பண்ருட்டி:
பண்ருட்டி அரசு அண்ணா பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் அறிமுகக் கூட்டம் நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி புலமுதல்வர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கட்டடவியல் பேராசிரியர் சுரேஷ்குமார்முன்னிலை வகித்தார். டாக்டர் சீனுவாசன் வரவேற்றார். இதில் கட்டடவியல், இயந்திரவியல், கணிபொறி, மின்னியல், மின் அணுவியல் துறை முதலாமாண்டு 360 மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
விழாவில் சென்னை அண்ணா பல்கலைக்கழக இயந்திரவியல் துறை பேராசிரியர் சீனுவாசன் பேசுகையில்,
அண்ணா பல்கலைக் கழகத்தில் கிண்டி உள்ளிட்ட மற்ற கல்லூரி வளாகத்தை போல பண்ருட்டி வளாகம் அனைத்து வசதிகளும் பெற்றவை. இங்கு ஒவ்வொரு மாதமும் வகுப்பு குழு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் தங்களது குறைகளை கூறி பிரச்னைக்குத் தீர்வு காணலாம். அண்ணா பல்கலைக் கழகத்தில் ராகிங் இல்லை. முதலாம் ஆண்டு மாணவர்கள் பயமின்றி படிக்கலாம். குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்யலாம். அரசு கல்லூரி மாணவர்களுக்காக உதவிகள், ஸ்காலர்ஷிப் வழங்கி வருவதை மாணவர்கள் அனைவரும் அறிய வேண்டும். மொபைல்போன் கல்லூரி வளாகத்தில் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் தங்களது பிள்ளைகள் படிப்பதை கவனித்தது போல் பெற்றோர்கள் கல்லூரி படிப்பில் எப்படி படிக்கின்றனர் என அறிந்து பெற்றோர்கள் அடிக்கடி அறிவுரை வழங்க வேண்டும் என்றார். ஆங்கிலத்துறை பேராசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக