திட்டக்குடி:
திட்டக்குடி அருகே சன்னியாசி நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், விவசாயி. இவரது மகன் கார்த்திக் (வயது 3). இவன் திட்டக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூ.கே. ஜி. படித்து வந்தான்.
நேற்று பள்ளி முடிந்ததும் கார்த்திக் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் கார்த்திக் தவறி விழுந்தான். மூச்சு திணறி தத்தளித்த கார்த்திக்கை பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கார்த்திக்கின் தாய் ஜோதி திட்டக்குடி போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி வாளகத்தில் குடிநீர் தொட்டியில் மாணவன் தவளி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக