உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 10, 2014

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடங்களையும் மாணவிகளே பிடித்து சாதனை- நெய்வேலி ஜவஹர் பள்ளி மாணவி எஸ்.ஆர்த்தி 1188 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதல் இடம்

பிளஸ்-2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களையும் மாணவிகளே பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

பிளஸ்-2 தேர்வில் 

நெய்வேலி ஜவஹர் பள்ளி மாணவி எஸ்.ஆர்த்தி 1200-க்கு 1188 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதல் இடத்தையும், 

கடலூர் சி.கே.பள்ளி மாணவி ஆர்.எழில்ஓவியா 1,187 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், 

நெய்வேலி ஜவஹர் பள்ளி மாணவி எஸ்.அனிதா 1186 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். 

மாவட்டத்தில் 2–வது இடம் 

 தமிழை முதன்மை பாடமாக எடுத்து படித்ததில் கடலூர் சி.கே.மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவி எழில்ஓவியா 1200 மதிப்பெண்களுக்கு 1187 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் 2–வது இடம் பிடித்தார்.

கடலூர் செம்மண்டலம் கவுன்சிலர் சுந்தரம் நகரை சேர்ந்த இவரது தந்தை பெயர் ரத்தினவேல். இவர் கடலூர் முதுநகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது தாய் எழிலரசி. இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

டாக்டராகி சேவை செய்வேன் 
 
மாவட்டத்தில் 2–வது இடம் கிடைத்தது பற்றி மாணவி எழில்ஓவியா கூறுகையில், பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எதிர்பார்தேன். ஆனால் மாவட்டத்தில் 2–வது இடம் கிடைத்துள்ளது. இருப்பினும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இந்த மதிப்பெண்கள் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த எனது பெற்றோர், கல்லூரி தாளாளர், ஆசிரியர்கள், சக மாணவ–மாணவிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
காலை 4 மணிக்கு எழுந்து படிப்பேன். பின்னர் இரவு 11 மணி வரை படிப்பேன். இருப்பினும் வகுப்பறையில் ஆசிரிர்கள் சொல்லி தருவதை கவனித்து படித்தாலே தேர்தல் அதிக மதிப்பெண்கள் பெறலாம். நான் டாக்டருக்கு படிக்க ஆசைப்படுகிறேன். அதிலும் இருதய நோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வேன் என்றார்.

பாராட்டு 

முன்னதாக 2–வது இடம் பிடித்த மாணவிக்கு பெற்றோர் இனிப்பு ஊட்டினர். சக மாணவிகள் தோளில் தூக்கி வைத்து மகிழ்ச்சி ஆராவரம் செய்தனர். 

இதேபோல் பள்ளி தாளாளர், ஆசிரியர்கள், மாணவர்களும் எழில்ஓவியாவை பாராட்டினர்.

மாணவி எழில்ஓவியா பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்:

தமிழ் – 196
ஆங்கிலம் – 192
கணிதம் – 200
உயிரியல் – 200
இயற்பியல் – 200
வேதியியல் – 199

Read more »

திங்கள், பிப்ரவரி 10, 2014

மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெறவுள்ள கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 129 விவசாயிகள் பங்கேற்பு

மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெறவுள்ள கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்க தமிழகத்திலிருந்து 1,978 விவசாயிகள் சிறப்பு ரயிலில் நாக்பூர் சென்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ஆத்மா திட்டத்தின் கீழ், பிப்ரவரி 10 முதல் 4 நாள் விவசாயிகள் வசந்த விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் நாட்டின் அனைத்துப் பகுதி விவசாயிகளும் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இதற்காக தமிழகத்தில் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களிலிருந்து 1,978 விவசாயிகள் 29 வேளாண் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு ரயிலில் நாக்பூர் சென்றனர். 

மதுரையிலிருந்து வியாழக்கிழமை இரவு சிறப்பு ரயில் புறப்பட்டது. இந்த பயணத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 129 விவசாயிகள் இடம் பெற்றுள்ளனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் 7 நெல் கொள்முதல் நிலையங்கள்

கடலூர் மாவட்டத்தில் மேலும், 7 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:    

கடலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 98  ஆயிரத்து 421 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லைக் கொள்முதல் செய்ய வசதியாக மாவட்டத்தில் ஏற்கெனவே, 143 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க கூட்டுறவுத் துறை மூலமாக மேலும் 7 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 

கடலூர் வட்டாரத்தில் 

கரைமேடு,
காட்டுமன்னார்கோவில் (வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம்)
சிதம்பரம் (வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம்),
விருத்தாசலம்,
பேரூர்,
பி.முட்லூர்,
இளங்காம்பூர்

ஆகிய இடங்களில் கடந்த 6-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன.

 இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நிர்ணயித்துள்ள விலையில் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை விற்பனை செய்து கொள்ளலாம் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior