உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 10, 2009

ஸ்டிரைக் வாபஸ் என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர்

நெய்வேலி:

             நெய்வேலி என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்களுக்கான புதிய போனஸ் மற்றும் ஊக்க ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகத்திடம் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

               இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி இரவு 10 மணி முதல் என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் என்.எல்.சி. நிறுவன நிர்வாகத்தினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

            அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன், கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், என்.எல்.சி. நிறுவன சேர்மன் அன்சாரி, நிறுவன இயக்குனர்கள் சுரேந்தர்மோகன், பாபுராவ், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் பாட்டாளி தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் பேச்சுவார்த் தையில் கலந்து கொண்டனர்.

             சுமார் 3 மணி நேர பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி ரூ.51 ஆயிரம் போனஸ் மற்றும் இன்சென்டிவ் தொகையாகவும், வருகை பதிவின் அடிப்படையில் கூடுதல் ஊக்க தொகையாக ரூ.8160 வழங்கவும் என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புக்கொண்டது. மேலும் ஒப்பந்த தொழிலாளர் சீனியாரிட்டி பட்டியலை 2 மாதங்களில் வெளியிடவும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக தலா ரூ.500 வழங்கவும் நிர்வாக தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. 

              பேச்சுவார்த்தை உடன் பாட்டை தொடர்ந்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர். இன்று காலையிலும் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior