உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மார்ச் 27, 2011

பிச்சாவரத்தில் கோவை வனக்கல்லூரி மாணவர்கள் ஆய்வு

கிள்ளை : 

              சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வனப்பகுதியில் கோவை வனக்கல்லூரி மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் உள்ள சதுப்பு நிலத்தாவரங்கள் கடலுக்கும், ஆற்றுக்கும் இடையில் இயற்கை அரண்களாக உள்ளது. இப்பகுதியில் உள்ள வனங்களை வனத்துறை மூலம் பாதுகாக்கப்பட்டு வருவதுடன் சுற்றுலாத் தலமாக நிறுவப்பட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். கோவை வனக்கல்லூரி மாணவர்கள் 60 பேர் மற்றும் சாத்தனூர் டேம் வனத்துறை ஊழியர்கள் படகில் சென்று பிச்சாவரம் வனப்பகுதிகளை சுற்றிப் பார்த்து அங்குள்ள தாவரங்களை ஆய்வு செய்து கணக்கெடுத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior