மறைந்து போனதும் மறந்து போனதும் - பகுதி- 1
அம்மி
தொல் பழங்காலத்திலிருந்து பயன்பாட்டில் இருந்து வரும் ஒரு கற்கருவி ஆகும். அம்மி என்பது கருங்கள்ளினால் செய்யப்பட்ட சமதளமாக அமைந்த ஒரு கருவி. அம்மி கல்லில் பொருளை இட்டு அரைக்க உருளை வடிவில் குழவி என்ற ஒரு கருங்கல் பயன்படும். ஒரு அம்மிகல்லின் எடை குழவி நீங்கலாக ஏறக்குறைய 40 கிலோ வரை வரை இருக்கும். முன்பெல்லாம் தமிழக கிராமங்களில் ஊருக்கு பொதுவான இடத்தில ஒரு அம்மியும், ஒரு ஆடுகல்லும் வைக்கப்படும், தேவையானவர்கள் அவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.
பயன்பாடு:
மருந்து மற்றும் சமையலில் பயன்படும் பொருட்களை அரைப்பதற்கு உதவுகிறது. சமையலுக்கு தேவையா மஞ்சள், சீரகம் உள்ளிட்ட பொருட்களை அரைக்கலாம். இந்து சமயத் திருமணச் சடங்குளில் அம்மி மிதித்தல் அருந்ததி பார்த்தல் என்ற சடங்கு உள்ளது.
அம்மிப் பொளிதல்
அம்மியும் குழவியும் பயன்பட பயன்பட மழு மழுப்பாகி போகும். இதனால் பொருட்கள் சரியாக அரைபடாது. ஆகையால் கல் தச்சர் கொண்டு உளியால் பொள்ளி நுண்ணிய சிறு சிறு குழிகள் உருவாக்கலாம். இதற்கு அம்மி பொலிதல் என்று பெயர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் எசனை கிராமத்தில் வடிவமைக்கப்பட்ட அம்மி வெளிநாடுகளில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இன்றைய நிலை
அறிவியல் வளர்ச்சியால் மிக்ஸ்சி போன்ற மின் சாதனப் பொருட்களின் வருகையால் அம்மி என்ற பொருள் மறந்து அல்லது மறைந்து போய்விட்டது. கிராமங்களில் கூட அம்மியை பார்ப்பது அரிதாகி விட்டது.
வருங்கால சந்தியினர் திருமணங்களில் மட்டுமே அம்மியை பார்க்கும் அவல நிலை ஏற்பட்டு விட்டது. இருந்த போதிலும் தொடர் மின் வெட்டு காரணமாக மீண்டும் அம்மியை பயன்படுத்தும் நிலையும் உருவாகி வருகிறது.
அம்மியை பற்றி உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் தெரிவியுங்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக