உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 01, 2011

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு

சிதம்பரம்:

             கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ரூ.10.33 கோடி மதிப்பீட்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

             காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் மற்றும் ஆயங்குடி கிராமங்களில் ரூ. 62 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு விழா முட்டம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று ஆரம்ப சுகாதார நிலைய கட்டங்களை திறந்து வைத்தார். 

அப்போது  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது:

           திமுக ஆட்சியில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் கட்டுவதற்கு 65 பணிகளுக்காக ரூ.33.61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.6.22 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன.÷மேலும் ரூ.40 லட்சம் செலவில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரூ.26.40 லட்சம் செலவில் பணியாளர்களுக்கான குடியிருப்புகள், ரூ.17.4 லட்சம் செலவில் 3 நோய் தடுப்பு சிகிச்சை பிரிவுகளும் திறக்கப்பட்டுள்ளன. 

              கடலூர், காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைகளில் ரூ.1.50 கோடி செலவிலும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ரூ.2.90 கோடி செலவிலும் புறநோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு கட்டுவதற்கு துணை முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார்.÷விழாவில் பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் கே.மனோகரன், செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் மீரா, காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குலோத்துங்கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior