உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




உழவர் பாதுகாப்புத் திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உழவர் பாதுகாப்புத் திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 13, 2012

சிதம்பரம் சமூக நலத்துறையில் கல்வி உதவி தொகை பெற தாசில்தார் அலுவலகத்தில் மாணவ, மாணவிகள்

சிதம்பரம் :

சிதம்பரம் சமூக நலத்துறையில் கல்வி உதவி தொகை பெற மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு வரை கல்லூரியிலேயே உதவி தொகை பெற்றனர்.  இந்த ஆண்டு முதல் சமூக நலத்துறை மூலம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உழவர் பாதுகாப்பு திட்ட கார்டு வைத்துள்ள குடும்பத்தில் இருந்து  கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகள் அந்தந்த பகுதி வி.ஏ.ஓ., சான்று,  கல்லூரியில் படிக்கும் ஆதாரச் சான்று, குடும்ப உழவர் கார்டு, ஜாதிச் சான்று நகலுடன் தாசில்தார் அலுவலகத்தில் சமூக நல பாதுகாப்பு துறையில் கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பங்களை பார்வையிட்டு உதவித் தொகை வழங்கப்படுகிறது. நேற்று சிதம்பரம் சமூக நலத் துறை அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுக் கவும், கல்வி  உதவி தொகை பெறவும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் குவிந்தனர். பொறியியல் படிக்கும் மாணவருக்கு 2250 ரூபாய், மாணவிக்கு 2750 ரூபாய், பட்டப்படிப்பு படிக்கும் மாணவருக்கு 1750 ரூபாய், மாணவிக்கு 2250 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை பெற்று உதவி தொகைக்கான காசோலைகளை சமூக நல பாதுகாப்பு தாசில்தார் ராமச்சந்திரன் வழங்கினார்.

Read more »

புதன், மார்ச் 07, 2012

கடலூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

கடலூர் : 

     முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

          கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் சொந்தமாக வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள், கூலி வேலை செய்பவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். தற்போது கிராம நிர்வாக அலுவலர் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பில் விடுபட்ட விவசாயிகள் 10ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்தால் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும்.
 

       இத்திட்டத்தில் பதிவு பெற்ற உறுப்பினர் விபத்து மரணத்திற்கு ஒரு லட்ச ரூபாயும், இயற்கை மரணத்திற்கு 10 ஆயிரம் ரூபாயும், ஈமச்சடங்கிற்கு 2,500 ரூபாயும் வழங்கப்படுகிறது. விபத்தினால் உறுப்புகள் இழப்பு மற்றும் கொடுங்காயம் ஏற்படுவோருக்கு தன்மைக்கேற்ப 2,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. பதிவு பெற்ற உறுப்பினர் மற்றும் உறுப்பினரின் குழந்தைகளுக்குத் திருமணம் நடைபெற்றால் பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய், ஆண்களுக்கு 8,000 ரூபாயும் திருமண உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 60 முதல் 65 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற, முதுமை காரணமாக உடல் உழைக்கும் திறனற்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
 

      பதிவு பெற்ற உறுப்பினருடைய குழந்தைகள் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் உட்பட பல்வேறு படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விடுதியில் தங்குவோர் உட்பட அனைவருக்கும் 1,250 முதல் 1,750 ரூபாய் வரை படிப்பிற்கேற்ப கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகை உட்பட அனைத்து உதவிகளையும் பெற பொது மக்கள் தாசில்தாரை (சமூக பாதுகாப்புத் திட்டம்) அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.













Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior