
கடலூர்:
கடலூரில் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கடலூர் கூத்தப்பாக்கம் கான்வென்ட் பள்ளி அருகே சாலையை அகலப்படுத்த நேற்று இரவு பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை தோண்டும் பணி நடைபெற்றது.
இதில் எதிர்பாராதவிதமாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் கடலூர் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். குடிநீர் சப்ளையை துண்டித்து குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். இன்று காலையிலும் பணி தொடர்ந்தது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கடலூரில் பல வார்டுகளில் குடிதண்ணீர் சப்ளை செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அவதியடைந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக