உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 18, 2010

செங்கல் உற்பத்தி செய்ய 35 சதவீத மானியத்துடன் கடன்: அமைச்சர் பன்னீர்செல்வம்

கடலூர்:

                  கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி அட்டை வழங்கும் விழா பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 41 ஊராட்சிகளுக்கு பி.முட்லூரில் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விழாவில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட 41 கிராமங்களைச் சேர்ந்த 10,429 நபர்களுக்கு தகுதி அட்டை வழங்கி பேசியது:-

            முதல்- அமைச்சர் கலைஞரின் வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 10,429 பேருக்குக்கு 5 ஆண்டுகளில் வீடு கட்டி வழங்கப்படும். கடலூர் மாவட்டத்தில் 1,66,327 பேருக்கு வீடுகள் கட்டுவதற்காக தகுதி அட்டை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் 26,119 பேருக்கு வீடு கட்டப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், கடந்த ஆட்சியில் ஏழை மக்களுக்கு இதுபோன்ற கான்கிரீட் வீடுகள் கட்டி வழங்கப்படவில்லை.

              கலைஞர் 5-வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ரூ. 75 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட் வீடு கட்டப்பட்டு வருகின்றன. இது தவிர, கலைஞர் ஏழை மக்களுக்காக இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி, இலவச எரிவாயுடன் கூடிய அடுப்பு, இலவச வீட்டு மனைப் பட்டா, திருமண நிதியுதவி, பள்ளி மாணவ- மாணவி களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் முட்டை வழங்குதல,¢ இலவச சைக்கிள் போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.


              தமிழகத்தில், ஏழை எளிய மக்கள் குடும்பம் ஒன்றிற்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான உதவிகள் கிடைக்கின்றன. எனவே, கலைஞர் மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு செங்கல் பற்றாக் குறையாக இருப்ப தால் கிராமப் புறங்களில் செங்கல் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும். செங்கல் உற்பத்திக்கு 35 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

                 பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் முத்துபெருமாள், குமராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மாமல்லன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வெங்கடாசலம் வரவேற்றார். பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரஹாசன் நன்றி கூறினார். ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சரவணகுமார், சிதம்பரம் கோட்டாட்சியர் ராமராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior