உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
திங்கள், பிப்ரவரி 21, 2011

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு கடலூரில் 25ம் தேதி துவங்குகிறது

கடலூர் : 

         அரசு பணியாளர் தேர்வாணைய தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 25ம் தேதி முதல் துவங்குகிறது.
 
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

         தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடலூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலம் வரும் 25ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. 

               இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அணுகி விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் இயங்கும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் உள்ள புத்தகங்களை படித்து தேர்விற்கு தயார் படித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.

1 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior