உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 22, 2011

உயிர் புள்ளியியல், உணவு பதனிடும் தொழில்நுட்ப படிப்புகள் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் அறிமுகம்


     தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், புதிய முதுகலை பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.


இது குறித்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக துணைவேந்தர் பிரபாகரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு 

          தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக் கழகம் மூலம் உயிர் புள்ளியியல் (எம்.வி.எஸ்சி.,), உணவு பதனிடும் தொழில்நுட்பம் (எம்.டெக்.,) ஆகிய பாடங்களில் முதுகலை பட்டப் படிப்பும், சுற்றுப்புறச் சூழல் மாறுபாடும், மீன் வளமும் என்ற முதுகலை பட்டயப் படிப்பும் (எம்.பில்.,) இவ்வாண்டு (2011 - 2012) துவங்கப்பட்டுள்ளன.

              இந்தியாவில் முதன் முறையாக தனியார் கால்நடை மருத்துவர்கள் மற்றும் தொழில் முனைய விரும்பும் அறிவியல் பட்டதாரிகள் பயன் பெறும் வகையில், தொலைக்கல்வி மற்றும் கணினி தொடர்பு மூலம் முதுகலை பட்டயப் படிப்புகளும் துவங்கப்பட்டுள்ளன. கால்நடை கண் மருத்துவம், அவசர மற்றும் தீவிர சிகிச்சை, வர்த்தக ரீதியான கோழிப் பண்ணை மேலாண்மை, தீவன உற்பத்தி தொழில்நுட்பம், பாரம்பரிய சிகிச்சை மற்றும் மாறுபட்ட கோழியின வளர்ப்பு (காடை, வான்கோழி, ஈமு கோழி வளர்ப்பு) ஆகிய பாடத் தலைப்புகளில் முதுகலை பட்டயப் படிப்புகள் துவங்கப்படுகின்றன. 

மேலும், விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி, பல்கலையின் 


         இணையதளம் மூலம் பார்த்து, பிரதி எடுத்து பூர்த்தி செய்து, ஆக., 8 க்குள்ளாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior