உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், பிப்ரவரி 10, 2014

கடலூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் 7 நெல் கொள்முதல் நிலையங்கள்

கடலூர் மாவட்டத்தில் மேலும், 7 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:    

கடலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 98  ஆயிரத்து 421 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லைக் கொள்முதல் செய்ய வசதியாக மாவட்டத்தில் ஏற்கெனவே, 143 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க கூட்டுறவுத் துறை மூலமாக மேலும் 7 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 

கடலூர் வட்டாரத்தில் 

கரைமேடு,
காட்டுமன்னார்கோவில் (வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம்)
சிதம்பரம் (வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம்),
விருத்தாசலம்,
பேரூர்,
பி.முட்லூர்,
இளங்காம்பூர்

ஆகிய இடங்களில் கடந்த 6-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன.

 இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நிர்ணயித்துள்ள விலையில் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை விற்பனை செய்து கொள்ளலாம் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior