உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், ஏப்ரல் 27, 2011

குறைந்த கட்டணத்தில்ஐ.ஆர்சி.டி.சி. சார்பில் கோடைச் சுற்றுலா


               இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்சி.டி.சி.) சார்பில் ஆண்டு தோறும் கோடை காலங்களில் கோடை வாசஸ் தலங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது.

             ஏழை, நடுத்தர மக்கள் சுற்றுலா செல்ல வசதியாக குறைந்த கட்டணத்தில் ரெயில் டிக்கெட், சுற்றுலா தலங்களுக்கு செல்ல வாகன வசதி, தங்கும் இடம் போன்றவற்றை உறுதி செய்து முன்கூட்டியே சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கிறது. கோடை விடுமுறையில் குடும்பமாகவும், தனித்தனி யாகவும் சுற்றுலா செல்ல விரிவான ஏற்பாடுகளை ஐ.ஆர்.சி.டி.சி. செய்துள்ளது.

           சென்னை- ஊட்டி, முது மலைக்கு 3 பகல் 4 இரவு கள் கொண்ட சுற்றுலா திட்டத்திற்கு பெரியவர்களுக்கு ரூ. 4850, சிறிய வர்களுக்கு 1850 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவை வரை ரெயில் மூலமாகவும், பின்னர் அங்கிருந்து கார் மூலம் சுற்றுலா பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

              சென்னையில் இருந்து கொடைக்கானல், பொள்ளாச்சி, வால்பாறை, சென்னை-தேக்கடி, தேனி, சென்னை-மைசூர், கூர்க், சென்னை- மூணாறு- தேக்கடி, சென்னை- ஆலப்புழா, சென்னை- கன்னியாகுமரி- ராமேஸ் வரம்-மதுரை, சென்னை- கொச்சி- மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்து செல் கிறார்கள். இது தவிர காசி, அலகா பாத், ஹரித்துவார், ரிஷி கேஷ், டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட வட மாநில புனித தலங்களுக்கு செல்லும் சுற்றுலா திட்டமும் உள்ளது.

                  15 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலா பயணத்திற்கு ஒருவருக்கு ரூ. 7700 கட்டணம். தங்கு மிடம், உணவு, ரெயில் கட்டணம் சேர்த்து நிர்ண யிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. சேவை மையம் செயல்படுகிறது. அங்கு நேரிலோ அல்லது போனிலோ தொடர்பு கொண்டு பயணம் தொடர்பான விரிவான தகவல்களை பெறலாம். மேலும் 90031-40681 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior