உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 06, 2012

கடலூரில் "தானே" புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச பால் விநியோகம்

தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை

            கடலூரில் "தானே" புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, எங்களது சங்கம் சார்பில் 2 ஆயிரம் லிட்டர் பால் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம். 6-1-2012 அன்று (இன்று) இரவு 10.30 மணியளவில், சென்னை திருமங்கலம் போலீஸ் நிலையம் அருகில் இருந்து நிவாரணப் பொருட்களுடன் கடலூர் நோக்கி புறப்படுகிறோம்.


              இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் மாநில தலைவர் சவுந்தர்முருகன், அம்பத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் வி. அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். கடலூரில் 7-1-2012 அன்று (நாளை) தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்துடன் இணைந்து, அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக பால் விநியோகம் செய்ய இருக்கிறோம்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


















Read more »

வியாழன், ஜனவரி 05, 2012

கடலூர் மாவட்டத்தில் தானே புயல் நிவாரண பணிகளை துரிதப்படுத்த கோரி தி.வேல்முருகன் உண்ணாவிரதம்


 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/f8ff4e6d-90ad-4734-93cf-ad1184c84672_S_secvpf.gif
 
நெய்வேலி:

            கடந்த 30-ந் தேதி வீசிய தானே புயலால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் நிவாரண பணிகளை விரைவுபடுத்த கோரியும், என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் வலியுறுத்தி உண்ணாவிரதம் நடை பெறும் என முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் அறிவித்திருந்தார்.

            அதன்படி நேற்று நெய்வேலி புதுநகர் தெர்மல் பஸ் நிலையம் அருகே வேல்முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் உண்ணாவிரதமிருந்தனர். இதில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் அன்பழகன், தேவராஜன் உள்பட ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.  கோரிக்கைகள் நிறைவேறும்வரை உண்ணா விரதத்தை தொடர்வது என வேல்முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior