதத்திற்குள் கடலூர் மாவட்டத்தை பூஜ்யக் கழிவு மாவட்டமாக மாற்ற அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக