உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெண்கரும்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெண்கரும்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 20, 2011

பெண்ணாடம் நந்தப்பாடி கிராமத்தில் புதிய ரேஷன் கடை: சமூகநலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் திறந்து வைத்தார்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/a9a9c4dc-104d-4b5a-acc8-a6e591b08d2f_S_secvpf.gif


 
திட்டக்குடி:
 
         பெண்ணாடத்தை அடுத்துள்ள நந்தப்பாடியில் கிராம மக்கள் நீண்ட தூரம நடந்து சென்று வெண் கரும்பூர் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டி இருந்தது. இப்பகுதி மக்கள் நந்தப் பாடியில் ரேஷன் கடையை திறக்க வேண்டும் என முறையிட்டு வந்தனர். முதல்- அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று நந்தப்பாடியில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க உத்தரவிட்டார். அதன்படி புதிய பகுதி நேரரேஷன் கடை திறக்கப்பட்டது.

அமைச்சர் செல்வி ராமஜெயம் கடையை திறந்து வைத்து பேசியது:-

               தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கிராம புறமக்களின் வசதியில் அக்கறை கொண்டுள்ளார். 200- 250 குடும்ப அட்டைகள் உள்ள கிராமங்களில் கூட ரேஷன் கடைகள் திறக்க உத்தரவிட்டுவருகிறார். இதில் பணிபுரியும் பணியாளர்கள் தினமும் கடையை திறந்து அத்தியாவசிய பொருட்களை தங்கு தடை இன்றி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

               அதிகாரிகள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு பணிபுரிய வேண்டும் பொது மக்களும் அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். ஜெயலலிதா சொல்வதை யெல்லாம் செய்து வருகிறார். மக்கள் நலன் கருதி சொல்லாததையும் செய்பவர்தான் ஜெயலலிதா. தரமான பொருட்கள் கிடைப்பதுதான் முக்கியம். இவ்வாறு அமைச்சர் செல்விராமஜெயம் பேசினார்.

                  தொடர்ந்து அந்த கிராமத்தில் குடிள்ள 16 குடும்பங்களுக்கு இலவச அரிசி திட்டத்தின் கீழ் தலா 20கிலோ அரிசியையும் வழங்கினார். அப்போது பொது மக்கள் அவரிடம் தற்போது எரிவாயு சிலிண்டர் பெறும் பயனாளி களுக்கு வழங்கப்படும் ஒரு லிட்டர் மண்ணெண்ணை நிறுத்தப்பட்டுவதாகவும், அதை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் முறையிட்டனர்.

                அமைச்சர் அவர்களிடம் இந்த பிரச்சனைகுறித்து முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். விழாவில் நல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலா ளர் ராஜேந்திரன், தொகுதி இணை செயலாளர் சுந்தர முர்த்தி, மாவட்ட கவுன்சிலர் முருகேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி, ஊராட்சி செயலாளர் காரைசெழியன், பேரவை செயலாளர் வாசுதேவன், மாணவர் அணி செயலாளர் தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 

Read more »

வியாழன், மார்ச் 25, 2010

மக்கள் மையம் துவக்கம்


திட்டக்குடி: 

                    பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூரில் சென்னையை தலைமையிடமாக கொண்ட உந்துனர் அறக்கட்டளையின் ஆதரவுடன் மக்கள் மையம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகள், மகளிர், இளைஞர்கள், பொதுமக்கள் நலன் கருதி மத்திய,  மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை, தோட்டக் கலை, மூலிகை சாகுபடிக்கு அரசு வழங்கும் மானியத்தொகை மற்றும் நுகர்வோர் உரிமை சட்டம், முழு சுகாதார திட்டங்கள், தகவல் அறியும் உரிமை சட்டம்  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தகவல் மையமாக செயல்பட்டு வருகிறது. எந்த நேரத்திலும் மக்கள் பயன் பெறும் வகையில் புகார் பெட்டியும், பாம்பு கடிக்கு மருந்தும் வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கூறப்பட் டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior