உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், ஏப்ரல் 27, 2011

சிதம்பரத்தில் செயற்கை குற்றால அருவி

சிதம்பரம்:

            கோடை காலத்தில் குழந்தைகள் கொண்டாடி மகிழ சிதம்பரத்தில் செயற்கை குற்றால அருவி, கொலம்பஸ் ராட்டினம் ஆகியவற்றை தனியார் நிறுவனம் அமைத்துள்ளது.

             சிதம்பரம் மேல வீதியில் உள்ளது கஸ்தூரிபாய் கம்பெனி. இந் நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாத கலாட்டா என்ற தலைப்பில் புதுமையாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு கோடையை குதுகாலத்துடன் கொண்டாடி மகிழ குற்றால அருவியும், கொலம்பஸ் ராட்டினத்தையும் அமைத்துள்ளது. 

           இந்த குற்றால அருவியில் 15 வயதுக்குள்பட்ட குழந்தைகள் குளிக்க அனுமதியளிக்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளையும் வழங்குகிறது.கோடையில் குளுமையாக இருக்க வாடிக்கையாளர்களுக்கு ஐஸ் கிரீம், தர்ப்பூசணி ஆகியவற்றை இந்நிறுவனம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior