உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 23, 2011

கார்த்திகை தீப திருநாளையொட்டி விருத்தாசலத்தில் அகல் விளக்குகள் தயாரிப்பு மும்முரம்

விருத்தாசலம் :

           விருத்தாசலத்தில் கார்த்திகை தீப திருநாளையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி அதிக அளவில் நடந்து வருகிறது. 

              தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் கொண்டாடும் வண்ணமயமான விழா கார்த்திகை தீப திருநாள் விழா. ஒளி வழிபாடாக நடைபெறும் இந்த விழாவன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவர். இதனால் தீப திருநாள் காலத்தில் அகல் விற்பனை அமோகமாக நடைபெறும். கடந்த காலங்களில் களி மண்ணால் ஆன அகல் விளக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் மக்களின் ரசனைக்கு ஏற்ப பீங்கான் விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. 

               விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டையில் பீங்கான் மற்றும் "கிலே' கொண்டு அகல் விளக்கு தயாரிக்கும் பணி அதிக அளவில் நடந்து வருகிறது. சிவன், பெருமாள், அம்மன், துளசிமாட விளக்கு என பல்வேறு உருவங்களை கொண்டு 150க்கும் மேற்பட்ட வடிவங்களில், பல்வேறு வண்ணங்களில் விளக்குகள் தயாரித்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் விளக்குகளை மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மொத்த வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வார்கள். விளக்குகளின் தேவை அதிகம் என்பதால் வழக்கத்தை விட கூடுதல் ஆட்களை அமர்த்தி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.










0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior