உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 01, 2011

வடலூர் அருகே குறுகலான பாலத்தில் தொடரும் விபத்து


பக்கவாட்டுச் சுவர்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த கண்ணுத்தோப்பு பாலத்தில் விபத்துக்குள்ளாகி நிற்கும் லாரி.
 
நெய்வேலி:

            விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடலூர் அருகே உள்ள கண்ணுத்தோப்பு குறுகலான பாலத்தில் குறுகிய கால இடைவெளியில் விபத்துக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.  இப்பாலத்தில் நிகழும் விபத்துக்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இதுவரை எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.  

             விக்கிரவாண்டி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலைத் திட்டத்தின்கீழ் அகலப்படுத்தும் பணி 5 ஆண்டுகளாக நடைபெற்ற போதிலும், தஞ்சை - ஜெயங்கொண்டம் கூட்டுரோடு வரையே இச்சாலை இருவழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது.  ஜெயங்கொண்டம் கூட்டு ரோடு முதல் விக்கிரவாண்டி வரை இச்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனிடயே உள்ள பாலங்களும் இதுவரை அகலப்படுத்தப்படாமலும், சாலை தரம் உயர்த்தப்படாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சாலை மார்க்கத்தில் கனரக வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.  

          இந்த சாலை மார்க்கத்தில் வடலூர் அருகேவுள்ள கண்ணுத்தோப்பு மற்றும் மருவாய் ஆகிய இரு இடங்களிலும் மிகவும் குறுகலான பாலங்கள் உள்ளன. இந்தப் பாலங்களில் அடிக்கடி விபத்து நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது.  பாலத்தில் பக்கவாட்டுச் சுவர்களில் வாகனங்கள் மோதி உடைபடுவதும்,அவ்வாறு உடைபடும் பக்கவாட்டுச் சுவர்கள் மாதக்கணக்கில் சரி செய்யப்படாமல் அப்படியே இருக்கும் போது, சில வாகனங்கள் பாலத்தின் விளிம்பு தெரியாமல் தலைகுப்புற கவிழ்வதும் இந்த பாலங்களில் அடிக்கடி நிகழும் சம்பவங்களாகும்.  

             யாரேனும் வி.ஐ.பி.க்கள் இந்த வழியாக செல்லும்போது மட்டும் சாலையின் பக்கவாட்டுச் சுவர்கள் அசுர வேகத்தில் கட்டப்படும். அவ்வாறு அண்மையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்துக்கு வந்திருந்த போது, உடைபட்டிருந்த கண்ணுத்தோப்பு பாலத்தின் பக்கவாட்டச் சுவர் அவசர கதியில் கட்டப்பட்டது.  தற்போது அந்த பாலத்தில் சனிக்கிழமை ஒரு லாரி மோதி, பக்கவாட்டுச் சுவர் உடைந்து லாரி அபாயகரமான நிலையில் தொங்கிக் கொண்டி  ருக்கிறது.  

              இந்தக் காட்சி அவ்வழியே புதிதாக செல்பவர்களுக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அப்பகுதி மக்களோ இந்த பாலத்தில் ஒரு சாதனையே நிகழ்ந்துள்ளது. அதாவது இதுவரை சுமார் 100 விபத்துகள் நிகழ்ந்திருக்கலாம் என கூறி ஆதங்கப்படுகின்றனர்.  தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் இப்பாலத்தின் முக்கியத்துவம் அறிந்தும், விலை மதிப்பில்லா உயிர்களுடன் விளையாடுவதை தவிர்த்து போர்க்கால அடிப்படையில் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை மட்டுமல்ல அவ்வழியே பயணிக்கும் பயணிகளின் கோரிக்கையும்கூட. 

Read more »

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு

சிதம்பரம்:

             கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ரூ.10.33 கோடி மதிப்பீட்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

             காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் மற்றும் ஆயங்குடி கிராமங்களில் ரூ. 62 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு விழா முட்டம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று ஆரம்ப சுகாதார நிலைய கட்டங்களை திறந்து வைத்தார். 

அப்போது  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது:

           திமுக ஆட்சியில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் கட்டுவதற்கு 65 பணிகளுக்காக ரூ.33.61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.6.22 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன.÷மேலும் ரூ.40 லட்சம் செலவில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரூ.26.40 லட்சம் செலவில் பணியாளர்களுக்கான குடியிருப்புகள், ரூ.17.4 லட்சம் செலவில் 3 நோய் தடுப்பு சிகிச்சை பிரிவுகளும் திறக்கப்பட்டுள்ளன. 

              கடலூர், காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைகளில் ரூ.1.50 கோடி செலவிலும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ரூ.2.90 கோடி செலவிலும் புறநோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு கட்டுவதற்கு துணை முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார்.÷விழாவில் பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் கே.மனோகரன், செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் மீரா, காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குலோத்துங்கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

பிளஸ் 2 தேர்வுக்கான கால அட்டவணை

         தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ந் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பிளஸ் 2 தேர்வு நாளை தமிழ் முதல் தாளுடன் தொடங்குகிறது.
பிளஸ் 2 தேர்வுக்கான கால அட்டவணை விவரம் வருமாறு:
மார்ச் 2 ந் தேதி  தமிழ் முதல் நாள்

3 ந் தேதி  தமிழ் இரண்டாம் தாள்

7 ந் தேதி  ஆங்கிலம் முதல் தாள்

8 ந் தேதி  ஆங்கிலம் இரண்டாம் தாள்

11 ந் தேதி  இயற்பியல், பொருளாதாரம், உளவியல்

14 ந் தேதி  வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து

17 ந் தேதி  கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசியன் அன்ட் டயட்டிக்ஸ்

18 ந் தேதி  வணிகவியல், மனை அறிவியல், புவியியல்

21 ந் தேதி  உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்

23 ந் தேதி  தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழி பாடம்

25 ந் தேதி  அனைத்து தொழில்பாட தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior