சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை நானோ அறிவியல் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டு கால பட்ட மேற்படிப்பான இதில், உயிரியல் சூழல் சார்ந்த நானோ தொழில்நுட்பம், நானோ பொருள்கள் ஒருங்கிணைப்பு, நவீன மருந்து தயாரிப்பு முறைகள் உள்ளிட்டவை கற்பிக்கப்படும். 4 பருவங்கள் கொண்ட இந்தப் படிப்பில், வகுப்பறைக் கல்வியைத் தவிர தொழில் துறைக்கு தேவைப்படும் அறிவியல் படைப்புகள் உருவாக்கம், ஆய்வு நெறிமுறைகள், மென்திறன் ,திட்டப்பணிகள் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கே.கணேஷ் தெரிவித்தார்.
இந்தப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திலும், நந்தனத்தில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு:
044-2266 2500-03.
http://www.velsuniv.ac.in/
0 கருத்துகள்:
கருத்துரையிடுக