உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கரிக்குப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கரிக்குப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூலை 23, 2011

பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல்மின் நிலையம்அமைக்க 3 கிராம மக்கள் எதிர்ப்பு

பரங்கிப்பேட்டை:

            பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல்மின் நிலையம் அமைப்பதற்காக வேலி அமைக்கும் பணியை மூன்று கிராம பொதுமக்கள் தடுக்க முயன்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

         பரங்கிப்பேட்டை அடுத்த பஞ்சங்குப்பத்தில் தனியார் அனல்மின் அமைக்கப்படுகிறது. அதற்காக பஞ்சங்குப்பம், புதுக்குப்பம், கரிக்குப்பம், வில்லியநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் வாங்கப்பட்டு வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. தனியார் அனல்மின் நிலையம் வருவதற்கு பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்தும் வேலி அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 

             நேற்று கரிக்குப்பம், பஞ்சங்குப்பம், வில்லியநல்லூர் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பா.ம.க., ஒன்றிய செயலர் செல்வகுமார் தலைமையில் கரிக்குப்பம் அருகே நடந்துவரும் வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த முயன்றனர்.தகவலறிந்த பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அனல்மின் நிலையம் அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் வேலி அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

             ஆர்.டி.ஓ., தலைமையில் சமாதான கூட்டம் நடக்கும் வரை வேலி அமைக்கும் பணியை நிறுத்தி வைப்பதாக இன்ஸ்பெக்டர் உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் பரங்கிப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






Read more »

செவ்வாய், ஏப்ரல் 20, 2010

இடம் கையகப்படுத்தியதை கண்டித்து மறியல் : அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் உடன்பாடு


சிதம்பரம்: 

                             தனியார் மின் உற்பத்தி நிலையம் கட்ட கையகப்படுத்தப்பட்ட இடத்திற்கு கூடுதல் இழப்பீடு கோரி  மறியல் செய்ய முயன்றவர்களிடம் ஆர்.டிஓ., பேச்சுவார்த்தை நடத்தியதால் உடன்பாடு ஏற்பட்டது. சிதம்பரம் அருகே தனியார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க பரங்கிப்பேட்டை பகுதிக்குட்பட்ட கரிக்குப்பம், புதுக்குப்பம், புதுப்பேட்டை, தோப்பிருப்பு, பஞ்சங்குப்பம், புதுச்சத்திரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் இடம் கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், தொடர்ந்து நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூ., மற்றும் விவசாயிகள் சார்பில் சிதம்பரம் ஆர்.டி. ஓ., அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடக்க இருந்தது. 

                      பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சண்முகம் தலைமையில் ஊர்வலமாக வந்தனர். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜ் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர்  மணிவாசகம், நகர செயலளர் சேகர், ஏ.ஐ.டி.யூ.சி., சேகர் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். மே 3ம்  தேதி நிலம் கையகப்படுத்திய கம்பெனி அதிகாரிகளை வரவழைத்து பேசி தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் மறியல் கைவிடப் பட்டது.

download this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior