உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 29, 2011

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு துவங்கியது 33,669 பேர் பங்கேற்பு

கடலூர் :

             நேற்று துவங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 669 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று (28ம் தேதி) முதல் துவங்கி வரும் ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கிறது.

           கடலூர் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 669 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். அதன்படி கடலூர் கல்வி மாவட்டத்தில் 63 மையங்களில் 9,829 மாணவர்களும், 10 ஆயிரத்து 838 மாணவிகளும் மொத்தம் 20 ஆயிரத்து 667 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதில் 1,009 மாணவிகள் மாணவர்களை விட கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர்.

             விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 34 மையங்களில் 5,654 மாணவர்களும், 5,058 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 2,290 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுகின்றனர்.கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்ட அதிகாரிகள் தலைமையிலும், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் தலைமையிலும் தலா மூன்று பேர் கொண்ட 20 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளை கண்காணித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior