உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஆய்வுக் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆய்வுக் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், நவம்பர் 16, 2010

அறிவியல் ஆய்வுக் கட்டுரைப் போட்டி: கடலூர் கிருஷ்ணசாமி பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசு

கடலூர்:

              கடலூர் மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், அறிவியல் கட்டுரைகள் சமர்ப்பித்தல் போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர்.

               தேசிய அறிவியல் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ஆண்டுதோறும், குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்துகின்றன.இந்த ஆண்டுக்கான கடலூர் மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடு, பண்ருட்டி ஜான் டூயி பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 40 பேர் தங்களது அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மண் வளத்தை நாசமாக்கும் பாலிதீன் குப்பைகள், வேளாண் பொருள்கள் கொள்முதலில் கடலூர் மாவட்டத்தின் நிலை உள்ளிட்ட பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

                கடலூரைச் சுற்றியுள்ள 13 வேளாண் நிலங்களில் கரும்பு, காய்கறி, முந்திரிப் பயிர்களை  மாணவர்கள் ஆய்வு செய்து, பாலித்தீன் குப்பைகள் மண்ணில் கலந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை முடிவுகளாக அறிவித்தனர்.கம்மியம்பேட்டை, செல்லங்குப்பம், பட்டாம்பாக்கம், கரைமேடு ஆகிய இடங்களில் குவிக்கப்பட்டு உள்ள பாலித்தீன் குப்பைகளால், குடிநீர் மற்றும் காற்றில் நச்சுக் கழிவுகள் கலப்பதை மாணவர்களின் ஆய்வு முடிவுகள் எடுத்துக் காட்டின. கிருஷ்ணசாமி பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர்கள் கெüதமன், விஜயகார்க்கி, ஜான்சன் மரியஜோசப், சசிதரன், ராஜேஷ் அரவிந்தகுமார் ஆகியோர் அறிவியல் ஆய்வு அறிக்கைகளைத் தயாரித்தனர்.

                 இப்பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளுக்கு முதல் பரிசாக டாக்டர் ராஜா ராமண்ணா நினைவு சுழற்கேடயம் வழங்கப்பட்டது. மேலும் 6,7,8-ம் வகுப்பு பிரிவிலும் மாணவர்கள் ஆய்வறிக்கை வழங்கினர். வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களையும், பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் டாக்டர் கே.ராஜேந்திரன், முதன்மை அலுவலர் டாக்டர் சிறீஷா கண்ணன், முதல்வர் ஆர்.நடராஜன் ஆகியோர் பாராட்டினர்.

Read more »

வெள்ளி, அக்டோபர் 15, 2010

கடலூரில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களுக்குப் பாராட்டு

கடலூர்:

                  ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த கடலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள், புதன்கிழமை கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர்.

                  பொள்ளாச்சி எம்.ஜி.எம். கல்லூரியில், தமிழக வரலாற்றுப் பேரவை 17-வது ஆண்டுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை 3-ம் ஆண்டு மாணவர்கள், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். திருநாவலூர் திருத்தொண்டீஸ்வரர் கோயில் சிற்பக்கலை, திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில்- வரலாற்றுப் பார்வை, திருவந்திபுரம் தேவநாதசாமி கோயில் கல்வெட்டுகள், வள்ளலாரின் வாழ்க்கை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்- சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். கூட்டத்தின்போது இந்த ஆய்வுக் கட்டுரைகள் வெகுவாகப் பாராட்டப்பட்டன. 

                        கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் காந்திமதியின் வழிகாட்டுதல்படி, அத்துறை பேராசிரியர்கள் விஜயலட்சுமி, நா.சேதுராமன் ஆகியோர், மாணவர்களைத் தயார் செய்து, பொள்ளாச்சி வரலாற்றுப் பேரவை கூட்டத்துக்கு அழைத்துச் சென்று இருந்தனர். ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டிய பேராசிரியர்களை கல்லூரியில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கநாதன் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior