உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




விருத்தாசலம் அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருத்தாசலம் அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், டிசம்பர் 07, 2011

விருத்தாசலத்தில் சிட்கோ தொழில் வளாகம் அமைக்க கோரிக்கை

விருத்தாசலம் :

          விருத்தாசலத்தில் சிட்கோ தொழில் வளாகம் அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.
 

இதுகுறித்து முத்துகுமார் எம்.எல்.ஏ., கலெக்டர் அமுதவல்லிக்கு அனுப்பியுள்ள மனு: 

          விருத்தாசலத்தில் அடித்தட்டு மக்களின் வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை காத்திடவும், புதிய தொழில் முனைவோர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் விருத்தாலம் பகுதியில் சிட்கோ தொழில் வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் அரசு தொழிற்பேட்டையில் தொழில் முனைவோர்களுக்கு மூலப்பொருட்கள் அரசால் வழங்கப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு முதல் திடீரென எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மூலப்பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது. அதன் காரணமாக தொழிற்சாலைகள் முடப்பட்டன.
             தமிழகத்திலேயே விருத்தாசலத்தில் மட்டும் தான் அரசு பீங்கான் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. எனவே தொழிற்சாலை மீண்டும் இயங்கவும், தொழிற்பேட்டைக்கு உள் கட்டமைப்பு வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.








Read more »

புதன், நவம்பர் 23, 2011

கார்த்திகை தீப திருநாளையொட்டி விருத்தாசலத்தில் அகல் விளக்குகள் தயாரிப்பு மும்முரம்

விருத்தாசலம் :

           விருத்தாசலத்தில் கார்த்திகை தீப திருநாளையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி அதிக அளவில் நடந்து வருகிறது. 

              தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் கொண்டாடும் வண்ணமயமான விழா கார்த்திகை தீப திருநாள் விழா. ஒளி வழிபாடாக நடைபெறும் இந்த விழாவன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவர். இதனால் தீப திருநாள் காலத்தில் அகல் விற்பனை அமோகமாக நடைபெறும். கடந்த காலங்களில் களி மண்ணால் ஆன அகல் விளக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் மக்களின் ரசனைக்கு ஏற்ப பீங்கான் விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. 

               விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டையில் பீங்கான் மற்றும் "கிலே' கொண்டு அகல் விளக்கு தயாரிக்கும் பணி அதிக அளவில் நடந்து வருகிறது. சிவன், பெருமாள், அம்மன், துளசிமாட விளக்கு என பல்வேறு உருவங்களை கொண்டு 150க்கும் மேற்பட்ட வடிவங்களில், பல்வேறு வண்ணங்களில் விளக்குகள் தயாரித்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் விளக்குகளை மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மொத்த வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வார்கள். விளக்குகளின் தேவை அதிகம் என்பதால் வழக்கத்தை விட கூடுதல் ஆட்களை அமர்த்தி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.










Read more »

திங்கள், ஆகஸ்ட் 01, 2011

விருத்தாசலம் பீங்கான் தொழில் நுட்பக் கல்லூரியினை நவீன படுத்த கோரிக்கை

விருத்தாசலம் : 

             விருத்தாசலம் பீங்கான் தொழில் நுட்பக் கல்லூரியில் கூடுதலாக பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்துகுமார் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தொழில் வணிகத்துறை ஆணையர் மற்றும் இயக்குனர் அபூர்வவர்மா ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு:

               விருத்தாசலத்தில் அமைந்துள்ள அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி போதுமான அடிப்படை வசதி இல்லாமல் உள்ளது. இந்தக் கல்லூரியை நவீனப்படுத்தி பேராசிரியர்கள் மற்றும் அனைத்து அலுவலர்களின் காலி பணியிடத்தை பூர்த்தி செய்தும், புதிய கட்டிடம், விடுதி அமைத்துத் தரவேண்டும் எனவும் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தேன்.அதன்படி புதிய மாணவர் விடுதி கட்ட ரூபாய் 64 லட்சம் ரூபாய், கல்லூரியில் சுற்றுச் சுவர் அமைக்க ரூபாய் 5 லட்சம் ரூபாய் தேவை எனவும், மாணவர்கள் அறை, ஆய்வகம், கழிப்பறை சீரமைக்க பட வேண்டும். நான்கு விரிவுரையாளர்கள் நியமிக்க வேண்டும். அலுவலகம் தொடர்பான பணிகள் செய்ய கணக்கர், மேலாளர், இளநிலை உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

              இந்த பணிகளுக்குத் தேவையான கருத்துரு கல்லூரி முதல்வரால் சென்னை தொழில் வணிகத் துறை இணை இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் விருத்தாசலத்தில் மட்டும் இக்கல்லூரி இயங்கி வருவதால், இக்கல்லூரியை நவீனப்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior