உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 26, 2012

கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்டதெருவிளக்குகள் ரூ.14 கோடியில் சீரமைப்பு

கடலூர்:
 
          கடலூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தெருவிளக்குகளைச் சீரமைக்க ரூ. 14 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக, புயல் நிவாரணக் கண்காணிப்பு சிறப்பு அலுவலர் கால்நடை பராமரிப்புத் துறை செயலர் ககன் தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்
 
         .புயல் பாதித்த இடங்களில் மின் விநியோகம் சீரமைப்பு குறித்து, மின் வாரிய அதிகாரிகளுடன், அரசுச் செயலர் ககன் தீப்சிங் பேடி, ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினர்.மின்வாரிய தலைமைப் பொறியாளர் அப்பாசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் புயல் பாதித்த திருக்கண்டேஸ்வரம் கிராமத்தில் ஆய்வு நடத்தினர். மின் இணைப்பு பெற்ற விவசாயிகள், விவசாயப் பணிகளைத் தொடங்கி விட்டதாக தெரிவித்தனர்.
 
பின்னர் அரசுச் செயலர் ககன் தீப்சிங் பேடி, ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் கூறியது:
 
          கடலூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தெருவிளக்குகளைச் சீரமைக்க முதல்வர் ரூ. 14 கோடி ஒதுக்கி இருக்கிறார். இதன் மூலம் 53 ஆயிரம் குழல் விளக்குகள், 9 ஆயிரம் சோடியம் வேப்பர் விளக்குகள், 2300 சி.எஃப்.எல். விளக்குகள், 125 ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.இப்பணிகளில் ஊராட்சி நிர்வாகமும், மின் வாரியமும் இணைந்து ஈடுபட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாய மின்இணைப்புகள் 69,783-ல் சனிக்கிழமை வரை 35,343 இணைப்புகள் சீரமைக்கப்பட்டு உள்ளன.மீதமுள்ள மின் இணைப்புகளை சீரமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது என்றும் தெரிவித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior