உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
திங்கள், செப்டம்பர் 24, 2012

கடலூர் மாவட்டத்தில் மின்னணு தபால் மற்றும் கோப்பு விவரங்கள் பதிவு முறை துவக்கம்

கடலூர்:


            கடலூர் மாவட்டத்தில் மின்னணு தபால் மற்றும் கோப்பு விவரங்கள் பதிவு முறை துவங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மின்னணு மேலாண்மை திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை அரசு துறைகளில் ஏற்படுத்தி வருகிறது. வெளிப்படையான துரிதமான முறைகளில் அரசின் சேவைகள் பொது மக்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கம்ப்யூட்டர் சார்ந்த தொழில் நுட்பத்தினை தேசிய தகவலியல் மூலம் மாவட்டங்களில் செயல்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தலின்படி மின்னணு தபால் மற்றும் கோப்பு விவரங்கள் பதிவு முறை துவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இணையதள வசதியுடன் இருக்கும் கம்ப்யூட்டர் வாயிலாக கலெக்டருக்கு அனுப்பப்படும் அனைத்து தபால் மூலம் வந்த விவரங்களை பதியப் பெற்று உரிய பிரிவுகளுக்கு அனுப்பி பதில் விவரங்கள் பதிவு செய்யும் இச்சேவையை கலெக்டர் ராஜேந்திர ரத்னு தொடங்கி வைத்தார்.

              இதற்கென தேசிய தகவல் மையம் தயாரித்துள்ள இணைய வழியில் இயங்கக்கூடிய மென்பொருளை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்தில் இயங்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கலெக்டர் அவர்களுக்கு வரும் தபால்களை தபால் பிரிவில் உள்ள ஊழியர் தினமும் தனது கம்ப்யூட்டரில் பதிவு செய்து உரிய பிரிவுகளுக்கு அனுப்புவார்.அந்தந்த பிரிவு அலுவலர்கள் அவருக்குரிய தபால்களை கம்ப்யூட்டர் மூலம் பார்த்து உரிய பதிலை அளித்து தனது மின்னணு பதிவேட்டிலும் அனைத்து தபால்களையும் பதிவு செய்து கொள்வர். இந்த முறையில் பதிவு செய்யும் தபால்களின் விவரங்கள் பதில் அளித்த தகவல்கள் எந்தெந்த பிரிவுகளில் தபால்கள் நிலுவையில் உள்ளது என்ற புள்ளி விவரங்களை இந்த மென்பொருள் மூலம் உடனுக்குடன் எடுத்துக் கொள்ளலாம்.மேலும் உயர் அதிகாரிகள் இந்த விவரங்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior