உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜூலை 18, 2010

குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வலியுறுத்தல்

நெய்வேலி:

              பிள்ளைகளிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராமநாதன் கேட்டுக்கொண்டார்.

             நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் அரங்கில் புத்தகக் கண்காட்சி ஜூலை 9 முதல் நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் 9-ம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு என்எல்சி மின்துறை இயக்குநர் (பொறுப்பு) மகிழ்செல்வன் தலைமை வகித்தார். முதன்மை விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராமநாதன் பங்கேற்று பேசினார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராமநாதன் பேசியதாவது:

             இன்று தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் பிள்ளைகளிடம் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. அமர்ந்த இடத்திலேயே காட்சிகளைக் கண்டு எல்லா செய்திகளையும் அறிந்துகொள்ளலாம் என்ற நிலையில், எதிர்காலத்தில் வாசிக்கும் தன்மை குறைந்து, எழுதுகின்ற பழக்கமும் குறைந்துவிடும் ஆபத்துள்ளது. எனவே பிள்ளைகளிடம் படிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் ஏற்படுத்தவேண்டும் என்றார் ராமநாதன்.

             இதையடுத்து தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை துணைவேந்தர் ராமநாதன் வழங்கினார்.

பரிசுபெற்றோர் விவரம்:

முதல் பரிசு: சென்னை கே.சரசுராம் (விடியும் நாள்பார்த்து), 2-ம் பரிசு: சென்னை சரோஜாசகாதேவன் (வண்ணங்கள் என்றால்), 3-ம் பரிசு: செய்யாறு தி.தா.நாராயணன் (மங்கா). 

ஆறுதல் பரிசு பெறுவோர்: 

               பழனி வரத.ராஜமாணிக்கம் (அஸ்மிதா), மன்னார்குடி ம.கணேசன் (கருக்கல்), திருநெல்வேலி கல்யாணிபாலு (கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கினால்), சேலம் இலா.வின்சென்ட் (விசாரணைக் கூண்டு), கோவை கு.துளசிதாஸ் (தியாகமும் பரிசும்). நிகழ்ச்சியின் போது வேலூரைச் சேர்ந்த எழுத்தாளர் த.வ.சிவசுப்ரமணியன் பாராட்டப்பட்டார். நெய்வேலி எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior