கடலூர்:
ஏப்ரல் 1-ம் தேதி முதல் வாக்காளர் சீட்டு வழங்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை ஆட்சியர் கூறியது:
அனைத்து வாக்குச் சாவடிகளுக்கு முன்பும் சிறிய பந்தல் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. வெயிலில் மக்கள் களைத்துப் போகாமல் இருக்க ஓரல் டிஹைட்ரேஷன் பவுடர் கலக்கிக் கொடுப்பதற்கு வசதியாக, அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், ஓரல் டிஹைட்ரேஷன் பவுடர் பொட்டலங்கள் வழங்கப்படும். வாக்குச் சாவடிகளில் உள்ள கேமரா, மின்இணைப்பு போன்றவற்றில் ஏற்படும் பழுதுகளை நீக்க ஊராட்சி ஒன்றிய வாரிய தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் அலுவலர் 17 ஏ பதிவுப் புத்தகத்தை பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்ய 49ஓ வசதி இருக்கும். வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் சீட்டு வைத்து இருப்போர் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்காளர் சீட்டு 1-4-2011 முதல் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை பயிற்சிக்கு வரும் தேர்தல் பணியாளர்களைத் தெரிந்து கொண்டு, 28-3-2011 அன்று, கணினிக் குலுக்கல் மூலம் தேர்தல் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். வாக்குச் சாவடிகளில் 1000க்கு மேல் வாக்காளர்கள் கூடாது என்பதற்காக, தேர்தல் ஆணையத்திடம் கூடுதலாக 50 வாக்குச்சாவடிகள் கேட்டுப் பெற்றுள்ளோம் என்றார் ஆட்சியர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக