உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
சனி, ஜனவரி 29, 2011

கடலூர் எம்.என்.டி.என். சார்பில் மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

கடலூர்:
             தமிழக அரசின் மாநில மகளிர் ஆணையம் மற்றும் கடலூர் எம்.என்.டி.என். சார்பில் மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் கடலூர் செம்மண்டலம் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. மாநில மகளிர் ஆணைய தலைவர் சற்குணபாண்டியன் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் வரவேற்றார்.

மாநில மகளிர் ஆணைய தலைவர் சற்குணபாண்டியன் பேசியது:-


                  பெண்களுக்கு என்னென்ன சட்ட பாதுகாப்புகள் உள்ளது என்பது பற்றியும், எதிர்கால வாழ்க்கையை பாதுகாப்பாக அமைத்து கொள்வது எப்படி? என்பது பற்றியும் கல்லூரி மாணவிகள் தெரிந்து கொள்வதற்காக மாநில மகளிர் ஆணையம் சார்பில் இதுபோன்ற சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகிறோம்.  பெற்றோர்களின் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கவேண்டும் என்று பெரியார் தலைமையில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை 1989-ம் ஆண்டில் சட்டமாக்கினார் முதல்- அமைச்சர் கருணாநிதி.

               முன்பு மகளிடம் பெற்றோர்கள் வெளியே பார்த்து போ என்று சொல்வார்கள். ஆனால் இன்று மகனிடம் பார்த்து போ என்று சொல்லுகிறார்கள். ஏன் என்றால் கை, காலை நீட்டிவிடாதே, ஈவ்டீசிங் சட்டத்தில் உள்ளே பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள். அந்த அளவிற்கு பெண்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் அரசாக முதல்வர் கருணாநிதி அரசு திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

                 அய்யப்பன் எம்.எல்.ஏ., கந்தசாமிநாயுடு கலை கல்லூரிக்கு தனது சொந்த செலவில் சைக்கிள் ஸ்டாண்டு, கேன்டீனுக்கு ஷெட்டும் அமைத்து தருவதாக அறிவித்து முதல்கட்டமாக 50 ஆயிரம் ரூபாயை மகளிர் ஆணைய தலைவர் சற்குண பாண்டியனிடம் வழங்கினார். அந்த நிதியை கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரனிடம் வழங்கினார். மாநில நுகர்வோர் ஆணைய உறுப்பினர் வாசுகிரமணன், நகர்மன்ற தலைவர் தங்கராசு, மாவட்ட சமூக நல அதிகாரி புவனேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் ஸ்ரீமதி, வாஞ்சிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். எம்.என்.டி.என். நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior