உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பண்ருட்டி ஒன்றியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்ருட்டி ஒன்றியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 19, 2010

பண்ருட்டி அருகே விசித்திரம் தங்க நகையை மட்டுமே காணிக்கையாக செலுத்தும் கோவில் திருவிழாவின்போது கர்ப்பிணி பெண்கள் ஊரில் தங்க தடை



பண்ருட்டி:
             பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் சிறு கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான செல்லி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டு களுக்கு ஒரு முறை 8 நாட்கள் கோவில் திருவிழா நடைபெறும். விழா முடிந்ததும் கோவில் கருவறையில் அம்மன் சிலையை தோண்டி புதைத்து விடுவார்கள். 5 ஆண்டு முடிந்தபின் மீண்டும் சிலையை தோண்டி எடுத்து திருவிழா நடத்துவார்கள்.

               இந்த கோவில் திருவிழாவின் போது கர்ப்பிணி பெண்கள் மற்றும் தலைப்பிள்ளைகள் ஊரில் தங்கக்கூடாது என்று நிபந்தனை உள்ளது.  மேலும் இந்த கோவிலில் தங்கநகை மற்றும் தங்க நாணயங்களை மட்டுமே பக்தர்கள் காணிக்கையாக செலுத்த வேண்டும். இந்த விசித்திரமான கோவிலின் ஆடித்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. கோவில் கருவறையில் புதைக்கப்பட்டிருந்த சிலை ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. 
              பின்னர் அம்மன் சிலையை புனித நீரால் நீராட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் தங்க நகைகளை காணிக்கையாக செலுத்தினார்கள். திருவிழாவையொட்டி கர்ப்பிணி பெண்கள் மற்றும் தலைப்பிள்ளைகள் ஊரை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.

செல்லி அம்மன் கோவில் திருவிழாவின் சிறப்பு நிகழச்சி பற்றி பக்தர் ஒருவர் கூறும்போது:-

               செல்லி அம்மன் துடிப்பான தெய்வம். எனவே கோவில் திருவிழாவின் போது கர்ப்பிணி பெண்கள் மற்றும் தலைப்பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று வெளியூருக்கு அனுப்பி விடுகிறோம். 8 நாள் திருவிழா முடிந்தபின்னர் தான் அவர்கள் மீண்டும் ஊருக்கு வருவார்கள். 8-வது நாள் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். அன்று அம்மனுக்கு 8 கன்னிபெண்கள் சிறப்பு பூஜை செய்வார்கள். 
                மதியம் 12 மணிக்கு செல்லி அம்மன் வீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது யாரும் எதிரில் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அம்மன் வீதி உலா வரும்போது பக்தர்கள் ஆடு, கோழிகள் பலி கொடுப்பார்கள். இந்த கோவிலில் யாரும் புகைப்படம் எடுக்கக் கூடாது. அப்படி படம் எடுத்தால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

திங்கள், மே 10, 2010

குடிசை வீடு கணக்கெடுப்பு மேல் முறையீடு செய்யலாம்

பண்ருட்டி: 

                பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் 19 ஆயிரம் வீடுகள் கணக்கெடுப்பு நடந்துள்ளது. விடுபட்டவர்கள் மேல் முறையீடு செய்ய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 'கான்கிரீட்' வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் வி.ஏ.ஒ., ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப்பணியாளர் அடங்கிய குழுவால் கூரை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் 42 ஊராட்சிகளில் 19 ஆயிரம் கூரை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தற்போது மேலாய்வு பணி துவங்கி 18 ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் முடித்துள்ளனர் .இதுகுறித்து பண்ருட்டி ஒன்றியத்தில் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பின் போது விடுபட்டவர்கள் அனைவரும் தங்களது மேல்முறையீட்டை பண்ருட்டி பி.டி.ஒ., விற்கு தெரிவிக்கலாம்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior