உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், ஜனவரி 10, 2011

கடலூரில்அரசு மருத்துவக்கல்லூரி அமைவதால் பொதுமக்களுக்கு அனைத்து சிறப்பு சிகிச்சைகளும் கிடைக்கும்: நலப்பணிகள் இணை இயக்குநர்

கடலூர்:
 
கடலூர் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் கமலக் கண்ணன் கூறியது:-

        கடலூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையும், எதிர்பார்ப்பும் நிறை வேறும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

          இந்த அறிவிப்பை கேட்டு கடலூர் மாவட்ட அனைத்து டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர் கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் அரசு தலைமை மருத்துவமனையை முன் னேற்றம் அடைய செய்ய தேசிய தர சான்று கிடைக்க நாங்கள் முழு முயற்சியுடன் பணியாற்றி வருகிறோம்.

           அந்த சான்று விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிறப்பு சிகிச்சைகள் தற்போது கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 53 டாக்டர்கள் உள்ளனர். 588 படுக்கைகள் உள்ளன. 
 
            நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் புறநோயாளிகளும், 550 உள் நோயாளிகளும் பயன்பெற்று வருகிறார்கள். இனி வரக்கூடிய காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும். கடலூருக்கு மருத்துவக் கல்லூரி கிடைப்பதன் மூலம் அனைத்து சிறப்பு சிகிச்சைகளும் மாவட்ட மக்களுக்கு கிடைக்கும். கடலூரில் முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக புதுச்சேரிக்கோ அல்லது சென்னைக்கோ செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது.
 
            அரசு மருத்துவக்கல்லூரி அமைவதற்கு வசதியாக கடலூர் அருகே உள்ள கேப்பர் மலையில் உள்ள காசநோய் சிகிச்சை பிரிவு அருகில் அரசுக்கு சொந்தமாக 103 ஏக்கர் நிலம் உள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை கடலூரில் அமைய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
 
               இதைத் தொடர்ந்து கடலூரில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரசு தலைமை மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கினார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior